எதிர்வரும் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை சார்பில், அல்ஜாமிஉல் கபீர் - பெரிய குத்பா பள்ளி அருகில், ஏழைகளுக்கு ஃபித்ரா அரிசி வழங்கும் நிகழ்ச்சி இன்று மாலை ௦05.00 மணிக்கு நடைபெற்றது.
முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் எஸ்.ஜே.மஹ்மூதுல் ஹஸன் தலைமை தாங்கினார். நகர முஸ்லிம் லீக் தலைவர் ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர் துவக்கமாக ஏழைகளுக்கு ஃபித்ரா அரிசி வழங்கினார். அதனைத் தொடர்ந்து, மாவட்ட - நகர நிர்வாகிகள் ஏழைகளுக்கு ஃபித்ரா அரிசி வழங்கினர்.
ஃபித்ரா அரிசியை நகரின் அனைத்துப் பகுதிகளைச் சார்ந்த ஏழை மக்கள் திரளாக வந்து பெற்றுக்கொண்டனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை, முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகளான கே.எம்.டி.சுலைமான், மஹ்மூத் லெப்பை, பெத்தப்பா சுல்தான், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் எம்.எச்.அப்துல் வாஹித் மற்றும் பலர் செய்திருந்தனர்.
படங்கள்:
வீனஸ் ஸ்டூடியோ,
எல்.கே.லெப்பைத்தம்பி சாலை, காயல்பட்டினம். |