ரமழான் துவக்கம், நோன்புப் பெருநாள், ஹஜ் பெருநாள் கொண்டாட்டங்களுக்கான தேதிகளை பிறை பார்க்கப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டு முடிவு செய்திடும் பொருட்டு காயல்பட்டினம் மஹ்ழரா அரபிக்கல்லூரியில் ஓராண்டும், ஜாவியா அரபிக்கல்லூரியில் ஓராண்டும் நகரின் மார்க்க அறிஞர்கள் (உலமாக்கள்) ஒன்றுகூடி, கலந்தாலோசனை செய்து முடிவுகளை அறிவிப்பது வழமை.
அந்த அடிப்படையில் இவ்வாண்டு நோன்புப் பெருநாள் தினத்தை முடிவு செய்திடும் பொருட்டு காயல்பட்டினம் ஜாவியா அரபிக்கல்லூரியில் இன்று (30.08.2011 செவ்வாய் கிழமை ) மக்ரிப் தொழுகைக்குபின், நகர அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் உலமாக்களின் (மார்க்க அறிஞர்களின்) கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
தகவல்:
அல்ஹாஃபிழ் A.W. அப்துல் காதர் ஆலிம் புஹாரி |