காயல்பட்டினத்திலுள்ள திருச்செந்தூர் - தூத்துக்குடி நெடுஞ்சாலையின் ஒரு பகுதியான கருத்தம்பி மரைக்கார் தெரு என்ற கே.டி.எம். தெருவின் தென்பகுதி முடிவில் அமைந்துள்ள தாயிம் பள்ளிவாசல், நகரின் புராதன பள்ளிகளில் ஒன்றாகும்.
வழமை போல் இவ்வாண்டும் - இப்பள்ளியில் கஞ்சி விநியோகம் மற்றும் நோன்பு துறப்பு (இஃப்தார்) ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
2. Re:ரமழான்-1431: தாயிம் பள்ளி... posted byAbbas (USA)[22 August 2011] IP: 209.*.*.* United States | Comment Reference Number: 7109
சகோதரர் முஸ்தாக் சொன்னது போல் நெஞ்சமெல்லாம்
கனக்கிறது. நானும் என் நண்பன் வெள்ளியும் ஹவ்தில்
தவளை பிடித்த அனுபவம், சப்போட்டா பறித்து பள்ளி வளாக
மண்ணில் பழுக்க வைக்க செய்த முயற்சி, காதர் சுலைமான்
காக்காவிடம் வாங்கிய அடி...இப்படி பல நினைவுகள் நெஞ்சை வந்து அடைக்கிறது என்னை போல் ஊரை விட்டு ரொம்ப தூரமா உள்ள சகோதரர்களுக்கு இந்த மாதிரி நியூஸ் ரொம்ப ஆறுதல். புகைப்படங்களுடன் தந்த என் தம்பி மற்றும் சகோதரர்களுக்கு மிக்க நன்றி.
நாங்கள் வளர்ந்த காலத்தில் எப்போதுமே வெல்ல கஞ்சி தான், அதுக்கே அவ்வளவு கூட்டம் இருக்கும் இப்ப என்னாச்சு?
அப்பாஸ் மச்சான், இப்போ தான் முதன் முதலா எழுதி இருக்கான்னு நினைக்கிறேன். சந்தோசம். கடந்து போன காலம் வரவா போகிறது. வேண்டும் என்றால் எதிர்காலத்தில் எப்படி இருக்கலாம் என்று கடைசி போட்டோவை பார்த்து விட்டு கணக்கு போட்டுவை. எனக்கும் ஆயுசு கிடந்தால் நானும் உட்கார்த்து பழைய கதைகளை அரட்டை அடிப்போம். இன்ஷா அல்லாஹ்
6. Re:ரமழான்-1432: தாயிம் பள்ளி... posted byTariq (Jeddah)[23 August 2011] IP: 213.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 7139
அல்ஹம்து லில்லாஹ்.... நண்பன் அப்பாஸ் சொன்னதுபோல் ஊரை விட்டு ரொம்ப தூரமா உள்ள சகோதரர்களுக்கு இந்த மாதிரி நியூஸ் ரொம்ப ஆறுதல். சித்திகின் புகைப்படங்கள் அருமை. மாஷா அல்லாஹ் மூணா காக்கா நான் சின்ன வயதில் கஞ்சி வாங்கும் பொழுதில் இருந்தே அதே சுறுசுறுப்புடன் கஞ்சி ஊத்துகிறார்கள். நண்பன் ஜப்பான், சித்திக், ரயீஸ், கவுன்சலர் மைதீன், சம்சுதீன் அனைவரின் பணிகள் இதுபோல தொடர வாழ்த்துக்கள்...தாயிம் பள்ளி கஞ்சிக்கு என்று ஓர் தனி மனம், சுவை உண்டு என்பதை அனைவரும் அறிந்த ஒன்று....
7. Re:ரமழான்-1432: தாயிம் பள்ளி... posted byCnash (MAKKAH)[23 August 2011] IP: 91.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 7142
பழைய நினைவுகள்.....மற்றும் (நவாஸ் சொன்னது போல) எதிர்கால நினைவையும் அல்லாஹ் நாடினால் ஞாபகத்திற்கு கொண்டு வந்து இருக்கு இந்த கண்கொள்ள காட்சிகள்!!
அப்பாஸ்!! வெள்ளி செய்தஹ்மத் ஆட்டோகிராப் சொல்லும் போது கஞ்சிக்கு அரச்சி வச்ச மேவா சாமான் கொள்ளவிட்டுடு போய் திங்குறதுலாம் சொல்லவில்லையே பப்ளிக் என்று விட்டுட்டியா ஓகே !!
முஸ்தாக் காக்கா அஸ்ஸலாத்து அப்பாவை ஞாபக படுத்தி 1980 கூட்டிட்டு போயிட்டியோ !! ஊரில் எந்த தெருவிலும் இல்லாத ஒரு சிறப்பு என்றே சொல்லலாம் ! சஹர் முடிஞ்சதும் 10 -20 சிறுவர்களை (இன்னைக்கு முஷ்டாக், அப்பாஸ் மாதிரி பெரியவர்கள்) கூட்டிக்கொண்டு தாய்ம்பள்ளி முனையில் இருந்து அல்ஜாமிஉல் அஜ்ஹர் முனை வரை.... "அஸ்ஸலாத்து ஹைருன் மினன் நௌம்" என்று அரபியிலும் தூக்கத்தை விட தொழுகை மேலானது, தாய்மார்களே தொழுவுங்கள்... சகோதரர்களே தொழவாருங்கள்!! என்று தெருவழியாக நோன்பு நேரங்களில் சத்தம் போட்டு சிறுவர்களுடன் மக்களை தொழ அழைத்த விதம்..., ............. அல்லாஹ் அவர்களுக்கு அருள் புரிவான்
8. Re:ரமழான்-1432: தாயிம் பள்ளி... posted byahamed Kashim (chennai)[23 August 2011] IP: 121.*.*.* India | Comment Reference Number: 7143
அஸ்ஸலாமு அழைக்கும்
மறக்க முடியாத மலரும் நினைவுகள்
----- காதர் சுலைமான் அப்பாவின் அதிரும் பாங்கு
-------அக்கா Maraikka kaka வின் பூவரசை இலை சட்டினி
-------சேனா கூனா மாமாவின் ஈதப்பழம் supply
-------யூசுப் அப்பாவின் சிட்டி கஞ்சி
-------மற்றும் மானா கூனா மாமா, S k அப்பா, பால் துரை அப்பா,அப்து காகா செ.மறைக்கா காகா,இவர்களின் முதிர்ந்த கலகலப்பான பேசுக்கள் .
------மம்மாசன் மாமாவின் மக்ரிப் ஜமாஅத்
------அடுமை அப்பாவின் அமைதியான பேச்சு
------ இவர்கள் அனைவரும் நம்மை விட்டு சென்று விட்டாலும் அந்த இடத்தை பார்க்கும் போது மறக்கக முடியாத நினைவுகள். இவர்களுக்காக இந்த நல்ல நாளில் நாம் இறைவனிடம் பிராத்திப்போம்.
மச்சினன் அப்பாஸ், தம்பி முஸ்தாக் இது மட்டுமா இன்னும் நெரய அட்டகாசம் இருக்குமே. மறந்து இருப்பிங்க மச்சினன் சித்திக் போட்டோ சூப்பர் மூணா காகா பேரன் கஞ்சி வாங்க வர வில்லையா (அடேய் ரபீகு வெரசா வா)
9. Re:ரமழான்-1432: தாயிம் பள்ளி... posted byAbbas (USA)[23 August 2011] IP: 209.*.*.* United States | Comment Reference Number: 7154
மச்சான் எல்லா பெரிய ஆட்களையும் நினைவு படுத்துனதுக்கு ரொம்ப நன்றி....அதுல ரொம்ப ஸ்பெஷல் அக்கா மறைக்கா மாமாவும் அவங்கட சட்னி அப்புறம் ரபீக் வெரசா வாவும் சூப்பர். உங்க batch மாதிரி ஒன்னு இனிமே வருமா தெரியாது
சீனா நீ சொன்ன மாதிரி எல்லாமும் சொல்ல முடியாது இங்கே..வெள்ளியோட ஆட்டோகிராப் ரொம்பவே நீளம், முக்கியமா ஒரு நாள் கிப்லாவே மாறி தக்பீர் கட்டினது மறக்க முடியாது அவன் கிட்டே கேட்டு பார் இன்னும் சிரிப்பு வரும். யாரு அதிகமான சிட்டி கஞ்சி குடிசான்னு competition நடக்கும் அதுலயும் நம்ம ஆளு தான் first
நவாஸ் மச்சான் இப்ப தாண்டா இங்கே first கமெண்ட் பண்றேன் என்னோட சேர்ந்து உட்கார்ந்து பேச உன்னால அந்த வயசுல நடந்து வர முடியுமா தெரியல ஹிஹிஹிஹி
சகோ ஜியாவுதீன் உங்கள பார்த்து வருஷம் என்னாச்சு? மற்றும் தாரிக் கம்மேன்ட்ச்கு நன்றி. இந்த மாதிரி ஊரோட மெசேஜ் புகைப்படத்தோட போட்டா நல்லா இருக்கும்.
11. இந்த கருத்து பதிவில் புதிய முகங்களாக வந்துள்ளஅன்போடு வரவேற்கின்றோம் posted byசட்னி.செய்யது மீரான் (காயல்பட்டினம்)[23 August 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 7162
அஸ்ஸலாமு அலைக்கும்.
நண்பர் காசீம் அத்தனை நபர்களையும்
நினைவில் வைத்து அழகான கவிதை
வடித்துள்ளார். காசீம் புலவர் அப்பாவின் உண்மை
வாரிசு என்று நிருபித்து விட்டார்,
விட்டேனா பார் என்று தம்பியும்
மக்காஹ்வில் இருந்து அதை விட
அழகாக வடித்துள்ளார் .கன்னி முயற்சி வாழ்த்துக்கள் .
ரொம்ப நாளைக்கு பிறகு இந்த வருடம் நோன்பில்
கொஞ்ச நாள் இருந்து விட்டு காயலையும்,கஞ்சியையும்
கனத்த நெஞ்சோடு பிரிந்து சென்றுள்ளார்
ஸாலிஹ் எனக்கு கஞ்சி குடிக்கும் பொழுது
உன் நினைவும்,வாங்கும் பொழுது உன் மகன் சாபிர்
நினைவாகவே உள்ளது .நல்லா துவா செய்யுங்கோ .
சீனா நம்மோ சீனாஅப்பாவையும் இந்த இனிய
நேரத்தில் நினைவு படுத்தி இருப்பிர்கள்.
மறைந்து வாழும் நம் முன்னோர்களுக்கு
ஒளிமயமான உன்னத உயரிய சுவன வாழ்வை
வல்லோன் அல்லாஹ் வழங்கிடுவனாக ஆமீன்.
இந்த கருத்து பதிவில் புதிய முகங்களாக வந்துள்ள
(சாளையார்கள்,ஜியாவூதீன்,நவாஸ்,
சீனா மற்றும் நான் போக ) அன்போடு வரவேற்கின்றோம்.
12. பசுமை நிறைந்த நினைவுகளே - பாகம் -2 posted bymusthak ahamed (mumbai)[24 August 2011] IP: 180.*.*.* India | Comment Reference Number: 7190
அஸ்ஸலாமு அலைக்கும் ரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹு ,
நோன்பு நாட்களுக்கும் தாயிம் பள்ளிக்கும் எனக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு ................மறக்ககூடாத மறந்து விட முடியாத நன்றியுடன் கூடிய நினைவுகள் அது.............
காசிம் காக்கா உங்களின் மானசீக அனுமதியுடன் இங்கே சில நினைவுகளை பதிவு செய்கிறேன்............ அனுமதித்தால் சிரியுங்கள்........ இல்லை எனில் மன்னித்து விடுங்கள்................... ஞாபகம் இருக்கிறதா............... ஒரு நோன்பு நாள்............ தெருவை படுத்திய பாடு..................தலையில்லா முண்டம்.......... இன்று நினைத்தாலும் சிரிப்பு வரும்............. அரிசி............ முட்டை................ பெயர் எழுதியது...................... மறந்திருக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறன்............
இன்றுதானே விஜய் டிவி இன் கலக்கபோவது யாரு........ சன் டீவி இன் அசத்த போவது யாரு... எல்லாம் ............. ஆனால் எண்பதுகளிலேயே அனைத்தையும் எங்கள் முன்னால் நடத்தியவர் நீங்கள் தானே ............ மிமிக்ரி பற்றி உங்கள் மூலம் தான் எனக்கு அறிமுகம் கிடைத்தது....
நம் தெருவில் இப்போது உள்ள பட்டபெயர்களில் பாதி நீங்கள் வைத்துதானே................. லங்கு மங்கு ......... பிந்தரன்வாலே....... இன்னும் நிறைய ..
நகைச்சுவை தாண்டி ...........
.காசிம் காக்கா நீங்கள் என்னை ஏமாற்றி விட்டீர்கள்..............
அப்போது சூப்பர் மார்க்கெட் பரவலாக மக்களால் அறியப்படாத காலம் அப்போதே அதை பற்றி சிந்தித்தவர் நீங்கள்........... இப்போது புழக்கத்தில் உள்ள ஆட்சி மசாலா சமாச்சாரங்கள் அன்றே உங்கள் கனவு..................
கண்கள் விற்று ஓவியம் வாங்கி வைத்துள்ளீர்கள்...............
மிகவும் திறமையும் ஆளுமை திறனும் கற்பனா சக்தியும் கொண்ட ஜமான் காக்கா, நான் ஆரம்பத்தில் ரசித்த எனக்கு உந்து சக்தியாய் இருந்த இஸ்மாயில் காக்கா............. அருமையான கலைஞர்.........
அடுத்த சேவை செம்மல் விருதுக்கு எல்லா தகுதிகளும் உள்ள ALS மாமா...... எனக்கு எல்லா விதங்களிலும் உதவியாக இருந்தவர்........ எனக்கு மட்டுமல்ல காயலின் எண்ணற்ற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு எற்படுத்தி கொடுத்தவர்............கல்லூரி ஆரம்பத்தின் போது கல்விக்கட்டணம் செலுத்த முடியாமல் தவித்த போது தனவந்தர்களை அறிமுகப்படுத்தி அவர்களிடம் எனக்காக வேண்டி உதவி கோரி நின்றவர்..........
என் மேல் மாறாத அன்பு கொண்ட msl வாப்பா சேனா கூனா மாமா , எனக்கு முதன் முதல் புது பேன்ட் வாங்கி தந்த எனது அருமை நண்பன் தாவூத் வாப்பா, இப்பவும் என்னை ஆச்சர்யம் கொள்ள செய்யும் மிக பொறுமையும் நேர்மையும் கொண்ட தவுலத் காக்கா...... இன்று எல்லோராலும் பெருமையாக சொல்லப்படும் ரியல் எஸ்டேட் பிசினஸ் ஐ அன்றே ஆடம்பரம் இல்லாமல் சைக்கிளில் செய்த யாசீன் காக்கா.......... முதன் முதலாக எனக்கு பரிசு ஓன்று வாங்கி தந்த மர்ஹூம் தப்பட்டை பஷீர் காக்கா. மேலும் "அல்லாபிச்சை நல்லா வருவான் வருவான்" என்று துஆ செய்த தாயிம் பள்ளி ஜமாஅத் பெரியவர்கள்..............
இவற்றுக்கெல்லாம் மேலாய் என்னை நானக்கிய எனது அருமை தோழன்................... நண்பனே............. உன்னுடனான நெருக்கம் எப்போது தொடங்கியது........................
எனக்கு ஏற்பட்ட அவமானங்களின் வழியில் இருந்து வழிந்த கண்ணீரை உன் கைகளில் தாங்கிய தருணத்திலா........... உன் எண்ணமும் என் எண்ணமும் வான வெளியில் சந்தித்துக்கொண்ட அந்த நிமிடத்திலா............... நான் நினைத்த பாடலை நீ பாடி வந்த பொழுதிலா....... உன் வீட்டு விசேஷங்களில் எனக்காகவும் இருக்கை ஒதுக்கிய சந்தோசத்திலா.............. என் முதல் கவிதையை ரசித்த அந்த ஒத்த ரசனையிலா............. இன்னும் சொல்ல என்னுள் எராளம் உண்டு.............. அது பற்றி இன்னொரு சந்தர்பத்தில் முழுமையாய் பகிர்ந்து கொள்ளலாம்.
இதோ இந்த தாயிம் பள்ளி வாசலின் பெரிய கதவருகேதான் இளந்தென்றல் கையெழுத்து பிரதி கருவானது..............
இன்றும் மனதிற்கு இதம் தரும் இனிய நினைவுகள்......
தம்பி சித்தீக்.............. நன்றிகள்..................... காயல்பட்டணம்.காம்............... நன்றிகள்.................................
13. நாங்களும் உங்கள் உலகத்தில்! posted bykavimagan (dubai)[24 August 2011] IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 7194
அருமை நண்பர்களே! உங்களுடைய மாறாத மலரும்
நினைவுகளால், இந்தப்பகுதியே ஓர் இலக்கியப் பெட்டகமாக
மாறி இருக்கிறது. கேட்டிராத அஸ்ஸலாத்து அப்பாவின் ஹதீஸ் எங்கிருந்தோ காதில் ரீங்காரம் செய்கிறது. கண்டறியா
காசிம் காக்காவின் குறும்புகள் கண்முன்னே நிழலாடுகிறது.
படிக்காத இளந்தென்றல் இதயத்தில் வீசுகிறது. என்பதுகளின்
வாசம் சுவாசத்தில் கலக்கிறது. அறிமுகமே இல்லாத ஏ.எல்.எஸ்.மாமாவை மனது தேடுகிறது. மொத்தத்தில் உங்களில் ஒருவனாக சங்கமிக்க வாய்ப்பு இல்லாமல் போய்
விட்டதே என்று ஏங்குகிறது.அதனால் என்ன? தாயிம் பள்ளியைக் கடக்கும் போதெல்லாம் உங்கள் நினைவு தூரத்து
அலைகளாய் இதயத்தை உரசிச்செல்லும்.
எனது ஆசான்,தோழப்பா எஸ்.எம்.பி.அவர்கள் வாழ்ந்த அந்த
தெரு,அதன் மக்கள், அத்தோடு சேர்த்து முகமறியா உங்களைப்
போன்ற நண்பர்களுடன் ஒன்றிப்போனதாக உணர்கிறேன்.
உங்கள் அனைவருக்காகவும் துஆ செய்கிறேன். நன்றிகள் பல!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross