காயல்பட்டினம் கற்புடையார் பள்ளி வட்டத்தில் அமைந்துள்ளது கடற்கரை முஹ்யித்தீன் பள்ளி.
வழமை போல இவ்வாண்டும் இப்பள்ளியில், பேரீத்தம்பழம் தண்ணீர் ஆகியவற்றுடன் கஞ்சி, வடை உள்ளிட்ட பதார்த்தங்களை உள்ளடக்கி நோன்பு துறப்பு (இஃப்தார்) ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இஃப்தார் - நோன்பு துறப்பு காட்சிகள் பின்வருமாறு:-
தினமும் இரவு 08.30 மணிக்கு இஷா தொழுகையும், அதனைத் தொடர்ந்து 08.45 மணிக்கு தராவீஹ் தொழுகையும் நடைபெறுகிறது. பள்ளி இமாம் அரபி அமானுல்லாஹ் தொழுகையை வழிநடத்துகிறார்.
பள்ளியைச் சுற்றியுள்ள குடும்பத்து பெண்களும் வெளிப்பள்ளியில் தொழுகையை ஜமாஅத்துடன் நிறைவேற்ற வந்து செல்கின்றனர்.
பள்ளியில் தொழ வரும் பெண்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதால், பள்ளியை விரிவாக்கம் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பள்ளியின் வரலாறு குறித்த விரிவான தகவலை காண இங்கே சொடுக்குக!
களத்தொகுப்பு மற்றும் படங்கள்:
M.W.ஹாமித் ரிஃபாய்,
காயல்பட்டினம். |