நாளை நோன்புப் பெருநாள் கொண்டாடப்படவுள்ளதையடுத்து இன்றிரவு காயல்பட்டினம் நகரின் பெரும்பாலான பள்ளிவாசல்களில் திக்ர் மஜ்லிஸ் நடைபெற்றது.
அதனைத்தொடர்ந்து, நகரின் அனைத்துப் பகுதிகளைச் சார்ந்த இளைஞர்கள் தத்தம் இல்லங்களுக்குத் தேவையான இறைச்சி உள்ளிட்ட பெருநாள் உணவுக்கான மூலப்பொருட்களையும், புத்தாடைகளையும் வாங்குவதற்காக காயல்பட்டினம் பிரதான வீதி மற்றும் எல்.கே.லெப்பைத்தம்பி சாலையில் உள்ள கடைகளை மொய்க்கத் துவங்கியுள்ளனர்.
பெருநாள் இரவு காட்சிகள் பின்வருமாறு:-
கூலக்கடை பஜார் அல்வத்தானிய்யா ப்ராய்லர்ஸ் கோழிக்கறி விற்பனை...
ஆடு, மாடு இறைச்சி விற்பனை...
கலாமீஸ் குலோதிங் ஆயத்த ஆடைகள் விற்பனை...
பிரதான வீதி சிங்கர் ஸ்டோரில் துணிமணிகள் விற்பனை...
பிரதான வீதி ஸ்டார் டெக்ஸ்டைல்ஸ் ஆயத்த ஆடைகள் விற்பனை...
டேக் அன் வாக் தொப்பி மற்றும் செருப்பு விற்பனை...
சாலையோரக் கடையில் தொப்பி விற்பனை...
ஸீ-கஸ்டம்ஸ் சாலை எம்.எச்.எம். ஸ்டோரில் தொப்பி விற்பனை...
களத்தொகுப்பு மற்றும் படங்கள்:
M.W.ஹாமித் ரிஃபாய்,
காயல்பட்டினம். |