நடப்பாண்டு ரமழான் மாதத்தை முன்னிட்டு, காயல்பட்டினம் மஸ்ஜிதுல் உஸ்ஃபூர் – குருவித்துறைப் பள்ளியில் தராவீஹ் சிறப்புத் தொழுகையை பொறுப்பேற்று வழிநடத்திய ஹாஃபிழை கண்ணியப்படுத்தும் நிகழ்ச்சி 28.08.2011 அன்று இரவு 10.30 மணியளவில் வெளிப்பள்ளி வளாகத்தில், பள்ளியின் துணைத்தலைவர் நஹ்வீ இ.எஸ்.புகாரீ ஆலிம் தலைமையில் நடைபெற்றது. பள்ளியின் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
துவக்கமாக, மவ்லவீ ஹாஃபிழ் எச்.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் மஹ்ழரீ உரையாற்றினார். தொழுகை நடத்துமிடங்களில் ஹாஃபிழ்கள் நடந்துகொள்ள வேண்டிய ஒழுக்க விழுமியங்கள் குறித்து அவர் தனதுரையில் விளக்கிப் பேசினார்.
பின்னர் ஹாஃபிழ்களை கண்ணியப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளியில் தராவீஹ் தொழுகையை பொறுப்பேற்று வழிநடத்திய ஹாஃபிழ் எம்.எஸ்.ஹஸன் ஷாக்கிர், அண்மையில் காயல்பட்டினம் அஹ்மத் நெய்னார் பள்ளியில் ஒரே நிலைத்தொழுகையில் முழு குர்ஆனையும் ஓதி முடித்த ஹாஃபிழ் ஜே.எம்.ஷெய்கு அப்துல் காதிர் ஆகிய மத்ரஸா ஹாமிதிய்யா மாணவர்களுக்கு பணமுடிப்பு வழங்கி கண்ணியப்படுத்தப்பட்டது.
இது தவிர, நடப்பு ரமழானின் அனைத்து நாட்களிலும் தராவீஹ் தொழுகை நடத்த வழமையாக வந்த ஹாஃபிழ்கள் ஹாங்காங் கம்பல்பக்ஷ் ட்ரேடிங் கார்ப்பரேஷன் நிறுவனம் சார்பில் ஊக்கத்தொகை வழங்கி கண்ணியப்படுத்தப்பட்டனர்.
இந்நிகழ்ச்சியில், பள்ளியின் மஹல்லா ஜமாஅத்தினர் திரளாகக் கலந்துகொண்டனர்.
களத்தொகுப்பு:
M.W.ஹாமித் ரிஃபாய்,
காயல்பட்டினம். |