இந்திய தலைநகர் புதுடில்லியில் வாழும் காயலர்கள் நேற்று (ஆகஸ்ட் 27) நோன்பு துறப்பு (இஃப்தார்) நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
இதில் டில்லியில் குடும்பங்களுடன் இல்லாமல் தனியாக வாழும் காயலர்கள் ஏராளமானோர் கலந்துக்கொண்டனர். ஹாஃபிழ் M.A.C. அஹ்மது தாஹிர், ஹாஃபிழ் S.M.M. மஹ்மூத் லெப்பை, ஹாஃபிழ் M.K. அப்துர் ரஹ்மான் உள்ளிட்ட காயலர்கள் இதற்கான
ஏற்பாட்டினை செய்திருந்தனர்.
இந்நிகழ்ச்சியில் காயல்பட்டினம் கறி கஞ்சி, கட்லெட், பஜ்ஜி வகைகள், சிக்கன் பக்கோடா, ரூஹாஃப்ஸா குளிர்பானம், கடற்பாசி, ப்ரூட் சாலட் மற்றும் காயல்பட்டினம் பலவகை உணவுப் பதார்த்தங்கள் பரிமாறப்பட்டன.
இஃப்தார் நிகழ்ச்சிகள் நிறைவுற்ற பின் அங்கேயே மஃரிப் தொழுகை கூட்டாக (ஜமாஅத்தாக) நிறைவேற்றப்பட்டது.
இஃப்தார் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இளைஞர்கள் டெல்லியிலுள்ள அனைத்து காயலர்களையும் அரவணைத்து, விரைவில் காயல் நல மன்றம் ஒன்றை துவக்க
வேண்டுமெனவும், அதற்கு தாங்கள் முழுமுனைப்புடன் செயல்பட ஆயத்தமாக உள்ளதாகவும் தெரிவித்தனர்.
தகவல்:
ஹாஃபிழ் M.A.C. அஹ்மது தாஹிர் மற்றும் ஹாஃபிழ் S.M.M. மஹ்மூத் லெப்பை
|