காயல்பட்டினம் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்மா பள்ளியின் 35 வருட கால ஊழியர் - முஹ்யித்தீன் அடுமை - இன்று (ஆகஸ்ட் 25) மாலை 03:30 அளவில் காலமானார். 4 ஆண் மக்களுக்கும், 1 பெண்ணுக்கும் தந்தையான இவருக்கு வயது சுமார் 80 ஆகும்.
அன்னாரின் ஜனாஸா - நாளை (ஆகஸ்ட் 26) ஜும்மா தொழுகைக்குப்பின் - கடைப்பள்ளி மையவாடியில் - நல்லடக்கம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜியூன். அவர் சைக்கிள் ரிப்பேர் சர்விஸ் கடை வைத்து இருந்த போது எந்த ரிப்பேர் வந்தாலும் அவரிடம்தான் சரிசெய்வேன். மிகவும் திறமையான ஒரு மெக்கானிக்.எல்லாம் வல்ல அல்லாஹ் அவரின் சகல பாவங்களையும் பொறுத்தருளி ,சுவன வாழ்க்கையை கொடுத்தருள இரு கரமேந்தி இறைஞ்சிகிறேன்.ஆமீன்.
எனது தனிப்பட்ட அன்பிற்கு என்றும் பாத்திரமான அன்பு அடுமை காக்காவின் வஃபாத் செய்தி கேள்வியுற்று அதிர்ச்சியடைந்தேன். வல்ல அல்லாஹ் அவரது பாவப் பிழைகளைப் பொருத்தருளி, அவனது இல்லத்தைக் கட்டிக்காத்த அவரது மறுமை வாழ்வை வெற்றியாக்கி, ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர்சுவனத்தை வழங்கிருள்வானாக...
நானறிந்த வரை தான் வாழ்ந்த காலங்களில் யாருக்கும், எந்தத் தீங்கும் விரும்பிச் செய்யாதவர்...
தானுண்டு, தன் பணியுண்டு என்றிருந்தவர்...
காலமெல்லாம் சிரித்த முகத்தோடு காட்சியளித்தவர்...
தனது பொருளாதார நலிவுக்கிடையிலும் மானம் - மரியாதை பேணி வாழ்ந்தவர்...
தன் வாழ்வின் நீண்ட காலமாக தொழுகை பற்றி கவலையற்றிருந்த அவர், சில ஆண்டுகளுக்கு முன் தன் வினை எண்ணி, மனந்திருந்தி தொழுகையில் கலந்துகொண்டார்... திடீரென தொழுகையில் வரிசையில் கண்ட அவரைப் பார்த்து, பழக்க தோஷத்தில் சிலர் கேலியாக ஓரிரு சொற்களை உதிர்த்துவிட்டனர்... அவர் முகம் வாடிப்போனது...
சில மணி நேரம் கழித்து என்னைச் சந்தித்தபோது, அவர் தொழுகையில் ஈடுபாட்டுடன் கலந்துகொண்டதற்காக எனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினேன். உடனே பொங்கி அழுத அவர், “நீ என்னை சந்தோஷப்படுத்தும் விதமாக நடந்துகொள்கிறாய்... சிலர் கேலி செய்றாங்களேடா...? இதுக்குத்தான் நான் வெக்கப்பட்டுட்டு கிடந்தேன்...” என்று சொன்னபோது, கேலி செய்தவர்கள் மேல் கோபமும், அவர் மீது பரிதாபமும் எனக்கேற்பட்டது.
சிறிது நேரம் அவரை அப்படியே விட்டுவிட்டு, “யாரும் எதையும் சொல்லட்டும்! அல்லாஹ்வைத்தானே தொழ வந்தீங்க...? அவனுக்கு சந்தோஷம்!! அதை மட்டும் மனசுல வச்சிட்டு தொழுங்க...” என்று கூறி ஆறுதல் படுத்தினேன்.
அன்று முதல் அவர் தொழுவதை நான் பார்த்துப் பார்த்து மகிழ்ந்தேன்...
இன்று அவர் இல்லை... அவர் சுற்றித் திரிந்த அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் சுற்றுச் சுவரும், அவர் தினமும் படுத்துறங்கும் வெளிப்பள்ளி வளாகமும் என் நெஞ்சில் நெடுநாட்கள் நீங்காமல் நிற்கும்.
7. Re:அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ ம... posted bysulaiman lebbai (riyadh-s.arabia)[25 August 2011] IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 7237
இன்னலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஊன்.வல்ல நாயன் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான சுவன பதிதனை கொடுத்து அருள்வானாக . ஆமீன். அவரை பிரிந்து வாடும் குடும்பத்தினர்கள் அனைவர்களுக்கும் எனது சலாதினை தெரிவித்து கொள்கிரேன்.
14. இந்த செய்திதனை காண என் கண்ணில் இருந்து posted byசட்னி.செய்யது மீரான் (காயல்பட்டினம்)[25 August 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 7252
அஸ்ஸலாமு அலைக்கும்.
எனது தனிப்பட்ட அன்பிற்கும்,பாசத்திற்கும் பாத்திரமான அன்பு அடுமை காக்காவின் வஃபாத் செய்தி இதோ கேள்வியுற்று அதிர்ச்சியடைந்தேன்.
வ இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் .
என்னை காணும் பொழுதெல்லாம் சட்னி அப்பா. சட்னி அப்பா என்று வாய் இனிக்க சிரித்த முகத்தோடு அவர்கள் அழைக்க என் மனம் எல்லாம் மகிழும்.. இந்த செய்திதனை காண என் கண்ணில் இருந்து என்னை மீறி கண்ணீர்மழை .
அவர்கள் நாங்கள் சிறுவராக இருக்கும் காலங்களில் சைக்கிள் வாடகை கடை வைத்து இருந்ததும், (நான் இன்று வரை சைக்கிள் ஓட்ட
தெரியாது போனது வேறு விஷயம்) அந்த கடையும், அவர்களின் கனிவோடு கூடிய கடமை உணர்வும், ஆரம்ப காலங்களில் மேல் சட்டை கூட அணியாது இருந்த காட்சியும் எங்கள் மனகண்ணில் வந்து செல்கிறது.
புண்ணியம் பூத்து குலுங்கும் இப்புனித ரமலானில் இறைவனின் திருப்பொருத்தத்தை நாடி சென்று விட்ட இந்த சீதேவியின் குடும்பத்தாருக்கு
அழகிய பொறுமைதனை அல்லாஹ் அளித்தருள்வானாக ஆமீன். எல்லாம் வல்ல அல்லாஹ் அவரது பாவப் பிழைகளைப் பொருத்தருளி, அவனது இல்லத்தைக 35 வருட காலம்மாக கட்டிக்காத்த அன்னாரது மறுமை வாழ்வை வெற்றியாக்கி, ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர்சுவனத்தை வழங்கிருள்வானாக ஆமீன்.
அவர்களது பிரிவால் வாடும் ஆயிரம் ஆயிரம் அன்பு நெஞ்சங்களில் நானும் ஒருவன்..
சட்னி.செய்யது மீரான்
ஸ்டார் ஹவுஸ் ,மொஹ்தூம் தெரு
காயல்பட்டினம்
15. Re:அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ ம... posted bySUPER IBRAHIM S.H. (RIYADH-K.S.A.)[25 August 2011] IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 7257
அஸ்ஸலாமு அலைக்கும்.
எனது தனிப்பட்ட அன்பிற்கும், பாசத்திற்கும் பாத்திரமான அன்பு அடுமை காக்காவின் வஃபாத் செய்தி இதோ கேள்வியுற்று அதிர்ச்சியடைந்தேன். வ இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் .
சிறு வயதினர் சண்டை போட்ட பொழுதெல்லாம் டே, டே, போங்கடா வீட்டுக்கு. யாண்ட ஓய்ற எடுகிறேங்க என்று சொல்லுவர்ஹள். அல்லாஹ் சுவன பதியை கொடுப்பானஹவும் ஆமீன்!!!
வருத்தமுடன்,
சூப்பர் இபுராஹிம் ச.ஹ.+ குடும்பத்தினர்
நஹ்வி சதக்கு ஹாபிள்.
16. CONDOLENCE posted byAHMAD NOOHU (HOLY MAKKAH)[25 August 2011] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 7258
BISMILLAH...ASSALAMUALAIKUM WRWB.INNA LILLAHI WA INNA ILAIHI RAJIOON.MAY ALMIGHTY ALLAH FORGIVE HIS SINS,ACCEPT HIS DEEDS AND HELP HIM TO ENTER JANNATHUL FIRDOUS
17. இன்னாலில்லாஹி ........... posted byN.S.E. மஹ்மூது (Kayalpatnam)[25 August 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 7259
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
எல்லாம் வல்ல அல்லாஹ்! மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து மேலான சுவனபதியை கொடுத்தருளவும் , அவர்களுடைய கப்ரை விசாலமாக்கி வைக்கவும் கிருபை செய்வானாக ஆமீன்.
அவர்கள் பிரிவால் வாடும் குடும்பத்தவர்கள், உறவினர்களுக்கு சப்ர் என்னும் பொறுமையை வல்ல அல்லாஹ்! கொடுத்தருள்வானாக ஆமீன். வஸ்ஸலாம்.
என் கண்ணியத் திற்குரிய அன்புக் அடிமை மாமா வபாத் செய்தி கண்டு ஆ... என்று அதிர்ச்சி அடைந்தேன். நான் ஊரில் இருந்த போது என் தாய் வீட்டிற்கு
செல்லும்போதெல்லாம் 'மருமகனே என்ன உம்மா வீட்டிற்கா' என்று குசலம் விசாரித்து அன்பு கலந்த அக்கறையை வெளி படுத்துவார்.
நான் சிறுவனாக இருந்த போது தாஜ் சைக்கிள் மார்டில் வேலை பார்த்த அவரிடம் சைக்கிள் எடுத்து பழகியதுண்டு. பழக இனிமையானவர். நல்ல பண்பாளர்.நோன்பு எட்டில் அவரை கடைசியாக பார்த்து விட்டு வந்தவன். சற்றும் எதிர் பார்கவில்லை.
நல்ல திடகாத்திரமாக தன 80 வயது அனுபவத்தை மறைத்து இளமையுடன் காட்சி தந்தார். புனித ரமலான் அவரை அழைத்துக்கொண்டது. வல்ல அல்லாஹ் அவரின் பாவபிளைகளை பொருத்து ஜனத்துள் பிர்தவ்ஸ் எனும் மேலான சுவனபதியை தந்தருள்வானாக!
எப்போதும் கலகலப்பாக இருந்த அடிமை காக்கா வபாத்தாகி விட்டார்கள் என்பதை அறிந்து மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன்எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் மண்ணறையை பிரகாசமாக்கி மேலான சுவனபதியில் நுழைய செய்வானாக .ஆமீன்
26. Re:அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ ம... posted byMUHAMED SHUAIB (kayalpatnam)[26 August 2011] IP: 122.*.*.* India | Comment Reference Number: 7283
சகோதரர் அடுமை அவர்கள் காலமானார் என்றே தகவலையே தங்களது இணையத்தளம் மூலமாகவே தெரிந்து கொண்டேன். {இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹீ ராஜிவூன் }
நான் ஊரில் ஊர்வாசியாக இருந்தும் இந்த செய்தியை கேள்விப்படாமல் இருந்தது துர்ரஅதிர்ஷ்டம் என்றே சொல்லவேண்டும். நாங்கள் படிக்கும் காலத்தில் அடுமைக்கு பீடியில் பொட்டுவெடி வைத்து கொடுத்த நினைவுகள் எல்லாம் நெஞ்சில் நிழலாடுகிறது. அன்னாரின் குடும்பத்தினர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.....!
27. Re:அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ ம... posted byshaik abbul cader (Kayalpatnam)[26 August 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 7289
CONDOLENCE
Assalamu alaikum wrwb.
INNALILLAHI WA INNA ILAIHI RAJIOON.
May Allah forgive his/her sins and accept his/her good deeds and give him/her a place in Jannathul Firdous.
I request the family members to be patient and Allah will give them reward in this world and in the hereafter.
20:55. இப் பூமியிலிருந்து நாம் உங்களைப் படைத்தோம்; அதனுள்ளேயே நாம் உங்களை மீட்டுவோம்; இன்னும், அதிலிருந்தே நாம் உங்களை இரண்டாம் முறையாகவும் வெளிப்படுத்துவோம்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அவ்லா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தார் அனைவருக்கும் அல்லாஹ் சப்ரன் ஜமீலா என்னும் பொறுமையை தந்தருள் புரிவானாக. ஆமீன்.
30. Re:அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ ம... posted byபாளையம் M.S. சதக்கத்துல்லா (Dammam, Saudi Arabia)[26 August 2011] IP: 89.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 7299
அடுமை காக்கா, யாரிடமும் அதிர்ந்து பேசாதவர். பார்க்கும் போதெல்லாம் சதக் தம்பி சுகந்தானா? என்று சுசம் விசாரிப்பார். நீண்ட காலம் அல்லாஹ்வின் வீட்டிற்கு பணிவிடை செய்தவர். வல்ல அல்லாஹ் அவருடைய பணியை பொருந்தி கப்ருடைய வாழ்கையை சுகந்தமாக்கி, மறுமையில் மேலான சுவர்கத்தை வழங்குவானாக! ஆமீன்.
31. Re:அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ ம... posted byCnash (Makkah )[26 August 2011] IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 7303
இன்னா லில்லாஹி வா இன்னா இலைஹி ராஜிஊன்!! பிறந்த நினைவு தெரிஞ்ச நாளில் இருந்து இன்று வரை உரிமையோடும் பாசத்தோடும் எங்க அப்பா வாப்பா முதல் எங்கள் வீட்டு பிள்ளைகள் வரை அனைவருக்கும் சொந்தமாக பழகியவர்..ஊருக்கு போகும் போடும் எல்லாம் தினமும் பார்க்கும் முகம்...நாளை ஊருக்கு போகிறேன்.. அவர் வபாத்தான செய்தியோடு... அலலாஹ் அவர்கள் பாவங்களை மன்னித்து உயர்ந்த பதவியை அளிப்பானாக!!
33. Re:அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ ம... posted byM.S. அப்துல் ஹமீது (Dubai)[27 August 2011] IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 7370
நான் ஊர் வரும்பொழுதெல்லாம் என்னைப் பார்த்தவுடன், “அடே... சாளே....” என்று உரிமையோடு அழைப்பவர்.
என் பாட்டனாரான காலஞ்சென்ற சாளை சுலைமான் லெப்பை அவர்கள் அல்ஜாமிஉல் அஸ்ஹர் பள்ளியிலேயே எப்பொழுதும் இருந்து பள்ளியின் நலனுக்காக உழைத்து வந்தார்கள். அப்பொழுது அடுமை காக்கா என் பாட்டனாரோடு சேர்ந்து பள்ளிக்கு ஊழியம் செய்து வந்தார்கள். அந்த நெருக்கத்தில் என்னை எப்பொழுது கண்டாலும் நான் சாளை அப்பாவின் பேரன் என்பதால் “அடே... சாளே...” என்று அழைப்பார்கள்.
கடந்த ஜூலையில் ஊர் சென்றிருந்தபொழுது கடைசியாக அடுமை காக்காவைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. கொஞ்சம் நொடிவு தெரிந்தது. அல்லாஹ் அவரின் பாவங்களைப் பொறுத்து, கப்றுடைய வாழ்வை இலேசாக்கி, சுவர்க்கத்தை அளிப்பானாக.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross