இஸ்லாமிய மாதப்பிறப்பினை அறிவியல் பூர்வமாக கணக்கிட்டு கொள்ளலாம் என்ற அடிப்படையில்
இயங்கும் அமைப்பு இந்திய ஹிஜ்ரி குழு. அதன் சார்பாக - நோன்பு பெருநாள் சம்பந்தமாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கை வருமாறு:-
கேரளா மாநிலம் கோழிக்கோடு மற்றும் நெல்லை ஏர்வாடியை தலைமையிடங்களாகக் கொண்டு செயல்பட்டுவரும் இந்திய ஹிஜ்ரி கமிட்டியினர் கடந்த 40 வருடங்களாக பிறைகளை கண்காணித்து வருகின்றனர். கடந்த 16 வருடங்களாக பிறைகளை அடிப்படையாகக் கொண்டு சந்திர காலண்டரை அறிமுகம் செய்து நடைமுறைபடுத்தி வருகின்றனர்.
மேலும் இவ்வாண்டு 1432 ரமழான் மாதத்தின் புறக்கண்ணால் பார்க்க இயலும் உர்ஜூஃனில் கதீம் (36:39)என்ற பிறையின் இறுதி படித்தரத்தை ரமழான் 29வது தினமான 28-08-2011 இன்று ஞாயிற்றுக் கிழமை தென்படும் என்றும்,
29-08-2011 அன்று திங்கள் கிழமை அமாவாசையாகும் என்றும்,
30-08-2011 அன்று செவ்வாய்க்கிழமை (ஷவ்வால் 1) நோன்புப் பெருநாள் என்றும் பிரசுரங்கள் வாயிலாக அறிவித்திருந்தனர்.
இந்திய ஹிஜ்ரி கமிட்டியினர் அறிவித்தபடி உர்ஜூஃனில் கதீம் என்ற பிறையின் இறுதி படித்தரத்தை நகரின் ஹிஜ்ரி கமிட்டியினரோடு பொதுமக்களும் இன்று 28-08-2011 ஞாயிற்றுக்கிழமை ஃபஜ்ரு தொழுகைக்குப்பின்னர் கடற்கரைக்கு சென்று புறக்கண்ணால் பார்வையிட்டனர்.
இப்படிக்கு,
நிர்வாகி, இந்திய ஹிஜ்ரி கமிட்டி.
இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
இந்திய ஹிஜ்ரி கமிட்டி
|