ஆண்டுதோறும் ரமழான் 27ஆம் நாள் இரவில் காயல்பட்டினம் இளைஞர் ஐக்கிய முன்னி (YUF) சார்பில் ராத்திபத்துல் காதிரிய்யா திக்ர் மஜ்லிஸ் நடத்தப்படுவது வழமை.
நடப்பாண்டு திக்ர் மஜ்லிஸ் 28.08.2011 அன்று அதிகாலை 01.30 மணியளவில் காயல்பட்டினம் முத்துவாப்பா தைக்கா தெரு தென்முனையில், இளைஞர் ஐக்கிய முன்னணி அருகில், மவ்லவீ எஸ்.டி.செய்யித் இஸ்மாஈல் மஹ்ழரீ தலைமையிலும், காயல்பட்டினம் குருவித்துறைப் பள்ளியின் முன்னாள் இமாம் ஹாஜி டி.எம்.கே.சுல்தான் அப்துல் காதிர் முன்னிலையிலும் நடைபெற்றது.
ஹாமிதிய்யா திருக்குர்ஆன் ஹிஃப்ழு மத்ரஸா மாணவர் எம்.ஓ.முஹம்மத் சுலைமான் கிராஅத் ஓதி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார்.
தொடர்ந்து மார்க்க சொற்பொழிவு துவங்கியது. ஹாமிதிய்யா மாணவர் என்.ஏ.ஸாலிஹ் கிராஅத் ஓத, இளைஞர் ஐக்கிய முன்னணி அலுவலக பொறுப்பாளர் ஹாஜி எம்.டபிள்யு.ஹாமித் ரி்ஃபாய் வரவேற்புரையாற்ற, கேரள மாநிலம் கோழிக்கோடு மத்ரஸா ஆரிஃபிய்யா அன்வாரிய்யா ஆசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் நோனா காஜா முஹ்யித்தீன் மஸ்லஹீ சிறப்புரையாற்றினார்.
அதனைத் தொடர்ந்து, இந்த ரமழான் மாதத்தில் குருவித்துறைப் பள்ளிவாசலில் தராவீஹ் தொழுகையை பொறுப்பேற்று வழிநடத்தும் ஹாஃபிழ் எம்.எஸ்.ஹஸன் ஷாக்கிர், அண்மையில், அஹ்மத் நெய்னார் பள்ளியில் ஒரே நிலைத்தொழுகையில் திருக்குர்ஆன் முழுவதையும் ஓதி முடித்த ஹாஃபிழ் ஜே.எம்.ஷெய்கு அப்துல் காதிர் ஆகிய, ஹாமிதிய்யாவின் இரு மாணவர்களுக்கும் பணமுடிப்பு வழங்கப்பட்டது. ஹாஜி எஸ்.எம்.எஸ்.நூஹ், ஹாஜி டி.எம்.கே.சுல்தான் அப்துல் காதிர் ஆகியோர் அவற்றை வழங்கினர்.
நிறைவாக, இளைஞர் ஐக்கிய முன்னணி செயலர் ஹாஜி எஸ்.ஏ.கே.முஹ்யித்தீன் அப்துல் காதிர் நன்றி கூற, குருவித்துறைப் பள்ளி இமாம் மவ்லவீ ஹாஃபிழ் எம்.எல்.முஹம்மத் அலீ துஆவுடன் நிகழ்ச்சிகள் யாவும் நிறைவுற்றன.
இந்நிகழ்ச்சியில் காயல்பட்டினம் குருவித்துறைப்பள்ளி மஹல்லாவைச் சார்ந்த பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
களத்தொகுப்பு மற்றும் படங்கள்:
M.W.ஹாமித் ரிஃபாய்,
ஹாஃபிழ் S.D.முஹம்மத் இப்றாஹீம்,
மற்றும்
செய்யித் இப்றாஹீம்,
காயல்பட்டினம். |