அண்மையில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற பலவகைப் போட்டிகளில் காயல்பட்டினம் எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின் மாணவியர் சிறப்பிடங்களைப் பெற்று சாதனை புரிந்துள்ளனர்.
தூத்துக்குடி ஹோலி க்ராஸ் மெட்ரிக் மேனிலைப்பள்ளியில் நடைபெற்ற தென்மாவட்ட அளவிலான கலை - இலக்கியப் போட்டியில், எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின் ஏழாம் வகுப்பு மாணவி எஸ்.ஜே.சிராஜ் முவஃப்ஃபிகா இளம் விஞ்ஞானி போட்டியில் முதல் பரிசைப் பெற்றுள்ளார்.
சமையல் போட்டியில், பதினொன்றாம் வகுப்பு மாணவி ஜஹ்ரா வாசிஆ மூன்றாம் பரிசைப் பெற்றுள்ளார்.
மேலும், திருச்செந்தூர் செந்தில் குமரன் அரசு பெண்கள் மேனிலைப்பள்ளி நடத்திய தடகளப் போட்டியில், எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின் எட்டாம் வகுப்பு மாணவி பி.எம்.ஏ.ஸாரா, 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் இரண்டாவது பரிசும், உயரம் தாண்டுதலில் இரண்டாவது பரிசும், வட்டு எறிதலில் மூன்றாவது பரிசும் பெற்றுள்ளார்.
திருச்செந்தூரில் நடைபெற்ற சுதந்திர தின 65ஆவது ஆண்டு விழா ஓவியப் போட்டியில், எட்டாம் வகுப்பு மாணவி எஸ்.ஏ.உல்ஃபத் நான்காம் பரிசைப் பெற்றுள்ளார்.
பரிசுகளை வென்று பள்ளிக்குப் பெருமை சேர்த்தமைக்கா, மாணவியரை பள்ளி தலைவர் ஹாஜி எஸ்.அக்பர்ஷா, தலைமையாசிரியை மீனா சேகர் மற்றும் ஆசிரியையர் பாராட்டினர். |