எல்.கே. மேனிலைப்பள்ளி ஆசிரியர்கள் ஏற்பாட்டில் இஃப்தார் (நோன்பு துறப்பு) நிகழ்ச்சி இன்று (ஆகஸ்ட் 24) பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் எம்.ஏ.முஹம்மத் ஹனீஃபா தலைமை தாங்கினார்.
ஆசிரியர் எம்.ஏ. புஹாரியின் வரவேற்புரையுடன் நிகழ்ச்சி துவங்கியது. அதனைத் தொடர்ந்து மவ்லவீ ஹாஃபிழ் சாவன்னா பாதுல் அஸ்ஹப் பாஃஸீ (பேராசிரியர், ஹாமிதிய்யா) - நோன்பின் மகத்துவம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக நகரப் பிரமுகர்களும், சிறப்பு அழைப்பாளர்களாக, அனைதது சமயங்களைச் சார்ந்த பள்ளியின் ஆசிரியர்களும் கலந்துக்கொண்டனர்.
இஃப்தாருக்குப் பின் பள்ளிக்கூட வளாகத்திலேயே மஃரிப் தொழுகை கூட்டாக (ஜமாஅத்துடன்) நிறைவேற்றப்பட்டது.
இவ்வாண்டு முதல் ரமழான் மாதத்தில், பள்ளிக்கூட நாட்களில், மாணவர்களின் வசதியைக் கருத்திற்கொண்டு லுஹர் மற்றும் அஸர் தொழுகைகள் பள்ளிக்கூடத்திலேயே கூட்டாக (ஜமாஅத்தாக) நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இஃப்தார் நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளி ஆசிரியர்களான எஸ்.ஏ.என். அஹ்மத் மீராதம்பி மற்றும் எம்.ஏ. புஹாரி ஆகியோர் செய்திருந்தனர்.
தகவல்:
M.W.ஹாமித் ரிஃபாய்
படங்கள்:
வீனஸ் ஸ்டூடியோ,
M.W.ஹாமித் ரிஃபாய் மற்றும்
எம்.எம்.ஷேக் முஹம்மத் ரிஃபாய்
|