காயல்பட்டினம் அல்அமீன் நர்ஸரி மற்றும் துவக்கப்பள்ளி வளாகத்தில் கராத்தே தரத்தகுதியளிப்பு (grading) விழா 18.08.2011 அன்று இரவு 07.00 மணிக்கு நடைபெற்றது.
பள்ளி செயலாளர் ஹாஜி ஏ.சி.செய்துல்லாஹ் விழாவிற்குத் தலைமை தாங்கினார். பள்ளி நிர்வாகக்குழு உறுப்பினர் ஏ.எஸ்.அஷ்ரஃப் அலீ முன்னிலை வகித்தார். காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளியின் அரபி முதுகலை ஆசிரியர் ஜுபைர் அலீ கிராஅத் ஓதி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார்.
சென்செய் இர்ஃபான் கராத்தே பற்றி அறிமுகவுரையாற்றினார். எல்.கே.மேனிலைப்பள்ளியின் முதுகலை உயிரியல் ஆசிரியரும் கராத்தே பயிற்சியாளருமான எஃப்.செய்யித் அஹ்மத் கராத்தே கலை குறித்து சிறப்புரையாற்றினார்.
இவ்விழாவில், மலேசியாவைச் சார்ந்த ஷிஹான் டாக்டர் டோனி பொன்னையா, பள்ளியில் கராத்தே பயிலும் மாணவர்களிடையே திறனாய்வுத் தேர்வு நடத்தி தரத்தகுதியளித்து (Grading) வாழ்த்துரை வழங்கினார்.
நிறைவாக, பள்ளி நிறுவனர் எம்.ஏ.புகாரீ நன்றி கூற, துஆவுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது. இந்நிகழ்ச்சியில், அப்பள்ளியின் தலைமையாசிரியை, ஆசிரியையர், பெற்றோர் மற்றும் மாணவ-மாணவர்கள் கலந்துகொண்டனர். |