காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் (KAYALPATNAM UNITED FORUM) அமைப்பின் ஏற்பாட்டில் ஹாங்காங் வாழ் காயலர்களுக்கான ஸஹர் சாப்பாடு நிகழ்ச்சி நேற்றிரவு (ஆகஸ்ட் 27 - 28) நடைபெற்றது.
மிட்டில்டன் சாலை சிந்தி பூங்காவில் நடந்த இந்நிகழ்ச்சியில் ஏராளமான காயலர் கலந்துக்கொண்டனர்.
[இச்செய்தி தொகுப்பின் பாகம் 1 இல் - காயலர்கள் ஒன்றிணைந்து உணவு தயாரித்த காட்சிகளை காண இங்கு அழுத்தவும்.]
இன்று அதிகாலை 3:00 மணி அளவில் ஹாங்காங் வாழ் காயலர்கள் அணி,அணியாக பூங்காவில் கூடத்துவங்கினர். கலந்துக்கொண்ட ஏறத்தாழ 90 காயலர்களுக்கு காயல்பட்டின முறையில் தயார்செய்யப்பட்டிருந்த வெறுஞ்சோறு, கலரிக்கறி, கத்திரிக்காய் மாங்காய் மற்றும் புளியாணம் ஆகியவை
பரிமாறப்பட்டது.
மேலே உள்ள குழும படத்தினை (குரூப் போட்டோ) பெரிதாக காண இங்கு அழுத்தவும்
அனைவராலும் பாராட்டப்பட்ட இந்நிகழ்ச்சி, வரும் ஆண்டுகளிலும் தொடர்ந்து நடைபெற கலந்துக்கொண்டோரால் விருப்பம் தெரிவிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியின் நிறைவில் - வரும் பெருநாள் அன்று மாலை 7 மணி அளவில், மிட்டில்டன் சாலை சிந்தி பூங்காவில் பெருநாள் ஒன்றுக்கூடல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதில் ஹாங்காங், சீனா மற்றும் மக்காவ் வாழ் காயலர்கள் அனைவரும் தவறாது கலந்துக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
தகவல்:
காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் (KUF)
|