அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்மா பள்ளி ஏற்பாட்டில் இன்று காலை காயல்பட்டின கடற்கரையில் நோன்பு பெருநாள் தொழுகை நடைபெற்றது. 7:45 மணிக்கு துவங்கிய தொழுகையில் ஏராளமானோர் கலந்துக்கொண்டனர்.
தொழுகையை பள்ளியின் இமாம் நெய்னா முஹம்மது வழிநடத்தினார்.
அதனை தொடர்ந்து பள்ளியின் கத்தீப் அப்துல் மஜீத் மஹ்லரி - உரை நிகழ்த்தினார்.
ஐ.ஐ.எம். பைத்துல்மால் வகைக்காக கூடியோரிடம் நிதி திரட்டப்பட்டது. ஆண்கள் பகுதியில் இருந்து ரூபாய் 52,262 ரூபாயும், பெண்கள் பகுதியில் இருந்து ரூபாய் 53,039 ரூபாயும், ஆக மொத்தம் 1,05,301 ரூபாயும், இரண்டு தங்க மோதிரமும் பெறப்பட்டது.
கூடுதல் படங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
புகைப்பட உதவி: எம்.எஸ். அஹ்மத் சாஹிப் எம்.ஏ. இஜாஸ் மீரான்
மற்றும் வீனஸ் ஸ்டூடியோ
காயல்பட்டினம்.
2. Re:நோன்பு பெருநாள் - 1432: க... posted byPalappa Ahmed (Dammam - Seiko)[30 August 2011] IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 7461
Masha Allah. நம் ஊர் மக்களை பார்க்க ரொம்ப சந்தோஷம். எல்லோருக்கும் என் இனிய பெருநாள் நல்வாழ்த்துக்கள். நீங்க Saudi Arabia வை பின்பற்றி இருப்பது ரொம்ப வரவேற்கத்தக்கது. என் friend Nawas ஐ ரொம்ப வருஷம் கழிச்சு பார்க்கிறேன். சந்தோஷம். இந்த வருஷம் நம் ஊரில் எத்தனை பெருநாள்?
அனைவர்களுக்கும் புனித நோன்புப் பெருநாள் நல் வாழ்த்துக்கள்.
எல்லோரும் எல்லா வளமும் பெற்று நலமாகவும், ஒற்றுமையாகவும் வாழ வாழ்த்துகிறேன்.
இந்த ஒற்றுமை என்ற வார்த்தைதான் மிகவும் கஷ்டமான வார்த்தையாக தெரிகிறது. ஒரே குடும்பத்தில் எத்தனை பெருநாட்களோ..ஒன்று முடிந்துவிட்டது..
நான் பெருநாள் தொழுதுவிட்டு, 4 பரோட்டாக்கள் பார்சல் வாங்கிவந்து அடித்துவிட்டு கமெண்ட்ஸ் தட்டுகிறேன்.( பரோட்டா பார்சலை திறந்து பார்த்தால், 4 குட்டி அப்பளம் போல ஒரு வாய்க்கு கூட பத்தவில்லை, அம்புட்டு பெருசு, அம்புட்டு விலை - இவ்வளவு அநியாயமா ஊரில்).
9. Eid Ul Fitr Mubarak posted byIbrahim Ibn Nowshad (Cehnnai)[30 August 2011] IP: 119.*.*.* India | Comment Reference Number: 7470
It is great pleasure to see Kayal Beach and people gathered together to follow the Sunnah of Prophet Mohamed Sallallahu Alaihiwasalam. Eid Ul Fitr wishes to all.
10. Re:நோன்பு பெருநாள் - 1432: க... posted byvilack syed mohamed ali (Kangxi , Jiangmen , China)[30 August 2011] IP: 121.*.*.* China | Comment Reference Number: 7476
அனைவருக்கும் பெருநாள் வாழ்த்துக்கள். புகைப்படங்களை பார்க்கும்போது சந்தோசமாக உள்ளது. ஆனால் ஊர் இரண்டாகி விட்டதே என்று நினைக்கும்போது சற்று வருத்தமாகவும் உள்ளது.
என் அருமை கண்மணி நவாஸை நீண்ட வருதங்களுக்கு பிறகு பார்கிறேன்...மச்சான் சுகமா இருக்கிரியாடா...உன்ன தேடுது என் கண்மணி...வீட்டுல எல்லோருக்கும் என் பெருநாள் வாழ்த்து சொல்லு....
12. Re:நோன்பு பெருநாள் - 1432: க... posted byMUHAMED SHUAIB (KAYALPATNAM)[30 August 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 7480
நண்பர்கள் அன்பர்கள் சக தோழர்கள் அனைவர்க்கும் எனது "ஈத் பெருநாள்" வாழ்த்துக்கள் தம்பி ஜியாவுதீன் இந்த பெருநாள் நேரத்தில் எதற்கு பரோட்டா கடைக்கு போனார்..? வீட்டில் வட்டிலாப்பம் வைக்கவில்லையா...? சகோதரரே....! ஊரின் விலைவாசியை ஜியா இப்போதாவது நேரில் அறிந்த வரைக்கும் நல்லது
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross