Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
6:12:36 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7055
#KOTW7055
Increase Font Size Decrease Font Size
புதன், ஆகஸ்ட் 24, 2011
ரமழான் 1432: தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் காயலர்களின் இஃப்தார் - நோன்பு துறப்பு காட்சிகள்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3995 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (4) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கிலுள்ள தமிழ் முஸ்லிம் சங்க பள்ளியில் பல வகை உணவுப் பதார்த்தங்களுடன் தினமும் இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் காயல்பட்டினத்தைச் சார்ந்த மக்களும் பெருந்திரளாகக் கலந்துகொள்கின்றனர்.

பாங்காக் தமிழ் முஸ்லிம் சங்க அங்கத்தினரால் அனுப்பித் தரப்பட்ட சங்கத்தின் வரலாற்றுச் சுருக்கம் பின்வருமாறு:-

பாங்காக் தமிழ் முஸ்லிம் சங்க வரலாற்றுச் சுருக்கம்:
ஏறக்குறைய 40 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்த நாட்டைத் துறந்து, உழைத்துப் பொருளீட்டும் உயர்வான எண்ணத்தில் நூற்றுக்கும் சற்று குறைவான தமிழ் பேசும் முஸ்லிம் சகோதரர்கள் அமைதி தவழும் சியாம் என்றழைக்கப்படும் தாய்லாந்தின் தலைநகரமாம் பேங்காக்கில் தொழில் செய்து வந்தார்கள்.அதுசமயம், நமது இளைநர்கள் ஒருவருக்கொருவர் சந்தித்துக்கொள்ள, கருத்துபரிமாறிக் கொள்ள இனிய மாலைப்பொழுதுகளை இன்புற கழிக்க ஒரு பொது இடமின்றி தவித்தனர். பெரும்பாலான சமயங்களில் ஹோட்டல் லாபிகளில் அமர்ந்து நாட்டு நடப்புகள்,தொழில் விஷயங்களை பேசிக்கொள்வார்கள்.

அப்போது சிலோம் சாலையில் அமைந்திருந்த ராமா ஹோட்டல், விக்டோரியா, நாராய் லாபிகளில் அமர்ந்து கருத்துப் பரிமாறிக்கொள்வர். காயல்பட்டணம் ஹாஜி H.M..செய்யது உமர், ஹாஜி S.M.கலீல், கீழக்கரை ஜனாப் I.M..ஜாபிர், சி.ஹா எனும் சின்ன ஹமீது, ஜமால் முஹம்மது அப்துல் காதர் ஆகியோர் நமக்கென்று ஒரு அமைப்பு வேண்டும் என்று பேசி அப்போதைய மூத்த பிரமுகர்கள் கீழக்கரை குளோபல் டாக்டர் P.R.L.அபூபக்கர் ஹாஜி, சைய்யது சதக்கத்துல்லாஹ், தரங்கம்பாடி காசீம் மரைக்காயர், காரைக்கால் ஜக்கரியா மரைக்காயர், சாலிஹ் மரைக்காயர், முஸ்தபா மரைக்காயர், ரவூஃப் நானா, டி.எஸ்.முஹம்மது ஷா, அம்பகரத்தூர் ஹாஜி எம்.எம்.அப்துல்லாஹ், எம்.எம்.மாலிக் ஹாஜி, ஏ.எம்.செய்யது ஹாஜி....ஆகியோர்களை சந்தித்து நமக்கென்று ஒரு சங்கம் தேவை என்று வலியிறுத்தினர்.

தன்னலமற்ற சேவைகளை ஊக்குவிப்பதில் முதலிடம் வகிக்குமிவர்கள் அனைவரும் ஆலோசனை கலந்து, தேவை உணரப்பட்டு முறையாக தமிழ் முஸ்லிம் சங்கத்தை நிறுவினார்கள். வரலாற்றுச் சிறப்புமிக்க அதன் முதல் கூட்டத்தை 04.04.1975 அன்று சிலோம் நாராய் ஹோட்டலில் ஏற்பாடு செய்து துவக்க விழாவிற்கு சிராஜீல் மில்லத் அல்ஹாஜ் A.K.A.அப்துஸ்ஸமது M.A.,M.P.அவர்களை அழைத்து வாழ்த்தி சிறப்புரையாற்றச் செய்தனர்.

பேங்காக் தமிழ் முஸ்லிம் சங்கத்தின் முதல் தலைவராக கீழக்கரை குளோபல் டாக்டர் ஹாஜி P.R.L.அபூபக்கர் அவர்களும்,செயலாளராக தரங்கம்பாடி காசீம் மரைக்காயர் அவர்களும் இதர நிர்வாகிகளும் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.

இடம்:
நிர்வாகிகள் பொற்ப்பேற்ற பின்னர் சங்கம் செயல்படுவதற்காக M.T.S. மரைக்காயர் என்றழைக்கப்படும் மு.தம்பி சாஹிப் அவர்கள் ஜெனரல் போஸ்ட் ஆபீஸ் அருகிலுள்ள தனது சொந்த இடத்தை வாடகை ஏதுமின்றி சங்கம் நடத்த கொடுத்து உதவினார்கள்.

சங்கப்பதிவு:
அரசாங்க விதிமுறைப்படி சங்கத்தை பதிவு செய்ய வேண்டிய பொறுப்பை ஹாஜி சீர்காழி T.S.முஹம்மது ஷா அவர்கள் பொறுப்பு எடுத்துக்கொண்டு அவர்களுக்கு வேண்டிய உதவிகளை காரைக்கால் A.M.ஜக்கரிய்யா மரைக்காயர் அவர்கள் தனது அலுவலகத்தில் வைத்து செய்து கொடுத்து வந்தார்கள் என்பது குறிப்பிடதக்கது.

சங்கத்தின் முதல் சொந்தக்கட்டிடம்:
M.T.S.கட்டிடத்தில் செயல்பட்டு வந்த சங்கம் பின்பு தலைமை தபால் நிலையத்திற்கு எதிரிலுள்ள A.E. நானா கட்டிடத்தில் இடமாற்றம் செய்யப்பட்டது.பின்பு நமது சங்கத்திற்கென்று சொந்த கட்டிடம் தேவையென்று உணர்ந்து 1977ஆம் ஆண்டு புதிய கட்டிடம் வாங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

புதிய பள்ளிவாசலின் தோற்றம்:
சங்கத்தின் உறுப்பினரகளால் புதிய பள்ளிவாசல் கட்டப்பட வேண்டுமென்ற கோரிக்கை ஏற்கப்பட்டு, பேங்காக் தமிழ் முஸ்லிம் சங்கத்தின் உறுப்பினர்களிடம் மட்டுமின்றி, வெளிநாடு வாழும் தமிழ் பேசும் முஸ்லிம் மக்களிடமும் தாராள நிதியுதவி பெறப்பட்டு, நீடூர் ஹாஜி ஸலாஹுத்தீன் அவர்கள் பாங்காக் தமிழ் முஸ்லிம் சங்கத் தலைமைப் பொறுப்பை அலங்கரித்த காலத்தில், அல்லாஹ் உதவியால், ஹிஜ்ரீ 1427 ஷஃபான் முதல் நாள், கி.பி. 2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25ஆம் தேதியன்று புதிய பள்ளிவாசல் கட்டி முடிக்கப்பட்டு வக்பு செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

காயலரின் பங்களிப்பு:
தற்போது பள்ளியின் தலைவராக நமதூரைச்சேர்ந்த வாவு ஹாஜி எம்.எம்.சம்சுதீன் அவர்களும், துணைச்செயலாளராக அல் ஹாபிழ் அல் ஆலிம். எம்.ஏ.அபுல் ஹஸன் ஷாதுலி அவர்களும், நிர்வாகக்குழு உறுப்பினர்களாக மு.ஹ.செய்து முஹம்மது சாலிஹ் அவர்களும், மு.அ.முஹம்மது செய்து அவர்களும் சிறப்புற பணியாற்றி வருகிறார்கள்.

இஃப்தார் ஏற்பாடுகள்:
ரமழான் மாத்தில் நோன்பாளிகள் நோன்பு திறப்பதற்கு காயல் தினசரி கஞ்சி, சம்சா ரோல், பழ வகைகள், ரோஸ் மில்க், இளநீர் கடற்பாசி மற்றும் மஃரிப் தொழுகைக்குப்பிறகு சூடான காயல் தேனீரும், தராவீஹ் தொழுகைக்குப் பிறகு சூடான பால் – சிற்றுண்டி பரிமாறப்படுகிறது.





கியாமுல் லைல் தொழுகையை காயல்பட்டினத்தைச் சார்ந்த மவ்லவீ ஹாஃபிழ் ஷாதுலீ ஃபாஸீ, ஹாஃபிழ் சோனா அமீர் சுல்தான் ஆகியோரும் வழிநடத்துகின்றனர். மவ்லவீ ஹாஃபிழ் ஷாதுலீ ஃபாஸீ சென்ற ஆண்டுதான் திருக்குர்ஆனை முழுமையாக மனனம் செய்து முடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கியாமுல் லைல் தொழுகையின் இடைவேளையில் சுக்கு டீ, பிஸ்கட்டும், தொழுகை முடிந்ததும் சஹர் உணவாக வாழைப்பழத்துடன், பிரியாணி, நெய்ச்சோறு, களறி கறியுடன் கூடிய சாப்பாடு ஆகியவை காயல்பட்டினத்தைச் சார்ந்த பாலப்பா முத்து மொகுதூம் கைவரிசையில் ஆண்கள், பெண்கள் என சுமார் 500 பேருக்கு தமிழ் முஸ்லிம் சங்கத்தினரால் வழங்கப்பட்டு வருகிறது.



அனைத்துப் படங்களையும் தொகுப்பாகக் காண இங்கே சொடுக்குக!

பாங்காக் தமிழ் முஸ்லிம் சங்க பள்ளிவாசலில் தினமும் நடைபெறும் ஐவேளைத் தொழுகை, ரமழான் தராவீஹ், இஃப்தார், கியாமுல் லைல் உள்ளிட்ட நிகழ்வுகளை www.bangkok-mosque.com என்ற வலைதள முகவரியில் அசைபடமாக (வீடியோ) காணலாம். GPRS வசதி கொண்ட கைபேசிக் கருவியில், eagleeye என்ற மென்பொருளைப் பயன்படுத்தி, ஒளி/ஒலி (Audio/Video)யுடன் பெற்றுக்கொள்ளலாம்.

இவ்வாறு, பாங்காக் தமிழ் முஸ்லிம் சங்க அங்கத்தினர் அனுப்பித் தந்துள்ள வரலாற்றுச் சுருக்க மடலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தகவல்:
M.H.முஹம்மத் ஸாலிஹ்,
நிர்வாகக் குழு உறுப்பினர்,
பாங்காக் தமிழ் முஸ்லிம் சங்கம்.

படங்கள்:
கம்பல்பக்ஷ் அஹ்மத் இர்ஃபான்,
பாங்காக், தாய்லாந்து.


செய்தியில் சில வாசகங்கள் கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளன.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:ரமழான் 1432: தாய்லாந்து த...
posted by A.W.Md Abdul Cader Aalim bukhari (mumbai) [24 August 2011]
IP: 114.*.*.* India | Comment Reference Number: 7177

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

மாஷா அல்லாஹ் நல்ல தத்ரூபமாக நேரில் பார்ப்பதைப் போன்று எடுத்துள்ளார்கள்.

இதில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி

1)பாங்காக்கில் வ‌சிக்கும் ந‌மதூரைச் சார்ந்த‌வ‌ர்க‌ள் அனைவரையும் ஒரே நேர்த்தில் பார்க்கும் போது ஏற்பட்ட மகிழ்ச்சி.

2)எனது குடும்ப‌த்தினரை பார்க்கும் போது ஏற்பட்ட மகிழ்ச்சி. குறிப்பாக‌ என‌து த‌ம்பியை பார்த்த‌தில்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. .நல்ல உள்ளங்களுக்கு நெஞ்சார்ந்த பாராட்டுக்கள் .
posted by சட்னி .செய்யது மீரான் (காயல்பட்டினம் ) [24 August 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 7191

அஸ்ஸலாமு அலைக்கும்.

இங்குள்ள நடப்புகளை ,பெருமைகளை என் அன்பு தம்பி வேணா.எஸ்.எஸ் .பஸ்லுல் கரீம் மிக சுவைபட சொல்ல கேட்டு இருக்கிறேன். அவர் தற்சமயம் சவுதியில் இருந்தாலும் மூச்சிலும் ,பேச்சிலும் இதே எண்ணம் தான். அவர் சொன்ன பிரகாரம் எல்லாமே அப்படியே உள்ளதை ஒவ்வொரு படத்திலும் கண்டு மகிழ்ச்சி.
இவைகளை எல்லாம் பார்க்கும் பொழுது எங்களுக்கும் நேரில் வந்து காண ஆவல் மேலோங்குகிறது . நோன்பு திறக்க மட்டும் அல்லாது,இடையிலும் உணவு குடிப்பு,நோன்பு பிடிக்க என்று வகை வகையாக வழங்கி வருவது எனக்கு தெரிந்து உலகில் நீங்கள் மட்டும் தான் என அறிகின்றேன்.

இதற்காக வேண்டி உடலாலும் , நல்ல உள்ளத்தாலும்,செல்வத்தாலும் சேவைகள் செய்து நல்ல அமல்களோடு ,தவாபுகளையும் புனித மிகு ரமலானில் கொள்ளை கொள்ளும் நல்ல உள்ளங்களுக்கு நெஞ்சார்ந்த பாராட்டுக்கள் . வல்லோன் அல்லாஹ் இதற்கான நற்கூலி தனை இரு உலகிலும் உங்கள் அனைவருக்கும் தந்தருள் புரிவானாக ஆமீன்

இந்த அமைப்பு,பள்ளிவாசல் உருவாக எண்ணம் கொண்டோர் செயல் படுத்தியோர் ,சேவை செய்வோர்கள் அனைவரும் மதிக்க பட கூடிய மாமனிதர்கள் . விளக்கு நூர் முஹம்மது காக்கா கடந்த ஆண்டு புனித மிகு மக்கா வில் இருந்திர்கள் .தலைவர் சம்சுதீன் ஹாஜியார் அவர்கள் புனித உம்ரா செல்வதாக ஊர் வந்த இடத்தில சொன்னார்கள் .சென்று இருப்பார்கள் இதனால் இந்த நிகழ்வில் காணவில்லை .நாங்கள் ஜெட்டாஹ் வில் இருந்திருந்தால் சந்தித்து இருப்போம் .நல்லது

தம்பி புஹாரீ ,மருமகன் ஷாதுலி ஆலிம் , தம்பி அமீர் சுல்தான் ஹாபிஸா, முக்கியமாக பாலப்பா காக்கா (எங்க மருமகன் கல்யாண நிகழ்வு உள்ளது சீக்கிரமா வாங்கோ ) மற்றும் எல்லோரையும் காண மிகுந்த மகிழ்ச்சி .

அன்புடன்
சட்னி .செய்யது மீரான்
காயல்பட்டினம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:ரமழான் 1432: தாய்லாந்து த...
posted by Mohamed Salih (Bangalore) [25 August 2011]
IP: 121.*.*.* India | Comment Reference Number: 7198

மாஷா அல்லா..

ரெம்ப மகிழ்ச்சி. என்னுடைய அணைத்து நண்பர் பார்க்க சந்தோசமா இருக்கிறது ..

வஸ்ஸலாம் ..

பெங்களூர் இல் இருந்து ஸாலிஹ் ....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:ரமழான் 1432: தாய்லாந்து த...
posted by Vilacku Sithi Rabia (kayalpatnam) [25 August 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 7231

Masha Allah it give more pleasure to see. May Allah increase their health nd wealth.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved