வரும் அக்டோபர் மாதம் தமிழகம் முழுவதும் உள்ள உள்ளாட்சி மன்றங்களுக்கான தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதற்கான ஆயத்தப் பணிகள் தற்போது மாநிலம் முழுவதும் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
காயல்பட்டினம் இரண்டாம் நிலை நகர்மன்றமும் தேர்தலை சந்திக்க உள்ளது. மக்களால் நேரடியாக தலைவரும், தேர்வு செய்யப்படும் 18 வார்டு உறுப்பினர்களில் இருந்து ஒருவர் துணைத்தலைவராகவும் தேர்வுசெய்யப்பட உள்ளனர்.
இதற்கிடையில் தேர்தல் குறித்த செயல்பாடுகள் நகரில் சூடு பிடிக்கத் துவங்கியுள்ளது. ‘நகராட்சித் தேர்தல் வழிகாட்டு அமைப்பு' (MEGA) என்ற பெயரிலான தற்காலிக குழு உருவாக்கம் குறித்த செய்தி ஆகஸ்ட் 19 அன்று வெளியானது.
அதனைத் தொடர்ந்து - ஆகஸ்ட் 24 அன்று - காயல்பட்டினத்தில் நடந்த கூட்டம் ஒன்றில் நகராட்சி தேர்தல் ஒருங்கிணைப்பு குழு என்ற பெயரில் புதுக் குழு ஒன்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த தேர்தல்களில் செயல்புரிந்த காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய பேரவை மற்றும் காயல்பட்டினம் ஐக்கிய சங்கம் (சென்னை) ஆகியவை, விரைவில் தேர்தல் குறித்த தமது நிலைகளைத் தெளிவுபடுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதுதான் தேர்தல் சூடு பிடிக்கத் துவங்கியுள்ளது என்றாலும், இத்தேர்தல் குறித்த கலந்தாலோசனைகள் கடந்த சில மாதங்களாகவே சென்னையிலும், காயல்பட்டினத்திலும் நடைபெற்று வருகிறது.
நகர்மன்றத்தின் அடுத்த தலைவராகப் போட்டியிட வாய்ப்புள்ளதாக பேசப்படும் நபர்களின் விபரம் வருமாறு:-
பதவிக் காலம் நிறைவுபெறும் தற்போதைய நகர்மன்றத்தைப் பொருத்த வரை - சில உறுப்பினர்கள் மீதுதான், குற்றச்சாட்டுகள் இருந்தன. ஆகவே தற்போதைய நகர்மன்ற தலைவர் ஹாஜி வாவு எஸ்.செய்யித் அப்துர் ரஹ்மான் மீண்டும் தலைவர் பதவிக்கு போட்டியிடலாம் என்ற கருத்து நிலவுகிறது.
மே மாதம் நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் - அ.தி.மு.க. ஆட்சியைக் கைப்பற்றி உள்ளது. ஆகவே, ஆளும் கட்சிக்கு சாதகமான ஒருவர் நகர்மன்றதிற்கு தலைவராக இருந்தால் நல்லது என சிலர் வாதிட்டு வருகின்றனர். அதனடிப்படையில் அ.தி.மு.க. சார்பில் காயல்பட்டினம் நகர்மன்றத்தின் முன்னாள் (2001 - 2006) தலைவி அ.வஹீதா நிறுத்தப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
காயல்பட்டினத்தில் என்றுமே தி.மு.க.விற்கு தான் ஆதரவு அதிகம் என்ற வாதத்தின் அடிப்படையில், அ.தி.மு.க. சார்பில் ஒருவர் நிறுத்தப்பட்டால், தி.மு.க. சார்பிலும் எதிர்த்து ஒருவர் நிறுத்தப்படுவார் என்றும் கூறப்படுகிறது. இதில் தி.மு.க. வேட்பாளராக அதன் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஹாஜி எஸ்.ஐ. காதர் நிறுத்தப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
அடுத்து, தலைவருக்கு நிறுத்தப்பட வாய்ப்புள்ள நபர்களில் ஒருவராக பேசப்படும் மற்றொருவரின் பெயர் ஏ.கே. பீர் முஹம்மது. காயல்பட்டினம் ஐக்கிய சங்கம் (சென்னை) அமைப்பின் நீண்ட கால பொது செயலாளர் இவர்.
ஹாங்காங் தமிழ் சங்கத்தின் முன்னாள் தலைவர் ஹாஜி ஏ.எஸ்.ஜமால் பெயரும் சிலரால் - நகர்மன்ற தலைவர் பதவிக்கு - முன்மொழியப்படுகிறது.
இது தவிர வேறு சிலர் பெயரும் பரவலாக விஷயம் அறிந்த வட்டாரங்களில் பேசப்படுகிறது. அது குறித்த தெளிவான பார்வை இன்னும் சில நாட்களில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
1. Re:செய்தி விமர்சனம்: சூடு பி... posted byMUHAMED SHUAIB (kayalpatnam)[26 August 2011] IP: 122.*.*.* India | Comment Reference Number: 7282
உள்ளாட்சி தேர்தல் எனபது அரசியல் கலப்பற்றதாக இருக்கவேண்டும் என்பதே நம் அனைவரின் எதிர்ப்பார்புமாகும். இந்தநிலையில் யார் மக்கள் பணியை பொறுப்புடனும் பொருத்தமாகவும் செய்கிறார்களோ அவர்களே தலைவர் பொறுப்புக்கு தேர்ந்து எடுக்கப்படவேண்டும்.
நமதூரில் கடந்த மூன்று உள்ளாட்சி தேர்தல்களில் பகுதி வாரியாக தலைவர்கள் நியமிக்கப்பட்டனர். ஒரு முறை உனக்கு அடுத்த முறை எனக்கு என்று ஏலம்போட இது ஒன்றும் மீன்கடை வியாபாரமில்லை என்பதை சம்பந்த ப்பட்டவேர்கள் உணர வேண்டும். ஊர் அமைதியும் முக்கியம்தான். அதே நேரம் பதவியின் பொறுப்பும் முக்கியம்.
2. Re:செய்தி விமர்சனம்: சூடு பி... posted bysaburudeen (dubai)[26 August 2011] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 7286
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் பெரும்பான்மை மக்கள் அதிமுக ஆட்சி தான் வர வேண்டும் என சிந்தித்து வாக்களித்த நேரத்தில்.நமது மக்கள் கலைஞர் மிதான பற்றும் ,அனிதாவின் மிதான நட்பின் காரணத்தினால் செய்த தவறை வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் செய்து விடாமல். இன்று நாம் சந்திக்கும் பல்வேறு பிரச்சனை களை எதிர்கொள்ள காயல்பட்டணத்தின் வளர்ச்சியின் நன்மை கருதி ஆளுங்கட்சிக்கு ஆதரவானவர்களை தேர்ந்தெடுத்து அரசின் திட்டங்களை எளிய முறையில் பெற்று நமதூர் மேலும் வளர்ச்சி அடைய ஏதுவாக இருக்கும் என எண்ணுகிறேன்.
5. .காயல்பட்டணம்.காம் ஒரு கருத்து கணிப்பு நடத்தலாமே ? posted byநட்புடன்...தமிழர் - முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்)[26 August 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 7293
இது விபரம் காயல்பட்டணம்.காம் ஒரு கருத்து கணிப்பு நடத்தலாமே ?
மக்கள் யாரை தலைவராக வர விரும்புகிறார்கள் இந்த கருத்து கணிப்பு ஒரு முன்னோடியாக அமையுமே.... !
நட்புடன்... தமிழர் - முத்து இஸ்மாயில்
Administrator: Thanks for the suggestion. Insha Allah, we will do what we can
இன்னும் உள்ளாட்சி தேர்தல் தேதிகளே அதிகாரபூர்வமாக தேர்தல் ஆணையம் அறிவிக்காத இந்த சூழ்நிலையில் இப்போதே இந்த சூடு என்றால், தேர்தல் தேதி அறிவித்த பிறகு நமதூரில் அனலே பறக்கும் போல் தெரிகிறது ? நாம் நமக்குள் உள்ள அணைத்து வேற்றுமைகலை மறந்து எல்லோரும் ஒரே அணியில் ஒற்றுமைஉடன் நின்று நல்ல நேர்மையான நகரமன்ற தலைவரை நாம் தேர்ந்து எடுப்போம். வல்ல அல்லாஹு அதற்க்கு நமக்கு துணை நிற்பானாக.ஆமீன்.
எல்லோர்களும் மெகா விற்கு துணை நிற்போம், வெற்றி அடைவோம் .வாருங்கள்
7. Re:செய்தி விமர்சனம்: சூடு பி... posted byIBRAHIM (CHENNAI)[26 August 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 7298
நமது நகராட்சியின் அடுத்த தலைவராக நமது S I . காதர் காக்க அவர்களை வர வேண்டும்
பண பலமும் , அரசியல் பலமும் , மக்களை அணைகின்ற பக்குவமும் , முஹம்மத் ஹாஜி அவர்கள் பேரனும் உயர்ந்த பண்பாளன் நமதூர் தலைவர் வருவதக்கு தகுதியானவர் என்று எண்ணுகின்றோம் . வல்ல அல்லாஹ் அவர்களை நமதூர் அணைத்து மக்கள் ஆதரவு பெற்ற தலைவராக வருவதக்கு அருள் செய்வானாக ..... ஆமீன் - வஸ்ஸலாம்
8. Re:செய்தி விமர்சனம்: சூடு பி... posted bymohamed abdul kader (dubai)[26 August 2011] IP: 94.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 7306
அஸ்ஸலாமு அழைக்கும்
நமது நாகராட்சிக்கு என்றும்போலவே அரசியல் சாயம் பூசாத ஒருநபரை நாம் நிறுத்துவதை நாம் வளமையாஹ கொண்டுள்ளோம் .அதுபோல் தற்போதும் நிறுத்தலாம்.
( முதுமையை தவிர்த்து இளமைக்கு வலி கொடுக்கலாமே )
9. Re:செய்தி விமர்சனம்: சூடு பி... posted bysyedahmed (GZ, China)[26 August 2011] IP: 14.*.*.* China | Comment Reference Number: 7309
ஜனாப் ஹாஜி வாவு எஸ். அப்துல் ரஹ்மான், ஜனாபா அ.வஹீதா, ஜனாப் ஹாஜி ஏ.எஸ். ஜமால் மாமா ஆகியோரின்
பெயர்களை சீட்டு குலுக்கள் முறையில் தலைவராக தேர்வு
செய்து நியமிக்கலாம்.
10. Re:செய்தி விமர்சனம்: சூடு பி... posted byHameed Arafath (chennai)[26 August 2011] IP: 122.*.*.* India | Comment Reference Number: 7313
அஸ்ஸலாமு அழைக்கும்,
நமதூரில் தேர்தல் இப்பொழுதே சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது.அடுத்த மாதம் இதை விட அனல் பறக்கும் என்று எதிர்பார்கிறேன்...
தலைவர் என்பது எவ்வளவு முக்கியமான பதவி என்று நாம் அனைவருக்குமே நன்றாக தெரியும். அந்த பதவியில் இருப்பவர் அணைத்து தரப்பு மக்களின் நம்பிக்கைக்கும் பாத்திரமாக இருக்கவேண்டும் எந்த ஒரு பிரச்சனைக்கும் நல்ல தீர்வு காண்பவராக இருக்கவேண்டும் முக்கியமாக எந்த தீயசக்திகளின் அச்சுறுத்தலுக்கும் பயபடதவராக இருக்க வேண்டும்.. அரசியல் அனுபவம் மிக்கவராக இருக்க வேண்டும்...
இவை அனைத்தும் நமது S I காதர் காக்க அவர்களுக்கு நல்ல அனுபவம் மிக்கவர் அகவே அவர்கள் நமது மக்களால் தேர்வு செய்ய படுவார்கள் என்று எதிர் பார்கிறேன்.
S I காதர் காக்க அவர்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள்...
வேகம்... விவேகம்... திறமையான் பேச்சாற்றல் ....administration skill streangth ... Communication skill ...., Good relationship with all peolpe.......,Quick Decision Maker ..., மற்றும் நல்ல அனுபவம் நிறைந்த நபர் காயல் நகர்மன்றத்தின் தலைவராக வேண்டும்... இது எனது ஆசை மட்டும் அல்ல... ஒட்டுமொத்த காயலர்களின் நெடுநாள் கனவு...
இது எல்லாம் நிறைந்த நமதூருக்கே தெரிந்த ஒரு நபர் இருந்தார்... ஆனால் இப்பொழுது அவர் நம்முடன் இல்லை...அவர் தான் S.K. மாமா அவர்கள்..
12. அல்லாஹுவிற்கு பயப்படுகிறவர்களாக இருக்க வேண்டும். posted byKMT Shaikna Lebbai (Singapore)[26 August 2011] IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 7317
பழைய உறுபினர்களை விட்டுவிட்டு முற்றிலும் புதிய உறுபினர்களை தேர்வு செய்ய வேண்டும்(தலைவர் உற்பட).அதுவும் அவர்கள் அல்லாஹுவிற்கு பயப்படுகிறவர்களாக இருக்க வேண்டும்.
மக்களுக்கு பயப்படுகிறவர்கள் மீண்டும் மீண்டும் தவறு செய்ய கூடும்.ஏன் என்றால் மக்கள் யாவரும் மன்னிக்கவும் மறக்கவும் கூடியர்வர்கள்.
13. Re:செய்தி விமர்சனம்: சூடு பி... posted byL.A.K.Buhary (HONGKONG)[26 August 2011] IP: 121.*.*.* Hong Kong | Comment Reference Number: 7323
தலைவர் பதவிக்கு...நமது நகரில் மிகுந்த அனுபவமுடைய நேர்மையான செயலாற்றல்மிக்க ,அனுசரிப்பும்,தேவையான சமயங்களில் கண்டிப்பும் தக்க நேரத்தில் கையாளகூடிய ஒரு பக்குவப்பட்ட ஒரு தலைவர் வரலாம். அவர் எந்த அரசியல் கட்சி சாராத,தனி நபர் / இயக்கம் போன்றவற்றுக்கு தலை அசைக்காது,பொதுவாகவே ,நமது நகரின் பாரம்பரியம்,கலாச்சாரம் பேணி ,நகர் மக்கள் நலன் ஒன்றையே கருத்தில் கொண்டு செயலாற்றகூடியவராக இருத்தல் வேண்டும்.
துணைத்தலைவர் பதவிக்கு...ஆளும் கட்சி அரசியல் செல்வாக்கு கொண்டவராகவோ அல்லது எந்த கட்சி சார்ந்தவராயினும் ,நகர் நலனுக்காக அரசினரிடமிருந்தும்,துறை அதிகாரிகளிடத்தும் பலத்த செல்வாக்குடனும்,நமது நகர் நலனையும் கருத்தில் வைத்து காரியத்தை சாதிக்கும் திறமையும் ஒருங்கே அமைய பெற்ற ஒருவர் வரலாம்.வெளித்தோற்றத்துக்கு கட்சி சாயம் பூசப்பட்டவர் ஆயினும்,நகர் நலன் கருதியே தலைவருடன் ஒத்துபோவதும் தலைமைக்கு கட்டுப்பட்டே அவர் நடவடிக்கை அமையவேண்டும். (இன்றைய சூழ்நிலையில் அரசியல் செல்வாக்கு ரொம்பவும் அவசியமே.ஒரு திட்டத்தை விரைந்து நிறைவேற்றவும்..அதே சமயம் அனாவசியமான திட்டங்களை குறித்த காலத்தில் தடுத்து நிறுத்திடவும், தலைவருக்கு அரசியல் ஆலோசனை தரவும் இத்தகைய செல்வாக்கு கொண்ட நபர் நகர் மன்றத்தில் இருத்தல் அவசியம்).
வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு...நகரின் ஒய்வு பெற்ற ஆசிரியர்கள்&அரசு அலுவலர்கள், வெளி நாடுகளில் உயர்நிலை பணிபுரிந்து தாயகம் திரும்பியவர்கள்,உள்ளூர் வணிகர்கள்,தொண்டு நிறுவனத்தை சார்ந்தவர்கள் இவர்களில் அனுபவமிக்க, தன்னிறைவு பெற்ற சேவை மனப்பான்மை உடைய பிரதிநிதிகள்,குறிப்பாக இளைஞர்கள் இப்பொறுப்பினை ஏற்கலாம்..
எனவே,இப்போதே இதுபோன்றவர்களை கண்டறிந்து,உறுப்பினர்களை தயார் செய்து மக்களிடத்தில் பகுதி வாரியாக அறிமுகம் செய்து ஒருமனதாக வெற்றி பெற செய்தால் சிறப்பான நகர்மன்றம் அமைவது உறுதி.
14. நல்லவர்கள் நிறைந்த - சிறந்த மன்றமாக posted byN.S.E. மஹ்மூது (Kayalpatnam)[26 August 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 7326
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
நகரமன்ற தேர்தல் நடவடிக்கைகள் சூடுபிடிக்கிறதோ இல்லையோ ? பதவியில் உள்ளவர்கள் பலர் தூக்கம் இழந்திருக்கிறார்கள்!!!.
நகர்மன்ற தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நிச்சயமாக , கண்டிப்பாக அரசியலுக்கு அப்பாற்பட்டவர்கள்தான் வரவேண்டும் - அதிலே எந்த வித சந்தேகமும் வேண்டாம் - அரசியல் வாதிகள் இருந்தால்தான் ஊருக்கு நல்ல பல திட்டங்களை கொண்டு வரமுடியும் என்பதெல்லாம் பொருத்தமாகாது.
இது உள்ளாட்சி தேர்தல் இதிலே அரசியல் கலப்பு அவசியமே இல்லை. 2 அல்லது 3 தெருக்களில் உள்ள மக்கள் சேர்ந்து ஒரு வார்டு மெம்பரை தேர்ந்தெடுக்க போகிறோம் அதுவும் நமக்கு அறிமுகமானவரை.
இதிலே அரசியலை புகுத்தாமல் இருந்தால்தான் நிச்சயமாக நல்ல மனிதரை , ஆற்றல் மிக்கவரை, இறைவனுக்கு பயந்தவரை தேர்ந்தெடுக்க முடியும்.
அரசியல் வாதியை நிறுத்தினால் அவர் எவ்வளவு பெரிய அயோக்கியராக இருந்தாலும் கட்சி கட்டுப்பாடு , கட்சி விசுவாசம் என்று அந்த அயோக்கியரையே தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாய சூழ்நிலைக்கு தள்ளப்படுவோம்.
ஒரு வேளை அந்த அரசியல் கட்சிக்காரர் மிகவும் கண்ணியமான , நேர்மையாளராகவே இருந்து அவரை நாம் தேர்ந்தெடுத்தால் கூட , அவரால் சுயமாக செயல்பட இயலாது - கட்சி மேலிடத்து உத்தரவு மற்றும் பல அச்சுறுத்தலின் காரணமாக அவர் மாற்றமாக செயல்படுவார்.
ஆகவே அரசியலுக்கு அப்பாற்பட்டவரையே தேர்ந்தெடுப்பது நன்மையை தரும். உண்மையான அரசியல் வாதியாக இருந்தால் நகர் மன்றத்திற்கு தேவையான அத்தனை நல்ல பல திட்டங்களையும் பதவியில் இல்லாமலேயே போராடி வாங்கித் தருவார்.
அதனால் மக்களே! உஷாராக இருந்து சிந்தித்து நல்ல முடிவு எடுத்து நகர்மன்றத்தை - நல்லவர்கள் நிறைந்த - சிறந்த மன்றமாக தேர்ந்தெடுங்கள். இறைவனின் அருள் கிடைக்கும் ஆமீன்.
16. .இதில் நீங்கள் கண்டுள்ள நபர்களை போன்று நிறைய நபர்கள் தலைவர் ஆகும் எண்ணத்தில் உள்ளார்கள் posted byசட்னி .செய்யது மீரான் (காயல் பட்டினம் .)[26 August 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 7335
அஸ்ஸலாமு அலைக்கும்.
சூடு பிடிக்கிறது நகர்மன்ற தேர்தல் நடவடிக்கைகள்! அடுத்த தலைவர் யார் என்ற கவலை எல்லாம் ஊரில் உள்ள
சில பொது நலவாதிகள் மற்றும் விரல்விட்டு என்னும் அளவில்
சில மக்கள்களும் உள்ளார்கள்.
ஊருக்கு வெளியில் இருக்கும் உங்களை போன்றும் ,ஊரில் உள்ள இவர்களை போன்றும் ஊரில் உள்ள நம் சொந்தங்கள்
யாருக்கும் இது மேல் இன்னும் கவனமும் ,கவலையும் வரவில்லை. அவர்களின் எண்ணம் எல்லாம் இப்பொழுது
புண்ணியம் பூத்து குலுங்கும் இந்த புனித ரமலானில்
நல்ல அமல்களை செய்து நாயன் அல்லாஹ்வின்
திருப்பொருத்தத்தை பெற வேணும் என்பதோடு
பொய்யான இந்த உலகின் தேவைகளை விட
உண்மையான மறு உலக வாழ்க்கை நல்ல படி
அமைய வேண்டும் என்ற தேடலும் ,பிரார்த்தனையும்.
அல்லாஹ் எல்லோரின் நல்ல தூய அமல்களை ஏற்று,
பிரார்த்தனையும் கபுல் ஆக்கி இரு உலக வாழ்வையும் செம்மையாக்கி ,சிறப்பாக்கி
பெருவாழ்வு வாழ பேரருள் புரிவானாக ஆமீன் .
நம் மக்களுக்கு மற்றும் ஒரு கவலை பெருநாள் எப்போ வருமோ
அதுவும் கடந்த ஆண்டுகளை போல் எத்தனை வருமோ
தாய்மார்களுக்கு வட்டிலாப்பம் வைக்கனும் மருமகன், மருமகள்
மெச்சுற மாதிரி நல்லா வரணும், தந்தை மார்களுக்கு
கறிக்கடை காரர்கள் என்ன விலை நிர்ணயிகின்றர்களோ .
நமக்குன்னு வர்ற பெருநாளில் ஆடு அறுப்பார, கடை திறப்பார
என்று பலவிதமான கவலைகள் உள்ளது .
எல்லோரும் சிறப்பாக ,மகிழ்ச்சியாய் ஈகை பெருநாளை
கொண்டாடிவிட்டு பின்னர் அடுத்து வர வேண்டிய உறுப்பினர்கள் ,தலைவர்களை பற்றிய தேடுதலில் கவனம் செலுத்துவார்கள்.
ஆனால் கவலை பட வேண்டியது மக்கள் இல்லை
யார் வரணும் ,யார் வரக்கூடாது என்று முடிவு செய்தும்
அவர்கள் மிக மிக விழிப்போடு உள்ளார்கள்.
முன் போல் மக்களை ஏமாற்றலாம் என்ற தீய எண்ணத்தில்
உலா வரும் எத்தர்கள் .ஏமாற்று பேர் வழிகள்தான் ஏமாறுவார்கள் .உஷார் ,உஷார்
அன்பு காயல் சொந்தங்களே நாமும் ஈகை பெருநாளை
கொண்டாடிவிட்டு பின்னர் அடுத்து வர வேண்டிய உறுப்பினர்கள் ,தலைவர்களை பற்றிய தேடுதலில்
இறங்குவோமாக .அல்லாஹ் போதுமானவன்
இதில் நீங்கள் கண்டுள்ள நபர்களை போன்று நிறைய
நபர்கள் தலைவர் ஆகும் எண்ணத்தில் உள்ளார்கள் ..
யாரை பிடிக்கணும் ,எப்படி பிடிக்கணும் என்று............
அல்லாஹ் நம்மையும் ,நமது காயலையும் பாதுகாப்பானாக ஆமீன் .நல்லதோர் நகர் மன்றம் அமைய விரும்பும்
உங்களை போல் ஒருவன்
அன்புடன் .சட்னி .செய்யது மீரான்
ஸ்டார் ஹவுஸ் ,காயல் பட்டினம் .
19. Re:செய்தி விமர்சனம்: சூடு பி... posted byசாளை பஷீர் (காயல்பட்டினம்)[27 August 2011] IP: 116.*.*.* India | Comment Reference Number: 7364
நகர்மன்ற உறுப்பினர்ளையும்,தலைவரையும் அறிவிக்கும் முன்னர் அவர்களிடம் என்ன தகுதிகள் இருக்கலாம், என்னென்ன அம்சங்கள் இருக்கக்கூடாது என்பதை நாம் பொது மக்களிடம் இருந்து திரட்டி வெளிட வேண்டும். பணம் படைத்தவர்கள் விரும்பும் நபர்கள்தான் இங்கு போட்டியிடவும் பதவியில் அமரவும் முடியுமென்றால் அதை விட ஒரு தீய நிகழ்வு வேறு எதுவும் இருக்க முடியாது. இம்முறை முழுக்க முழுக்க ஜனநாயக அடிப்படையிலும் வெளிப்படையாகவுமே அனைத்தும் நடைப்பெற வேண்டும்.
20. முதல்வரை மிக இலகுவாக நேரில் சந்திக்க கூடிய ஆற்றல் பெற்றவர் posted byநட்புடன்...தமிழர் - முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்)[28 August 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 7373
நமது நகர்மன்றத்தின் முன்னாள் (2001 - 2006) தலைவி அ.வஹீதா அவர்களை வருகின்ற நகர்மன்ற தேர்தலில் தலைவராக நமது அணைத்து ஜமாத்துக்களும் தேர்ந்துடுக்கலாம்.
அவர் ஒரு திறமை மிக்க நிர்வாக அனுபவசாலி.. மற்றும் இப்போதைய அரசின் முதல்வரை மிக இலகுவாக நேரில் சந்திக்க கூடிய ஆற்றல் பெற்றவர்.
நகரின் குடிநீர் பிரச்சனைக்காக முதல்வரை சந்தித்து நமது தண்ணீர் தேவையை எடுத்து கூற கூடிய ஒரே நபர் நமது ஊரில் இந்த வஹீதா அவர்கள் மட்டுமே... !
அனைத்து ஜமாத்துக்களும் இந்த நபரை நகர்மன்ற தலைவராக தேர்ந்துடுபார்கள் என்று நம்புகிறேன்..
21. Re:செய்தி விமர்சனம்: சூடு பி... posted byAshika (Kayalpatnam)[28 August 2011] IP: 115.*.*.* India | Comment Reference Number: 7388
அஸ்ஸலாமு அலைக்கும். காயல்மா நகர மக்களே சிந்தியுங்கள் சிந்தியுங்கள் சிந்திச்சு ஒரு நல்ல முடிவு பண்ணி ஊர் தலைவரை உறுதி பண்ணுங்கள். இது ஒன்னும் ஒரு நாள் பதவி அல்ல! முதல்வன் படம் கதை அல்ல மக்களே! படித்த ஆளுமை திறன் படைத்த திறமை உள்ளவர்கள் தன்னை தான் பெரியவர் என்று வெளி உலகிற்கு தெரியாதவர்கள் எத்தனை பெயர் இருகிறார்கள் கண்டிப்பாக இது போன்ற இளைனர்களை தீர ஆலோசித்து நல்லாட்சி அமைத்து கொடுப்போம். இது நம் அனைவரின் கடமையாகும். அல்லாஹ் அருள் பாலிப்பானாக . ஆமீன்.
22. Re:செய்தி விமர்சனம்: சூடு பி... posted bySamu (HK)[30 August 2011] IP: 218.*.*.* Hong Kong | Comment Reference Number: 7451
சமுதாயத்தின் மேல் அக்கறை உள்ளவர், மிகவும் நல்லவர்,
குழைந்தைகள் முதல் முதியவர்வரை யாவரும் எளிதில் அணுகக்கூடிய ஒரே நபர், பாசமிகு, மரியாதைக்குரிய ஹாஜி. ஜமால் மாமா இம்முறை தலைவராக வேண்டும்.
இன்ஷா அல்லாஹ்.
வஸ்ஸலாம்
23. தடம் புரண்டு வழிமாறி செல்லும் கயல்பட்னம்.காம் posted byMOHIDEEN ABDUL KADER (ABUDHABI)[16 September 2011] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 8227
அஸ்ஸலாமு அழைக்கும்.
அன்பு சகோதரர்களே! தாங்கள் மக்களிடம் விழிப்புணர்வும் நேர்மையான தலைவர்களையும் திறமையான நகர மன்றத்தையும் உருவாக்க வெளிடும் செய்தின் நபர்களின் குறைகளையும், தவறுகளையும், நீதமற்ற செயல்களை தகுந்த முறையில் நான் முன்பு பதிவு செய்திருந்தும் தனிநபர் தாக்கு என்றும், ஊர்ஜிதம் இல்லை என்றும் நிராகரித்தீர்கள் என்றால் இவர்களின் உண்மை நிலைமை எவ்வாறு மக்கள் அறிவார்கள். தாங்கள் செலக்ட் செய்த நபர்களின் முழு வாழ்க்கையும் தாங்கள் ஊர்ஜிதம் செய்தீர்களா, மேலும் காயலில் இவர்களை தவீர வேறு யாரும் பேசபடவில்லையா.
அக மொத்தத்தில் தங்களின் பயணம் வழி தடமாறி செல்கிறது என்பதில் சந்தேகம் இல்லை.
தங்களின் கத்தரி மூலம் கருத்து சுதந்திரத்தை பறித்து விடாதீர்கள்.
Administrator: ஒன்று, செய்தி விமர்சனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நபர்கள், தங்களை வேட்பாளராக முன் நிறுத்தவில்லை. இணையதளத்திற்கு கிடைத்த தகவலின்படி அவ்விமர்சனம் வெளியிடப்பட்டிருந்தது. ஆகவே - ஒரு வேட்பாளரின் நல்லது, கெட்டதை தெரிவிக்க வேண்டாமா என்ற தங்களின் கேள்வி பொருத்தமானது அல்ல.
இரண்டு, தாங்கள் பதிவு செய்து நிராகரிக்கப்பட்ட விமர்சனம் - ஒரு தனி நபர் பற்றிய விமர்சனம்.
நீங்கள் கூறுவது உண்மையெனில் அதனை உரித்த அதிகாரிகளிடம்/துறையிடம் தாங்கள் புகார் செய்யலாம். நீங்கள் கூறும் (தனி நபர்) குற்றச்சாட்டை, விசாரித்து செய்தி வெளியிடும் சக்தி எங்களிடம் இல்லை என்பதனை தங்களுக்கு தெரிவித்துக்கொள்கிறோம்.
24. suggestion for our kayalpatnam municipality president posted bysmart abdul cader (chennai)[17 September 2011] IP: 14.*.*.* India | Comment Reference Number: 8314
assalamu allikum. i think haji K.V.FAROOK is sutable person for this post. he is educated and a professional by advocate Bsc,BL. and aslo well known person to kayalpatnam people, and has done a lot of good deeds for the welfare of this kayal society, and has a very good contact with the high profiled people in the political parties, and also he is a pious man. and there is no need for him to bribe on the money because he is from the affluent family. and also a well settled man. MA SALAMA
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross