செய்தி: மூன் டிவியின் மறைகுர்ஆன் மாநிலந்தழுவிய மனனப் போட்டியில் முதலிடம் வென்ற மாணவர் முஃபீஸுர்ரஹ்மானுக்கு அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் நிர்வாகம் பாராட்டு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
உலக கல்வி posted byK.A.FAIZAL (madurai)[06 January 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 15656
அஸ்ஸலாமு அலைக்கும்.அருள்மறை குர்ஆன் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்.
மக்கி நூஹுதம்பி அவர்களின் கவனத்திற்கு,உலக கல்வியோடு சேர்ந்த குர்ஆன் மனனப் பிரிவு மத்ரஸா ஹாமிதிய்யாவில் 1985 முதல் இருந்து வருகிறது. அதன் விண்ணப்ப படிவத்தில் 1.பள்ளி படிப்புடன் ஹிப்ழ் செய்தல், 2.பள்ளி படிப்பின்றி ஹிப்ழ் செய்தல் என்று இருக்கும்.அது செயல்வடிவிலும் இருந்து வருகிறது.
கடந்த 2010 ஆண்டு பத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதி அனைவர்களும் வெற்றிபெற்றார்கள்
என்பது குறிப்பிடத்தக்கது.அல்ஹம்துலில்லாஹ்.
செய்தி: குருவித்துறைப்பள்ளி, புகாரிஷ் ஷரீஃப், அரூஸுல் ஜன்னஹ் மகளிர் அரபிகல்லூரி தலைவர் ஷெய்கு அப்துல்லாஹ் ஆலிம் காலமானார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
குல்லு நப்ஸின் தாயிக்கதுள் மௌத் posted byK.A.FAIZAL (madurai)[17 December 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 14698
அஸ்ஸலாமு அலைக்கும்.
ஓர் ஆலிமின் (அறிஞரின்) மரணத்தை விட ஓராயிரம் பொதுமக்கள் மரணிப்பது சிறந்தது என்பது ஒரு நபிமொழியின் கருத்து.
மவ்லவி அல்ஹாஜ்,அல்ஹாபிழ் எஸ்.கே .செய்கு அப்துல்லாஹ் ஆலிம் அவர்களின் மரண செய்தி அறிந்து கவலை அடைந்தோம். எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான சுவன பத்தியை கொடுப்பானாக!ஆமீன்.
அன்னாரை இழந்து வாழும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.
செய்தி: ரமழான் 1432: அஹ்மத் நெய்னார் பள்ளியில், ஒரே நிலைத் தொழுகையில் திருக்குர்ஆன் முழுவதையும் ஓதும் நிகழ்ச்சி! இன்றிரவு 08.10 மணிக்கு நடைபெறுகிறது!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
சாதனை இளவல் posted byK.A.FAIZAL (madurai)[27 August 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 7343
அஸ்ஸலாமு அலைக்கும்.சாதனை படைத்த இளவலுக்கு பாராட்டுக்களும்,வாழ்த்துக்களும்,துஆக்களும் ஒருபுறமிருக்க,பாராட்ட தெரியாத ஒரு கூட்டம் பழித்தும்,இழித்தும் பேசுகிறது.இந்த இளவல் அருள்மறையை ஓதுவதை டெலிபோன் மூலம் கேட்ட பாக்கியவான்களில் இந்த அடியானும் ஒருவன் என்பதை பெருமையோடு தெரிவிக்கிறேன்.இந்த அடியானும் இறைமறையை இதயத்தில் ஏந்தியவன் என்பதை அடக்கத்தோடு கூறுகிறேன்.ஒவ்வொரு அட்சரங்களும் தெளிவாக விளங்கியது.இறைமறையை நன்கு பார்த்து ஓத தெரிந்திருந்தால் விளங்கி இருக்கும். பழித்தும்,இழித்தும் பேசக்கூடிய கூட்டமே! நரகத்திற்கு என்று ஒதுக்கப்பட்ட பத்து நபர்களை சுவனத்திற்கு அழைத்துசெல்லும் பாக்கியம் பெற்றவர்தான் இந்த சாதனை இளவல்.அந்த பாக்கியம் பேசக்கொடியவனுக்கு இருக்கிறதா? என்பதை சற்று சிந்தித்து பார்க்க வேண்டும். 'போற்றுவார் போற்றட்டும்' தூற்றுவார் அள்ளி தூற்றட்டும்.
செய்தி: ரமழான் 1432: அஹ்மத் நெய்னார் பள்ளியில், ஒரே நிலைத் தொழுகையில் திருக்குர்ஆன் முழுவதையும் ஓதும் நிகழ்ச்சி! இன்றிரவு 08.10 மணிக்கு நடைபெறுகிறது!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
ஹாபிழ் காதர் posted byK.A.FAIZAL (madurai)[26 August 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 7300
அஸ்ஸலாமு அலைக்கும்.இவ்வுலகிலேயே மிகப்பெரிய பொறுப்பினை ஏற்றுக்கொண்ட இளவலுக்கு நன்றி.அருள்மறையை நன்கு பார்த்து ஓத தெரிந்தவர்களுக்கு அனைத்து அட்சரங்களும் நன்கு விளங்கியது.விளங்கியும் இருக்கும் என்று நம்புகிறேன்.வஸ்ஸலாம்.
மகத்தான 84 ம் ஆண்டு posted byK.A.FAIZAL (madurai)[11 June 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 5168
அஸ்ஸலாமு அலைக்கும்.பூமான் நபியின் புண்ணிய மொழிகளை புகழோடு ஓதும் புனித மன்றமும்,அதன் சேவைகளும் கியாம நாள் வரை தொடர வல்ல நாயன் அருள்புரிவானாக ஆமீன்!
இன்றைய விளக்கவுரையை கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. அல்ஹம்துலில்லாஹ். ஆலிம் அவர்களின் ஞானத்தை அல்லாஹ் இன்னும் அதிகபடுத்தி அவர்கள் மூலமாக இன்னும் அதிகமான கருத்துக்களை கேட்பதற்கும், அதன்படி நம் வாழ்கையை அமைத்துகொள்ளவும் அல்லாஹ் அருள்புரிவானாக ஆமீன்!
வாழ்த்துக்கள் posted byK.A.FAIZAL (chennai)[20 May 2011] IP: 122.*.*.* India | Comment Reference Number: 4563
அஸ்ஸலாமு அலைக்கும்.தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். இறைமறையை இதயத்தில் பதிய வைத்தால் உலகில் மற்ற அனைத்து காரியங்களும் அற்பமானவை என்பதை இந்த மாணவ கண்மணிகள் இவ்வுலகிற்கு உணர்த்திஉள்ளார்கள். இன்ஷா அல்லாஹ் மத்ரஸா ஹாமிதிய்யாவின் வெற்றி பாதைகள் மறுமை வரை தொடரட்டும்.வல்ல நாயன் அருள் புரிவானாக.ஆமீன்!
செய்தி: மே 21, 22, 23இல் மத்ரஸா ஹாமிதிய்யா மார்க்க விழாக்கள்! 6 மாணவர்களுக்கு “ஹாஃபிழுல் குர்ஆன்” பட்டம்!! அனைவருக்கும் அழைப்பு!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
பேரியக்கம் ஹாமிதிய்யா posted byK.A.FAIZAL (chennai)[19 May 2011] IP: 122.*.*.* India | Comment Reference Number: 4539
அஸ்ஸலாமு அழைக்கும். மாண்புயர் ஹாமிதிய்யாவின் மகத்தான மார்க்க விழாக்கள் நனி சிறக்க வாழ்த்துக்கள்.இறைமறையை இதயத்தில் பதித்திட்ட மாணவர்களும்,மாணவர்களின் வாழ்வில் மறுமலர்ச்சி கண்ட கலைக்கூடம் ஹாமிதிய்யாவும் நீடுழி வாழ இறைவனிடம் இரு கரம் ஏந்தி பிரார்த்திக்கிறேன்.ஆமீன்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross