காயல்பட்டினம் இத்திஹாதுல் இஹ்வானுள் முஸ்லிமீன் (ஐ.ஐ.எம்.) ஏற்பாட்டில் - நோன்பு
பெருநாளை முன்னிட்டு - தேவையுடையோருக்கு
பித்ரா பொருட்கள் விநியோகிக்கப்படுவது வழமை.
இவ்வாண்டும் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இப்பணிகள் இன்று மதியம் - ஐ.ஐ.எம். அமைப்பின் மூத்த நிர்வாகிகள் முன்னிலையில் துவக்கிவைக்கப்பட்டது.
இவ்வாண்டு - காயல்பட்டினம் மற்றும் சுற்றுப்புற வட்டாரங்களில் உள்ள சுமார் 1400 பேருக்கு ஃபித்ரா பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன. பொட்டலங்கள் - பகுதிவாரியாக தேர்வுசெய்யப்பட்டுள்ள ஆர்வலர்கள் உதவிக்கொண்டு, இல்லங்களில் நேரடியாக விநியோகிக்கப்பட்டது.
ஒவ்வொரு பொட்டலத்திலும் - அரிசி, சீனி, மைதா, எண்ணெய், சேமியா, ஜவ்வரிசி, தேங்காய், மசாலா தூள், கோழிக்கறி ஆகிய ஒன்பது பொருட்கள் அடங்கும்.
தகவல்:
எம்.ஐ. மஹ்மூத் சுலைமான்
|