தாய்லாந்து காயல் நல மன்றத்தின் பொதுக்குழுக் கூட்டம் 28.08.2011 (நாளை) ஞாயிற்றுக்கிழமையில், பாங்காக்கில் நடைபெறுகிறது. இக்கூட்டத்திற்கு அழைப்பு விடுத்து அம்மன்றத்தின் பொருளாளர் எம்.எச்.செய்து முஹம்மது ஸாலிஹ் வெளியிட்டுள்ள அழைப்பறிக்கை பின்வருமாறு:-
அன்பின் தாய்லாந்து காயல் நல மன்ற (தக்வா) உறுப்பினர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
நம் மன்றத்தின் பொதுக்குழுக் கூட்டம் இன்ஷாஅல்லாஹ் இம்மாதம் 28ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை (நாளை) மதியம் 02.00 மணிக்கு, பாங்காக் ஜெம் ஹவுஸ் இல்லத்தில், மன்ற துணைச் செயலாளர் ஹாஜி விளக்கு நூர் முஹம்மத் தலைமையிலும், ஹாஜி வாவு எஸ்.ஏ.ஆர்.அபுல்ஹஸன், மவ்லவீ ஹாஃபிழ் அபுல்ஹஸன் ஷாதுலீ ஃபாஸீ ஆகியோர் முன்னிலையிலும் நடைபெறவுள்ளது.
காயல்பட்டினத்திலிருந்து பாங்காக் வருகை தந்திருக்கும் காயல்பட்டினம் தாருத்திப்யான் நெட்வர்க் நிறுவனர் ஹாஃபிழ் எஸ்.கே.ஸாலிஹ் இக்கூட்டத்தில் நம் யாவரையும் சந்தித்து கலந்துரையாடவிருக்கிறார்.
மன்ற உறுப்பினர்கள் உங்களின் இடைவிடாத பணிச் சுமைகள் இருக்கின்ற போதிலும், நகர்நலன் கருதி உறுப்பினர்கள் இக்கூட்டத்தில் அவசியம் குறித்த நேரத்தில் கலந்து சிறப்பித்து, உங்கள் மேலான ஆலோசனைகளை வழங்கி, நம் மன்றத்தின் நகர்நலப் பணிகளுக்கு வலு சேர்க்க வருமாறு, மன்ற நிர்வாகக் குழுவின் சார்பில் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு தக்வா மன்ற பொருளாளர் எம்.எச்.செய்து முஹம்மது ஸாலிஹ் தனதறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார். |