Re:... posted byMirshadhunnisa (Adiyakkamangalam,thiruvarur)[20 April 2017] IP: 117.*.*.* India | Comment Reference Number: 45483
அஸ்ஸலாமு அலைக்கும்,நவீன கால கருத்தியலானாலும் உண்மையான முன்மாதிரி பெருமானாரிடமே இருக்கும்.
சிறந்த மாணவர்களை உருவாக்கும் கலைப்பற்றி பட்டயப்படிப்புகளே இன்று வந்துவிட்டாலும் அல்லாஹ்வின் தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களின் வழிகாட்டல் இல்லாமல் அதுவும்ழுழுநிறைவு பெறவே இயலாது.
பேராசிரியர் பெருமானார் நூலின் மூலம் தமிழுலகிற்கு எங்கள் ஆசிரியை உம்முநுமைரா அவர்கள் அளித்த பரிசை தங்களின் சிறப்பான முன்னுரை மூலம் , மேலும் மெருகூட்டியிருப்பதோடு பலரையும் நூலை வாங்கி படித்திட வேண்டுமென்ற ஆவலையும் தூண்டி இருக்கிறீர்கள்.
Re:... posted byMirshadhunnisa (Adiyakkamangalam,thiruvarur)[17 March 2017] IP: 117.*.*.* India | Comment Reference Number: 45352
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
சமூகத்தின் மீதான கவலை மற்றும் அக்கறை பொதிந்த பதிவு,மா ஷா அல்லாஹ்.
சட்டத்தின் படி செயல்படவேண்டிய சட்டமன்றமும்,அதை உறுதி செய்யவேண்டிய நீதிமன்றமும் பொறுப்பை தவற விடுகின்றன.
படிக்கும் கல்வி முதல் பக்கத்தில் வாழும் பருவ,நடுத்தர,முதிர்ந்த ஆணானாலும்,பெண்ணானாலும் வழிமாறி செல்வதின் விளைவின் பலனை எல்லோருமாய் சேர்ந்து அனுபவிக்க நேருகிறது.
இன்றைய இந்திய குற்றவியல் சட்டத்தின் சந்து பொந்துகளால் இதை சரிசெய்யவும் முடியாது.
இதற்கு ஒரே தீர்வு,சமுதாயத்தில் நிகழும் ஒழுக்கச்சீர்கேட்டை களைய அந்நூர் அத்தியாயத்தில் இது சம்பந்தமாக வந்துள்ள சட்டங்களை அரசு ஏற்று சட்டதிருத்தம் கொண்டு வரவேண்டும்.செய்வார்களா?
அவர்கள் அந்நூர் ஸூராவின் 1-26 வசனங்களில் இது சம்பந்தப்பட்ட சட்டங்களுக்கு செயல்வடிவம் அளிக்கமாட்டார்கள்.
எனவே,
ஒழுக்கச்சீர்கேடுகளுக்கு சாவுமணி அடிக்கவும், நிகழாமல் தடுக்கவும் அந்த ஸூராவின் மீதமுள்ள (27-64)வசனங்களில் ஒவ்வொரு தனிமனிதனும் தன்னை தற்காத்துக்கொள்ள தேவையான தெளிவான வழிகாட்டல்கள் வழங்கப்பட்டுள்ளன.நாம் அவற்றை பின்பற்ற வேண்டும். நம் பிள்ளைகள் ஆணாயினும் பெண்ணாயினும் அவ்வாறு வாழ சொல்லித்தர வேண்டும்.
மதவேறுபாடின்றி,மக்கள் இந்த சீரிய வழிகாட்டல்களை எடுத்துக்கொண்டால், பலன் அவர்களுக்கு கிடைக்கும்.இல்லையெனில் கயவர்களின் கையே ஒங்கும்
Re:... posted byMirshadhunnisa (Adiyakkamangalam,thiruvarur)[01 February 2017] IP: 117.*.*.* India | Comment Reference Number: 45182
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ)
மா ஷா அல்லாஹ், கட்டுரையின் ஒவ்வொரு வரியும்,இடம்பெறும் வார்த்தைகளும் தமிழால் என்னைக் கட்டிப்போட்டது போலவே உணர்ந்தேன்.
தமிழுக்கும்,தமிழ்நாட்டு முஸ்லிம்களுக்கும் இடையேயான நெருக்கம் யாரை விடவும் சளத்ததல்ல.தமிழ் மக்களின் மனங்களில் நஞ்சூட்டி முஸ்லிம்களை அந்நியப்படுத்திவிட முடியுமென எண்ணுவோர்வெற்றி பெற முடியாது.
அழகிய மொழிநடை,அறிவார்ந்த கருத்துரை,மென்மேலும் தங்கள் எழுத்துப்போர் வீரியமடைய அல்லாஹ் அருள்புரிவானாக
மாஷாஅல்லாஹ், அருமையான கட்டுரை, கட்டுரையின் ஆரம்பப்பகுதியிலேயே நான் ஒன்றிப்போய் விட்டேன்.
எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான், விளக்கம் -அருமை.
கட்டுரையின் ஆசிரியரின்,தம் ஆசிரியைகள் பற்றிய நினைவலைகள் பிரமிக்க வைக்கிறது.கூடவே சிந்திக்கவும் வைக்கிறது.
இன்றைய காலத்தில், ஆசிரியர் -மாணவர் உறவு பற்றிய கவலையே அது.ஆசிரியை மீதான மதிப்பீட்டு குறைவு இறுதியில் மாணவரின் மதிப்பெண்ணிலும் குறைவை ஏற்படுத்தும் என்பதால் பெற்றோர்கள், இது விஷயத்தில், பிள்ளைகளுக்கு சரியான ஆலோசனைகள் வழங்க வேண்டும் என்பதை இக்கட்டுரை எனக்கு உணர்த்துவதாக எண்ணுகிறேன்.
மேலும், கல்வியை கவலையுடன் பார்க்காமல்,மனமகிழ்வுடன் அணுகும் போக்கு மாணவர்களிடம் வர,தம்முடைய பங்களிப்பை அனைவரும் ஆற்றவர வேண்டும்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross