ஒரே நிலைத்தொழுகையில், திருக்குர்ஆன் முழுவதையும் ஓதி நிறைவு செய்யும் நிகழ்ச்சி காயல்பட்டினம் அஹ்மத் நெய்னார் பள்ளியில் 25.08.2011 அன்று 08.10 மணிக்கு நடைபெற்றது.
காயல்பட்டினம் தீவுத்தெருவைச் சார்ந்த, ‘முத்துச்சுடர்‘ மர்ஹூம் எஸ்.கே.எம்.நூகுத்தம்பி ஆலிம் ஜுமானீ அவர்களின் பேரனும், ‘முத்துச்சுடர்‘ ஹாஜி என்.டி.ஜமால் முஹம்மத் என்பவரின் மகனும், காயல்பட்டினம் ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் மாணவருமான ஹாஃபிழ் ஜே.எம்.ஷெய்க் அப்துல் காதிர் இத்தொழுகையை வழிநடத்தினார். இரவு 08.10 மணிக்குத் துவங்கிய இத்தொழுகை அதிகாலை 03.20 மணியளவில் நிறைவுற்றது.
பின்னர். தராவீஹ் தொழுகையின் இதர ரக்அத்துகள் பிற ஹாஃபிழ்களால் வழிநடத்தப்பட்டு, வித்ர் தொழுகையுடன் நிறைவு செய்யப்பட்டது.
தொழுகை நிறைவுற்றதும், பள்ளியின் முத்தவல்லி ஹாஜி எஸ்.கே.இசட்.ஜெய்னுல் ஆபிதீன், தொழுகையை வழிநடத்திய ஹாஃபிழுக்கு சால்வை அணிவித்து கண்ணியப்படுத்தினார். அவரைத் தொடர்ந்து, காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவரும், வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் நிறுவனர் தலைவருமான ஹாஜி வாவு செய்யித் அப்துர்ரஹ்மான், காயல்பட்டினம் மத்ரஸத்துல் ஹாமிதிய்யா முதல்வர் ஹாஜி நஹ்வீ ஐ.எல்.நூருல் ஹக் நுஸ்கீ உள்ளிட்டோர் ஹாஃபிழுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
பின்னர், ஹாமிதிய்யா பைத் பிரிவு மாணவர்கள், ஹாஃபிழை அவரது இல்லம் வரை பைத் முழங்க நகர்வலமாக அழைத்துச் சென்றனர்.
இந்த ஓரே நிலைத் தொழுகைக்கான ஏற்பாடுகளை, காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவரும், வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் நிறுவனர் தலைவருமான ஹாஜி வாவு எஸ்.செய்யித் அப்துர்ரஹ்மான் ஒருங்கிணைப்பில், அஹ்மத் நெய்னார் பள்ளி நிர்வாகம் செய்திருந்தது.
களத்தொகுப்பு:
M.W.ஹாமித் ரிஃபாய்,
காயல்பட்டினம். |