தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காயல்பட்டினம் நகர கிளை சார்பில், நோன்புப் பெருநாளை முன்னிட்டு 28.08.2011 அன்று, ஏழைகளுக்கு ஃபித்ரா உணவுப் பொருட்கள் உதவி வழங்கப்பட்டது.
அரிசி, பருப்பு, இறைச்சி, எண்ணெய், நெய், சேமியா, மசாலா பொருட்கள் உள்ளிட்ட சமையல் பொருட்களை உள்ளடக்கி, ரூபாய் 180 மதிப்பிலான இந்த உணவுப் பொருள் பொதிகளை, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நகர கிளை தலைவர் ஷம்சுத்தீன் வழங்கினார். அவரைத் தொடர்ந்து நகர நிர்வாகிகளும் உதவிப் பொருட்களை வழங்கினர்.
காயல்பட்டினம் நகரின் அனைத்துப் பகுதிகளைச் சார்ந்த சுமார் 200 ஏழை குடும்பத்தினர் அவற்றைப் பெற்றுக்கொண்டனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நகர அங்கத்தினரான சட்னி யாஸீன், எலக்ட்ரீஷியன் ஸலாஹுத்தீன், அஹ்மத், காஜா மற்றும் பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகி லக்கி மக்கீ ஒருங்கிணைப்பில் நகர நிர்வாகிகள் செய்திருந்தனர்.
படங்கள்:
வீனஸ் ஸ்டூடியோ,
எல்.கே.லெப்பைத்தம்பி சாலை, காயல்பட்டினம். |