காட்டு தைக்கா தெருவில் அமைந்துள்ள காட்டுத்தைக்கா அரூசிய்யா பள்ளி வாசல் ஜமாஅத் சார்பாக - பள்ளி புனர் நிர்மாணம் குறித்து கோரிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
மிகச்சிறந்த முதலீட்டிற்கான அரிய வாய்ப்பு - அரூசிய்யா பள்ளி
அன்பின் முஸ்லிம் சகோதர, சகோதரர்களே!
உங்கள் அனைவருக்கும் காயல்பட்டினம் காட்டு தைக்கா அரூசிய்யா பள்ளி கட்டிட கமிட்டியின் அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்),
அல்லாஹ்வின் அருட்பெரும் கிருபையால் நமது பள்ளியின் புனர் நிர்மாணப் பணிகள் சிறப்புற நடைபெற்று அதன் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ள தருணத்தில் - இந்த இறை இல்லம் அழகுற கட்டி முடிக்கப்பட இன்னும் பொருளாதார தேவை எஞ்சி நிற்கிறது.
மறுமைக்கான ஒரு சிறந்த முதலீட்டு வாய்ப்பை எதிர்பார்த்து இருக்கும் அத்துணை சகோதர சகோதரிகளும் இறைவன் தங்களுக்கு வழங்கி இருக்கும் செல்வத்திலிருந்து தாரளாமாக அவனது இல்லப்பணியில் முதலீடு செய்து மறுமையில் அதன் முழு இலாபத்தையும், பயன்களையும் பெற்றுக் கொள்ள இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளும்படி உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
மேலும் நம்மை படைத்த அல்லாஹ்வின் அருளை இவ்வுலகிலும், மறு உலகிலும் பெற்றுக் கொள்ளும் நல அடியார்களாக நம் அனைவரையும் ஆக்கி அருள பிரார்த்திக்கிறோம்.
யார் அல்லாஹ்வுக்காக சிறிய அளவிலோ பெரிய அளவிலோ பள்ளிவாசல் கட்டுகிறாரோ அவருக்கு அல்லாஹ் சொர்க்கத்தில் ஓர் இல்லத்தை கட்டுகிறான் [நபிமொழி: திர்மிதி]
காட்டு தைக்கா அரூசிய்யா பள்ளி
Central Bank of India A/C No.2081263358
இங்ஙனம்,
கட்டிட கமிட்டியினர்,
காட்டு தைக்கா அரூசிய்யா பள்ளி.
இவ்வாறு அக்கோரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
ஹாஜி எஸ்.ஐ. புஹாரி,
மொகுதூம் தெரு.
|