எதிர்வரும் நகர்மன்ற தேர்தலை முன்னிட்டு - மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக ‘நகராட்சித் தேர்தல் வழிகாட்டு அமைப்பு‘ ‘MUNICIPAL ELECTION GUIDANCE ASSOCIATION (MEGA)‘ என்ற பெயரில் அமைப்பு ஒன்று சமீபத்தில் துவக்கப்பட்டது. அவ்வமைப்பு நகரில் தனது பணியை கடந்த வெள்ளியன்று துவக்கியது.
இதுகுறித்து, ‘மெகா‘ செய்தித் தொடர்பாளர் கவிமகன் காதர் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
நிறைவான அருளன்பின் இறைஏகன் திருப்பெயரால்! உலகெங்கும் வாழும் அன்புநிறைக் காயலர்களே! அகம் உவந்த அஸ்ஸலாமுஅலைக்கும்!
நகராட்சித் தேர்தலில் நகர மக்களுக்கு வழிகாட்டுவதற்காக, அண்மையில் உலகெங்கும் பரவி வாழும் காயலர்களால் துவங்கப்பட்ட அமைப்பான MEGA தனது ஆக்கப்பூர்வமான களப்பணியை, இறையருளால் காயல்மாநகரில் துவங்கிவிட்டது என்ற நல்ல செய்தியை தங்களுக்கு அறியத்தருகிறோம்.
இப்பணிகளை ஒருங்கிணைக்கும் முகமாக நேற்று (வெள்ளிக்கிழமை; ஆகஸ்ட் 26) நகரின் இரு ஜும்மா பள்ளிகளிலும் நகராட்சி தேர்தல் குறித்தும், MEGA வின் நோக்கங்கள்
குறித்தும் நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டது.விநியோகிக்கப்பட்ட பிரசுரத்தின் நகல், அடுத்தடுத்த வலைதள செய்திகளில் உங்கள் பார்வைக்குத் தரப்படும்.
இன்ஷாஅல்லாஹ், செப்டம்பர்
முதல் வாரத்தில், MEGA வின் தலைமை அமைப்பாளர்கள் நகரின் அனைத்து ஜமாஅத்கள், சங்கங்கள், பொதுநல அமைப்புகள், சமூக ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் பெரியவர்களை சந்தித்து, நகராட்சித் தேர்தல் நிலைப்பாடு குறித்து ஆலோசனை நடத்தவிருக்கின்றார்கள்.
வெகுவிரைவில் காயல் மற்றும் சர்வதேச பொறுப்பாளர்களும் அறிவிக்கப்படவிருக்கின்றனர். அல்லாஹ்வின் உதவியால், நல்லதோர் நகர்மன்றம் அமைக்கும் பணியில் நகரின் அனைத்து தரப்பினரின் ஆதரவோடு MEGA தனது பாதையில் சீராக பயணிக்கத் துவங்கிவிட்டது என்பதனை அன்புடன் அறியத் தருகிறோம்.
இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
கவிமகன் காதர்,
செய்தித் தொடர்பாளர், MEGA.
|