எதிர்வரும் ஈதுல் ஃபித்ர் - நோன்புப் பெருநாளை முன்னிட்டு, காயல்பட்டினம் முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் மற்றும் காயல்பட்டினம் அரிமா சங்கம் ஆகிய அமைப்புகள் இணைந்து நகரிலுள்ள ஏழைப் பெண்களுக்கு இலவச உதவிப் பொருட்களை வழங்கின.
இதற்கான நிகழ்ச்சி 21.08.2011 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை தலைவர் ஹாஜி எம்.எம்.உவைஸ் தலைமை தாங்கினார்.
நகரப் பிரமுகர்களான ஹாஜி எஸ்.எம்.மிஸ்கீன் ஸாஹிப் ஃபாஸீ, காயல்பட்டினம் அரிமா சங்க தலைவர் ஹாஜி எஸ்.எம்.எம்.ஸதக்கத்துல்லாஹ், ஹாஜி பிரபு சுல்தான் ஜமாலுத்தீன், ஹாஜி பிரபுத்தம்பி, ஹாஜி ஏ.கே.கலீலுர்ரஹ்மான், ஹாஜி வாவு எம்.எம்.மொஹுதஸீம், அரிமா நிர்வாகச் செயலர் ஹாஜி வி.டி.என்.அன்ஸாரீ, அரிமா பொருளாளர் கே.அப்துர்ரஹ்மான், எல்.கே.மேனிலைப்பள்ளி தலைமையாசிரியர் எம்.ஏ.முஹம்மத் ஹனீஃபா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாணவர் எம்.ஏ.முஹம்மத் ஃபஹீம் அஸ்ஹர் கிராஅத் ஓதி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார். லேண்ட்மார்க் ஹாஜி ராவன்னா அபுல்ஹஸன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
காயல்பட்டினம் முஸ்லிம் மகளிர் உதவும் சங்க அமைப்பாளர் ஹாஜ்ஜா அ.வஹீதா நிகழ்ச்சி அறிமுகவுரையாற்றினார்.
அரிமா துணை ஆளுநர் உபால்டுராஜ் மெக்கன்னா, அரிமா மண்டலத் தலைவர் எல்.ராஜசீலன், அரிமா வட்டார துணைத்தலைவர் எம்.குணசேகரன் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்துகொண்டு காயல்பட்டினம் நகரின் ஏழைப் பெண்களுக்கு இலவச உதவிப் பொருட்களை வழங்கினர்.
காயல்பட்டினம் அரிமா சங்க செயல் செயலாளர் துளிர் எம்.எல்.ஷேக்னாலெப்பை நன்றி கூற, தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் தூத்துக்குடி மாவட்ட தலைவர் கத்தீப் மவ்லவீ எஸ்.எம்.முஹம்மத் ஃபாரூக் அல்ஃபாஸீ துஆவுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது. நிகழ்ச்சிகளனைத்தையும் ஆசிரியர் மு.அப்துர்ரஸ்ஸாக் நெறிப்படுத்தினார்.
படங்கள்:
வீனஸ் ஸ்டூடியோ,
எல்.கே.லெப்பைத்தம்பி சாலை, காயல்பட்டினம். |