நோன்பு பெருநாளைக்குமுன் இறுதி வெள்ளிக்கிழமையான ஆகஸ்ட் 26 அன்று சவுதி அரேபியா - கிழக்கு மாகாணத்தில் உள்ள தம்மாம் நகரில் இஃப்தார் நிகழ்ச்சிக்கு காயலர்கள் சிலர் ஏற்பாடு செய்திருந்தனர்.
பாலப்பா அஹ்மத் இல்லத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தம்மாம் காயல் நற்பணி மன்றம் தலைவர் டாக்டர் இத்ரீஸ் முன்னிலை வகிக்க, காயலர்கள் ஏராளமானோர் கலந்துக்கொண்டனர்.
1. Re:ரமழான் 1432: நோன்பு பெருந... posted byசாளை S.I.ஜியாவுதீன் (காயல்பட்டினம் )[28 August 2011] IP: 59.*.*.* India | Comment Reference Number: 7376
மீண்டும் மீண்டும் மகிழ்ச்சிகரமான ஒன்றுகூடல். இப்படி ஒற்றுமை கடைசிவரை தொடர வல்ல ரஹ்மான் அருள் செய்வானாக.
சகோ. பலப்பா அவர்களே, நான் எப்போது காயல்பட்டினம் செல்லுவேன் என்று காத்து இருந்து, அல்கோபார் மக்களை இப்தாருக்கு அழைத்த மாதிரி உள்ளது. இது எல்லாம் நல்லதுக்கு இல்லை, அவ்வ்வ்வ்... இந்த ஓரவஞ்சனையை உன் ஆத்துக்கார அம்மாவிடம் போட்டுக்கொடுத்தால் தான் நீ சரிவருவாய்.
2. Re:ரமழான் 1432: நோன்பு பெருந... posted byமுத்துவாப்பா... (அல்-கோபர்)[28 August 2011] IP: 89.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 7379
மிகவும் அருமையான ஒரு ஒன்று கூடல் நிகழ்ச்சி , ஜியாவுதீன் காக்கா நீங்க இல்லாத ஒரே குறை தான் ... அடிக்க அடிக்க தான் அம்மி நகரும்னு சொல்லுவாங்க அது மாதிரி கம்மென்ட் போட்டு போட்டு இஃப்தார் நிகழ்ச்சிக்கு நம்மல கூப்பிட வச்சாச்சு... காயல் பட்டணம் கருத்து பகுதிக்கு நன்றி .. அடுத்து தம்மாம் சாப்பாடு வேற இருக்குன்னு சொல்லுறாங்க .. ஆனால் இன்னும் ஒரு தகவலையும் காணோம் நோன்பு வேற முடிய போகுது .....??? கேட்டா அது தான் தம்மாம்ல சாப்பாடு வச்சாச்சே அதுதான் தமாம் சாப்பாடுன்னு சொல்லுறாங்க .....
3. Re:ரமழான் 1432: நோன்பு பெருந... posted byZainul Abdeen (zain_msec@yahoo.com)[28 August 2011] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 7382
இஃப்தார் ஒன்றுகூடல் நிகழ்ச்சி அமீரகத்தில் நடந்ததாக எந்த செய்தியும் வரவில்லையே . . .
உலகில் மற்ற பகுதியை விட அமீரகத்தில்தான் காயலர்கள் அதிகமாக வாழ்கின்ற காரணத்தினால் என்னவோ . . இப்படி ஒரு நிகழ்வு நடக்க சிரமம் மேற்கொள்ளவேண்டி இருக்கு . . .
எங்களது அருமை நண்பர் மூசா வை வெகு நாட்களுக்கு பிறகு இந்த போட்டோ வின் மூலமா பார்த்ததில் எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி.
இது போல எண்ணற்ற நண்பர்களை இந்த காயல் வெப்சைட் மூலமா தான் பார்க்க முடிகிறது.அதற்காக இந்த வெப்சைட் நடத்துகிறவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை இந்த தருணத்தில் தெரிவித்து கொள்கிறேன்.
5. Re:ரமழான் 1432: நோன்பு பெருந... posted byPalappa Ahmed (Dammam - Seiko)[28 August 2011] IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 7399
மாஷா அல்லாஹ் அருமையான கருத்துக்கள் ஜியாவுதீன் காக்கா மற்றும் முத்துவாப்பா கருத்துக்கள். இப்தார்க்கு arrange பண்ணிய காயலர்கள் சிலர் யார் என்று நான் தெரிந்து கொள்ளலாமா? எங்கே நம்ம 12 ம் நோன்பில் Palappa Ahmed யை invite பண்ணாததால் அவன் நம்மை last friday க்கு (26th Ramadhan) invite பண்ணினால் நம்ம போக வேண்டியது வரும் என்று பயந்து வூருக்கு போய் விட்டு இப்படி ஒரு நக்கலா?
அப்புறம் முத்துவாப்பா, அடிக்க அடிக்க அம்மி தான் நகரும். ஆனால், அடிக்காமலே அகமது (பாலப்பா) நகருவான் (புதுமொழி). எப்படி ஜியாவுதீன் காக்கா 26 நோன்பில் மிஸ் ஆனாரோ அது மாதிரி நீ பெருநாள் விருந்தில் மிஸ் ஆகப்போறாய். சரி கருத்துக்கள் மூலம் அடுத்து மோதலாம் பெருநாளைக்கு அடுத்த நாள்.
Ok. See you. Bye. Eid Mubarak to all of our Kayal guys.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross