சிங்கப்பூர் டன்லப் வீதியில் அமைந்துள்ளது மஸ்ஜித் அப்துல் கஃபூர் பள்ளி. இப்பள்ளியில், ஆண்டுதோறும் ரமழான் 27ஆம் இரவில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழமை. அதனடிப்படையில், 26.08.2011 அன்று பின்னிரவில் நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சிகள் காயல்பட்டினம் முஹ்யித்தீன் டிவியில் நேரலை செய்யப்படுகிறது. இதுகுறித்து, முஹ்யித்தீன் டிவி இயக்குனர் ஹாஜி ஜே.எம்.அப்துர்ரஹீம் காதிரீ வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
சிங்கப்பூர் டன்லப் வீதியில் அமைந்துள்ளது மஸ்ஜித் அப்துல் கஃபூர் பள்ளி. இப்பள்ளியில், ஆண்டுதோறும் ரமழான் 27ஆம் இரவில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழமை. அதனடிப்படையில், இவ்வாண்டு ரமழான் 27ஆம் நாள் இரவு சிறப்பு நிகழ்ச்சிகள் 26.08.2011 வெள்ளிக்கிழமையன்று பின்னிரவில் நடைபெறுகிறது.
சிங்கப்பூர் நேரப்படி இரவு 09.00 மணி முதல் 10.15 மணி வரை தராவீஹ் தொழுகையை, பள்ளியின் இமாம் மவ்லவீ ஹாஃபிழ் உமர் ரிழ்வானுல்லாஹ் மஹ்ழரீ ஃபாழில் ஜமாலீ, ஹாங்காங் கவ்லூன் பள்ளியின் இமாம் மவ்லவீ ஹாஃபிழ் எம்.ஏ.கே.ஷுஅய்ப் நூஹ் மஹ்ழரீ ஆகியோர் வழிநடத்துகின்றனர்.
இரவு 10.20 முதல் 10.25 மணி வரை கத்முல் குர்ஆன் ஓதி, துஆ இறைஞ்சப்படும். இரவு 10.25 மணி முதல் 10.35 மணி வரை வித்ர் தொழுகையை மஸ்ஜித் அப்துல் கஃபூர் பள்ளியின் இமாமும், மத்ரஸா Mifthahul Uloom தலைமையாசிரியருமான மவ்லவீ நஹ்வீ ஏ.எம்.முஹம்மத் இப்றாஹீம் வழிநடத்துகிறார்.
இரவு 10.35 மணி முதல் 10.55 மணி வரை மவ்லவீ ஹாஃபிழ் உமர் ரிழ்வானுல்லாஹ் மார்க்க சொற்பொழிவாற்றுகிறார். 10.55 மணி முதல் 11.20 வரை திக்ர் மற்றும் துஆ நிகழ்ச்சி நடைபெறுகிறது.
11.20 முதல் 11.30 மணி வரை தபர்ருக் எனும் நேர்ச்சை வினியோகம் நடைபெறுகிறது. இரவு 12.00 மணி முதல் 12.30 மணி வரை தஸ்பீஹ் நஃபில் தொழுகை நடைபெறுகிறது.இரவு 12.30 மணி முதல் அதிகாலை 01.30 மணி வரை குர்ஆன் மஜ்லிஸ் நடைபெறுகிறது.
அதிகாலை 03.30 மணி முதல் 04.30 மணி வரை கியாமுல் லைல் தொழுகை நடத்தப்படுகிறது. இத்தொழுகையை மவ்லவீ ஹாஃபிழ் உமர் ரிழ்வானுல்லாஹ், மவ்லவீ ஹாஃபிழ் எம்.ஏ.கே.ஷுஅய்ப் நூஹ் ஆகியோர் வழிநடத்துகின்றனர்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இவை அனைத்தும் உள்ளூர் தொலைக்காட்சியான முஹ்யித்தீன் தொலைக்காட்சியிலும், முஹ்யித்தீன் டிவி இணையதளம் www.muhieddeentv.com இலும் - இரவு 11:30 மணி முதல் - நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளன.
இந்நேரடி ஒளிபரப்பை www.kayal.tv இணையதளத்தின் முஹ்யித்தீன் தொலைக்காட்சி பக்கத்திலும் காணலாம்.
செய்தியில் சில வாசகங்கள் இணைக்கப்பட்டுள்ளன. |