இந்தியாவின் பொருளாதார தலைநகரமான மும்பையில் காயல் நல மன்றத்தினை துவக்க ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பு வருமாறு:-
அஸ்ஸலாமு அலைக்கும் ரஹ்மாதுல்லாஹி வ பரகாதுஹு ,
மும்பை வாழ் காயல் நகர மக்களுக்கு ஓர் அன்பான அழைப்பு................
அன்பு சகோதரர்களே................
சென்ற இப்தார் நிகழ்ச்சியில் அறிவிக்கப்பட்ட காயல் நகர் மன்றம் அமைப்பது செய்தியின் தொடர்ச்சியாக இந்த அழைப்பை தங்கள் முன் கோரிக்கையாக சமர்ப்பிக்கின்றோம்........ தூர தேசங்களில் வாழும் எண்ணிக்கைக்கு குறைவான நம் சகோதரர்கள் கூட ஒன்றாக இணைந்து நமது நகருக்கு எல்லா வழிகளிலும் தங்களது பங்களிப்பை செய்து வருகின்ற இவ்வேளையில், எங்கள் பார்வைக்கு எட்டிய வரையில் நாம் வாழும் மும்பையில் எந்த காயல் நல அமைப்புகளும் செயல்படுவதாக தெரியவில்லை அல்லது இதுவரை நாங்கள் அறிந்து இருக்கவில்லை...............
ஏற்கனவே மும்பையில் காயல் நல மன்றம் இருப்பின் எங்கள் எல்லோரையும் ஓன்று சேருங்கள். நாங்கள் தங்களுடன் இணைந்து செயல் பட தயாராக உள்ளோம். இல்லை எனில் இந்த மடலை அழைப்பாக ஏற்று புதிய மன்றம் அமைக்க ஆதரவு தாருங்கள்...............
எங்களுடைய இலக்கு....இந்த நோன்பு பெருநாளை முன்னிட்டு மும்பை வாழ் காயல் நகர வாசிகள் அனைவரையும் ஒன்றாக இணைப்பது......................பல்வேறு நல திட்டங்களை அறிவிப்பது...........அதனை நிறைவேற்றும் தொடர்ச்சியான செயல்பாடுகளில் ஈடுபடுவது..............இனியும் செயல்படாமல் தாமதித்தால் காலம் நம்மை மன்னிக்காது என்ற பெரும் துயரத்தின் விளைவே தான் இந்த அழைப்பு மடல்.............
ஒற்றுமை ஒன்றுதான் எங்கள் குறிக்கோள்.........செயல்படுவதுதான் எங்கள் திட்டம்................செயல்பட அழையுங்கள்..................அல்லது சேர்ந்து செயல்படுங்கள்..................
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி.
பெயர்: முஸ்தாக் அஹ்மத்
அலைபேசி எண் : 8652212001
பெயர்: A.W.அப்துல் காதர்
அலைபேசி எண் :9967383811
குறிப்பு:
தயவு செய்து தங்களின் பெயரையும் தொலைபேசி எண்னையும் 30.08.2011ம் தேதிக்குள் பதிவு
செய்துக்கொள்ளுங்கள்.
1. Re:மும்பையில் காயல் நல மன்றம... posted byMUHAMED SHUAIB (KAYALPATNAM)[28 August 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 7377
மும்பை போன்ற பெரிய நகரங்களில் இன்னும் "காயல் நல மன்றம்"இல்லாதிருப்பதே மிக ஆச்சரியமானது. அங்கு இதுவரை நமதூருக்கு என்று ஒரு அமைப்பே இல்லையா...?எத்தனை வணிக வேந்தர்கள் ஆட்சி செய்த இடம் அது..!போனது போகட்டும் இனியாவது ஒரு நல்ல அமைப்பை உடனே துவக்கி செயல் படுங்கள்....!அல்லாஹ உங்கள் முயற்சியை வெற்றி ஆகித்தருவானாக.....!ஆமீன்
2. Re:மும்பையில் காயல் நல மன்றம... posted byALS mama (Kayalpatnam)[28 August 2011] IP: 59.*.*.* India | Comment Reference Number: 7393
மும்பையில் காயல் நல மன்றம் உடனடி துவங்க வேண்டும் :-
அஸ்ஸலாமு அலைக்கும்,
மும்பையில் முஸ்தாக் அஹ்மத் என்ற எழுத்தாளர் மற்றும் பொது சேவை பிரியர் கால் ஊன்றிவிட்டார் இனி மும்பையில் எல்லாமே நினைத்ததை பொது நோக்கோடு செய்து முடிப்பார் .
இது நாள் வரை காயலர்களுக்கு சங்கம் ஒன்று இல்லாத குறையை நிவர்த்தி செய்ய புறப்பட்டு விட்டார்கள் .
இளம் சிங்கமாய் துடிப்புடனே பாய்ந்து வருகிறார்கள் அல்ஹாபில் ஏ.என் .அப்துல் காதர் ஆலிம் புஹாரி அவர்களும் ,சமாதான புறாவாக மும்பையை வட்டமிட சிறகடித்து பறந்து தெரிகிறார் தம்பி முஸ்தாக் அஹ்மத் .
இந்த இருவர்களும் மும்பையில் வாழும் இதர காயல்வாசிகளை கலந்து ஷவ்வால் பிறை இறுதிக்குள் காயல் நல மன்றம் உருவாக்க வேண்டும்.
எழுத்தாளர் முஸ்தாக் அஹ்மத் விரைவில் இந்தியா முழுவதிலும் உள்ள காயல் நகர் நல மன்றங்கள் சேவை ஒரு பார்வை என்ற தலைப்பில் ஒரு மலரை கொண்டு வர வேண்டும் என்பது எனது அவா. இன்ஷா அல்லாஹ் இதற்க்கான முயற்ச்சிகளை படிக்கின்ற அனைத்து காயல் நகர் நல மன்றங்கள் ஏற்ப்பாடு செய்ய முன்வரவேண்டும் . இந்த மலரினால் கல்வி ,நோய் நிவாரணிகள் ,ஏழைகளுக்கு பண உதவி , வேலைவாய்ப்பு செய்திகள் எல்லாம் ஒரே சமயத்தில் மும்பை காயல் நல மன்றம் உருவாக்கி ''உள்ளங்கை நெல்லிக்கனியாய், குன்றின் மீது விளக்காய் பிரகாசிக்கட்டும் ''.
இப்படிக்கு ,
எழத்தாளர் , பொது சேவை ,உருவமற்ற ஓவியர் ,
ALS மாமா
பாலம் பத்திரிகை முன்னால் ஆசிரியர் ,
தலைவர் : மஜிளீசுல் கௌது சங்கம் & சீதக்காதி நூலகம்,
ஆலோசகர் -ரஹ்மானியா பள்ளி கல்வி வளர்ச்சிக்குழு ,
carry bag ஒழிப்பு இயக்க அமைப்பாளர் ,
முதல்வர் - ALS School Of Arts ,
நிர்வாகி - KTM தெரு பெண்கள் தைக்கா .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross