செய்தி: காயல்பட்டினத்திற்கான தொழுகை காலங்காட்டும் கைபேசி செயலி (Kayal Prayer Time Application) துவக்க விழா! திரளானோர் பங்கேற்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...செயர்ககரியா சேவையான இறைத் தொடர்பு செயலி தந்த தம்பிமார்கள் posted bypaalappa mohiadeen Abdul Kader (chennai.)[10 November 2015] IP: 117.*.*.* India | Comment Reference Number: 42175
இந்த இறைத் தொடர்பு செயலியை உருவாக்கக் மூல காரணமாக செயல்பட்ட தம்பி மஹ்மூத் ஹுசைன்,தம்பி கம்பல் ஷாகுல் ஹமீத் மற்றைய இதரத் தம்பிமார்களுக்கு வல்ல இறைவன் நற்க்கூலிகள் வழங்கி
யருள்புரிவானாக ஆமீன்.
இன்ஷா அல்லாஹ் குறுகிய காலத்தில் பயணிகளுக்கான அவுக்காத்துச்சலாமிர்க்கான செயலியை தம்பிமார்கள் தகைசால் இறைவனின் துனைகொண்டுத் தந்திடுவார்களாக! ஆமீன்.
வஸ்ஸலாம்.
இப்படிக்கு
பாலப்பா முஹியியாதீன் அப்துல் காதர்
எல்லாம் வல்ல இறைவனின் அளப் பெருங் கருணையாலும்,அண்ணலெம் பெருமானார் ரசூலே கரீம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் நல்லாசியாலும்,நாயகத் தோழர்களின்(ரலியல்லாஹு அன்ஹும்) நற்க் கிருபையாலும்,உன்னத இமாம்கள்(ரலியல்லாஹு அன்ஹும்),உயரிய இறை நேசச் செல்வர்களின்(ரலியல்லாஹு அன்ஹும்) துஆ பறக்கத்தாலும் நமதூர் பள்ளி மாணவ,மாணவிகள் அனைவரும் நடைபெறும் தேர்வில் வெற்றிப் பெற்று வாழ்வில் உயர் நிலையடைந்து எல்லா வளமும்,நலமும் பெறவும் பெற்றோர்,ஆசிரியர் உற்றார் உறவினர்களுக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்திடவும் வல்ல இறைவன் துணை புரிவானகவும்!ஆமீன்!ஆமீன்!யா ரப்பல் ஆலமீன்.
மேலும் காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு என்பதற்கிணங்க எனது பெற்றோர்களின் குடும்ப வழி மாணவ,மாணவிகளும்,எனது மனைவி வழி மாணவ,மாணவிகளும்,குறிப்பாக எனது மரியாதைக்குரிய மாமா ஜனாப் அல்-ஹாஜ் கம்பல் மொஹ்தூம் முஹம்மது அவர்களின் அருமை மகளும்,எனது மூத்த சகோதரர் ஜனாப் அல்-ஹாஜ் AK செய்யது முஹம்மது யாசீன் BA அவர்களின் மனைவி வழி மாணவ,மாணவிகளும் குறிப்பாக எனது பாசத்திற்குரிய மரு மகன் மாஸ்டர் பக்ரின் MAC ஆகியோர்களின் பெரும் முயற்சிக்கு கை மேல் பலனாக ஏகோனாம் அல்லாஹ் மிகப் பெரும் வெற்றியை வழங்கிடுவானாகவும்! எனும் துஆவுடன் வாழ்த்தி விடைபெறுகின்றேன் ஆமீன்!ஆமீன்!யா ரப்பல் ஆலமீன்! வஸ்ஸலாம்
எங்கள் கண்ணியத்திற்குரிய ஆலிம் பெருந்தகை அவர்களுக்கு எனது இதயங் கனிந்த அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹித் த ஆலா வ பறக்காத்தஹு.
ஆழியே அனுதாபம் தெரிவித்து தனதுப் பேரலையின் சீற்ற்ற்றத்தை நிறுத்தி மஹானவர்களின் இத்தரை வாழ்வின் ஓய்வுக்கு மரியாதை செலுத்திய எனது மனைவி வழிப் பாட்டனார் மறைந்தும் மறையாமல் நம்மிடையே வாழ்ந்துகொண்டிருக்கும் ஞானக் கடல் மாதிஹுப் புஹாரி மர்ஹூம் அல்லாமா அஸ்-ஷெய்கு மௌலானா மௌலவி அல்-ஹாஜ்,அழ்-ஹாபிழ் நஹ்வி S A முஹம்மது இஸ்மாயில் ஆலிம் முப்தி அவர்களின் வாழ்க்கை சரித்திரத்தையும்,அன்னார் இவ் உலகிற்க்காற்றிய சன்மார்க்க சேவையையும் குறிப்பாக அவர்கள் அரபு மொழிக்காற்றிய சேவையையும் ஆய்வு செய்து சமர்ப்பித்ததன்மூலம் M PHILL பட்டயம் பெற்று தனது வாழ்வில் மேலும் ஒரு படிகல்லை நிலை நிறுத்திய கண்ணியத்திற்குரிய அறிஞர் பெருந்தகை அவர்கள் எல்லாம் வல்ல இறைவனின் துணையாலும்,நமது உயிருக்கும் மேலான கண்மணி நாயகம் ரசூலே கரீம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் நல்லாசியாலும் நாயகத் தோழர்களின் (ரலியல்லாஹு அன்ஹும் ) நற்க்கிருபையாலும்,உன்னத இமாம்கள்,கௌதுல் அஹ்லம் முஹியியதீன் அப்துல் காதர் ஜிலானி ரலியல்லாஹு அன்ஹு,மற்றும் உயரிய இறை நேசச் செல்வர்களின் ரலியல்லாஹு அன்ஹும் துஆ பரக்கத்தாலும் மேலும் அன்னவர் ஷெய்கு ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் துஆ பரக்கத்தாலும் வாழ்வில் மேலும் பல பட்டங்களையும் பதவிகளையும் பெற்று சரீர சுகத்துடன் பல்லாண்டு வாழ்ந்து இவ் வையகத்திற்கு சன்மார்க்க சேவையாற்றிட எல்லாம் வல்ல இறைவன் துணை புரிவானாக! ஆமீன் என்ற எனது துஆவுடன் வாழ்த்துகின்றேன்.கணம் ஆலிம் அவர்கள் இந்த அடியேனுக்காகவும்,எனது மனைவி,மகள், மற்றும் எங்கள் குடும்பத்தார் ஹக்கிலும் துஆ செய்ய வேண்டுகின்றேன்.
வஸ்ஸலாம்.
இப்படிக்கு
பாலப்பா AK முஹியியதீன் அப்துல் காதர்
mannady
சென்னை
Re:...மறைந்தார்கள் காயல் நகரின் கதீஜாப் பிராட்டியார். posted bypaalappaa A.K.Muhiyiadheen Abdhul Kaadhar (chennai)[01 February 2014] IP: 117.*.*.* India | Comment Reference Number: 32941
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹித் த ஆலா வ பறக்காத்தஹு.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
எனக்கு மனைவி வழி வாப்பிச்சா என்றபோதும் எனது மூத்த சகோதரர் ஜனாப் அழ-ஹாஜ் பாலப்பா A.Kயாசீன் அவர்களின் இல்லத்தார்களோடு மறைந்த இறை நேசப் பெண்மனியாருக்கு நெருங்கியத் தொடர்பின் அடிப்படையில் என் மீது பாசம் வைத்து பல முறை அடியேனுக்காக அல்லாஹ்விடம் இறைஞ்சுல்லார்கள் அல்ஹம்துலில்லாஹ்.
சமூக சேவகரும்,எழுத்தாளருமான எனது மச்சான் S K ஷமீமுல் இஸ்லாம் அவர்களின் கூற்றிர்க்கினங்க்க கண்ணியத்திற்குரிய மர்ஹுமா அவர்களிடம் நமது அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத்தின் சித்தார்ந்தத்தை மறுதலித்துப் பேசும்பொழுது காயல் நகர் தந்த காமில் வலி ஷாமு ஷிஹாபுத்தின் ரலியல்லாஹு அன்ஹு அவர்களால் யார்த்தளிக்கப்பட்ட சின்ன ஹதீது மாலை,பெரிய ஹதீது மாலைப் போன்றவற்றிலிருந்து மர்ஹுமா அவர்கள் விளக்கமளிப்பதன் மூலம் வினவியவர் வியந்தவாறு மலைத்திடுவர்.
இத்தகையப் பேரொழுக்கப் பெருமாட்டியான வனிதயரொலி அவர்கள் வாழ்ந்த காலையில் நானும் வாழ்வதைப் பெரும்பேரெனனக் கருதிப் பேருவகயடைகின்றேன் அல்ஹம்துலில்லாஹ்.
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அலப்பெருங்க் கருணையால் அண்ணலெம் பெருமானார் ரசூலே கரீம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் பரிந்துரையைப்(ஷபாத்) பெற்றவர்களாக சுவனத்தில் ஜன்னத்துல் பிர்தௌசென்னும் உயரிய இடத்தில் உத்தம நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் தலைமையில் லிவாவுல் ஹம்தென்னும் கொடியின் கீழ் இறை நேசப் பெண்மணியான மர்ஹுமா அவர்களையும் நம்மையும் அமரச் செய்வானாகவும்!ஆமீன்.
செய்தி: திருச்சியில் நடைபெற்ற இ.யூ.முஸ்லிம் லீக் மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட அரசியல் தீர்மானங்கள்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
மதிப்பிற்குரிய ஜனாப் சாளை S.I.ஜியாவுதீன் காகா அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்
மா நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் அரசியலில் அரசோச்சினார்கள் எனபதில் மாற்றுக் கருத்துடையோர் யாருமில்லை மாறாக மாற்று மத அறிஞர்கள் கூட உடன்பட்டிருக்கின்றார்கள். எனவே மாட்ச்சிமை தங்கிய மகுடாதிபதி மா நபி ஸல்லலலாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் சர்வத் துறைகளிலும் சக்கரவர்த்திதியாக சஞ்சரித்தார்கள் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை,ஐய்யமெலவும்கூடாது காரணம் ஈமானைப் பாதிக்கும்.
நான் சொல்ல வந்தக் கருத்தென்னவெனில் அரசியலில் ஆன்மீகத்தை கலக்கக் கூடாதேன்பதேயாகும். மாறாக அரசியலே கூடாதென்பதல்ல என்பதை தெளிவுப்படுத்துகின்றேன்.
நகரில் மாறுபட்டக் கொள்கையுடையவர்களிடையே சம்பந்தங்கள் கலக்க முடியாமைப்பற்றி சாடியிருந்தீர்கள்.நீங்கள் கவலைப்பட்டதுபோல் கடந்த காலங்களில் மாறுபட்டக் கொள்கையில் சம்பந்தங்கள் ஏற்பட்டு கணவன் மனைவியிடையே பிணக்குகள் ஏற்பட்டு மன முறிவுவரை சென்று ஒற்றுமைக்குப் பகரமாக குடும்பங்கள் பிளவுபட்டு பெரும் பகை ஏற்பட்டதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். உங்கள் கருத்துப்படி நிகழ வேண்டுமானால் வேறுபட்டக் கொள்கையுடையவர்கள் தங்களுக்கிடையே கொள்கைத்திணிப்பை மேற்கொள்ளாமல் சம்பந்தங்கள் நிகழலலாம் என்பது என்னுடையக் கருத்தாகும்.
முஸ்லிம் லீக்கின் தீர்மானத்தில் சொல்லப்பட்டுள்ள தீர்மானங்கள் இஸ்லாமியர்கள் அனைவருக்கும் பொதுவானத் தீர்மானங்களே இடம்பெற்றுள்ளன என்பதையும் தங்களது மேலான கவனத்திற்கு கொண்டு வருகின்றேன். வஸ்ஸலாம்.
செய்தி: திருச்சியில் நடைபெற்ற இ.யூ.முஸ்லிம் லீக் மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட அரசியல் தீர்மானங்கள்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
மரியாதைக்குரிய சாளைS.I.ஜியாவுதீன் காகா அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்.
உதாரணமாக புத்தாண்டு தினத்தன்று நம் இந்திய நாட்டு மக்களனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவர் வேண்டுகோள் விடுக்கின்றபொழுது இல்லை முதலில் இந்திய நாட்டு மக்களைனவரும் ஓரிறைக் கொள்கையைப் பற்றிப்பிடியுங்கள். அதன் பின்னர் ஒற்றுமையைப்பற்றிப் பேசலாம் என்பதைப் போன்றே கணம் காகா அவர்களின் கூற்று அமைந்துள்ளது.
எனவே அரசியல் வேண்டுகோளில் ஆன்மீகத்தை கலக்காமல் "அந்னிய நாட்டை நோக்குகின்றபோழு வேற்றுமையில் ஒற்றுமையாக இந்த்தியர்களாக ஒன்றுபடுகின்றோமோ அதே போன்றே நமது ஆட்சியாளர்களிடம் இஸ்லாமியர்களுக்கான உரிமையை வென்றெடுக்கவே முஹல்லா ஜமாஅத் ஒற்றுமைக்கான தீர்மானம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
நீங்கள் கூறியதுபோல் வாசன் ஐ கேருக்கு சென்றோ,அகர்வாலுக்கு சென்றோ கண்ணைப் பரிசோதிப்போமனால் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கில் மாறுபட்டக் கொள்கை உடையவர்கள் மாவட்டப் பதவிகளில் கூட இருக்கின்றார்கள் என்பது கண்களுக்கு புலப்படும்.உதாரணாமாகஅக் கட்சியின் திருச்சி மாவட்டச் செயலாளர் நீங்கள் புரிந்து வைத்திருக்கும் ஏகத்துவக் கொள்கையைச் சார்ந்தவர்.. தப்பொழுது வேண்டுமானால் வாய்ப்புகள் பகிர்ந்தளிப்பதற்காக மாற்றப்பட்டிருக்கலாம்.
உங்கள் கூற்றுப்படியே ஒற்றுமைக்கு இலக்கணம் கூறுவோமேயானால் தளபதிக்குக் கட்டுப்பட்ட இராணுவ அணிவகுப்பு அமைகின்றபொழுது அகில உலகத்திற்கும் அதிபதியான அல்லாஹ்விடம் சம்பாஷிக்கின்றபொழுது உங்களின் கூற்றுப்படி அந்த அணிவகுப்பில் (தொழுகை) ஒற்றுமைக்குப் பகரமாக வேற்றுமை நிலவும் என்பதை நீங்கள் அறியாதவர் அல்ல.
நீங்கள் அரசியல் பார்வையை ஆன்மீகத்தோடு இணைத்துப் பார்த்ததால் மட்டுமே எனது இக் கருத்தைப் பதிவு செய்கின்றேன்.மாறாக நான் முஸ்லிம் கட்சிக்காக ஆதரவு தெரிவித்துச் சொல்லவில்லை என்பதை மெத்தப் பணிவுடன் வியாபிக்கின்றேன்.இந்த விவாதத்திற்கு அடிகோளிட்டதும் தாங்களே என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.மேலும் நீங்கள் இந்தக் கருத்துப் பதிவைத் தவிர்த்திருந்தால் அடியேனின் இந்த சிறு விளக்கத்திற்கான அவசியம் ஏற்பட்டிருக்காது என்பதையும் தெளிவுபடுத்தக் கடமைப்பட்டுள்ளேன்.
எனவே தயவு கூர்ந்து இதை அடியேனின் சிறு விளக்கமாகக் கருதி எனது அன்பிற்கினிய அட்மின் அவர்கள் இதையும் பதிவு செய்வீர்கள் என்ற நம்பிக்கையுடன். வஸ்ஸலாம்.
இப்படிக்கு
பாலப்பா A.K.முஹியியதீன் அப்துல் காதர், மண்ணடி சென்னை
செய்தி: திருச்சியில் நடைபெற்ற இ.யூ.முஸ்லிம் லீக் மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட அரசியல் தீர்மானங்கள்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
அன்பு சால் அட்மின் அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்.
நான் இதற்க்கு முன் பதிவு செய்தக் கருத்தில் பாரதீய ஜனதாவுடன் ஆட்சியில் பங்கு பெற்றது (தி.மு.க) என்பதைகுறிப்பிட மறந்துவிட்டேன். பாரதீய ஜனதாவுடன்கூட்டணி அமைத்து தேர்தல் களம் கண்டது (தி.மு.க) என்றுக் குறிப்பிடவும்,
மேலும் இம் முறையும் மூன்றாவதாக பாரதீய ஜனதாவுக்கு தூதுவிட்டு ஸ்பெக்டரம் ஊழல் குற்றச்சாட்டால் தங்களது கட்சிக்கு(பாரதீய ஜனதா) தேர்தல் களத்தில் பின்னடைவு ஏற்ப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக(தி.மு.க.)வை உதாசீனப்படுத்திவிட்டது.இதிலும் தி.மு.க. என்பதைக் குறிப்பிட மறந்து விட்டேன் என்பதை அட்மின் அவர்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வரவே மீண்டும் கருத்துப் பதிவு செய்துள்ளேன்.
திரிபுவாதம் வந்து விடக் கூடாது.எனவே தயவு செய்து எனது இந்த விளக்கக் கருத்தையும் நிராகரிக்காமல் பதிவு செய்யுமாறு பேரன்புடன் கேட்டுக்கொள்கின்றேன். வஸ்ஸலாம்.
இப்படிக்கு
பாலப்பா A.K.முஹியியதீன் அப்துல் காதர், மண்ணடி சென்னை
செய்தி: திருச்சியில் நடைபெற்ற இ.யூ.முஸ்லிம் லீக் மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட அரசியல் தீர்மானங்கள்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
அஸ்ஸல்லாமு அலைக்கும். தாய்ச் சபையின் தனித்துவ மிக்க திருச்சித் தீர்மானத்தை பாராட்டுக்குரியது.வல்லிறையோனின் கிருபையால் தீர்மானங்கள் கிணற்றில் போட்டக் கல்லாக இல்லாமல் விரைவில் நிறைவேறுமென நிகரற்றோனிடம் பிரார்த்திப்போமாக!ஆமீன்.
தேர்தல் வெற்றிக்குப்பின் தி.மு.க.பாரதீய ஜனதாவுடன் ஆட்சியில் பங்கு பெறாது என்பதற்கு என்ன உத்தரவாதம்?(ஒருக்கால் பாரதீய ஜனதா வெற்றி பெருமானால்...) அல்லாஹ் காப்பாற்றுவானாக! தாய்ச் சபையின் நிலை?
ஏற்கனவே அ.இ.அ.தி.மு.க. பாரதீய ஜனதா அரசிலிருந்து வெளியேறியவுடன் .அரசியல் சூழல்க் காரணமாக பாரதீய ஜனதாவுடன் ஆட்சியில் பங்கு பெற்றது.
பிறிதொரு முறை அதே அரசியல் சூழல்க் காரணமாக தேர்தல் கூட்டணி வைத்துக் களம் கண்டதும் நினைவிருக்கலாம்.
ஏன் தற்போது கூட பாரதீய ஜனாதாவிற்க்கு தூதனுப்பி ஸ்பெக்டரம் ஊழல்க் காரணமாக பாரதீய ஜனதாவால் உதாசீனப்படுத்தப்பட்டு வேறு வழியில்லாமல் பழையக் கூட்டணியைத் தொடர்கின்றது என்பது நாடறிந்த,நாமறிந்த விஷயமாகும்.இதுவே அடியேனின் கேள்விக்குக் காரணமாகும்.
வஸ்ஸலாம்.
இப்படிக்கு
பாலப்பா A.K.முஹியியதீன் அப்துல் காதர்,
மண்ணடி,
சென்னை
செய்தி: காயலர்களின் பங்களிப்பையும் கொண்டு நாகர்கோவிலில் விரிவாக்கிக் கட்டப்பட்ட பள்ளிவாசல் திறப்பு விழா! ஜன.03 அன்று ஜும்ஆ தொழுகையுடன் துவக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
இந் நிகழ்வில் ஜனாப் அல்-ஹாஜ் செய்யது அகமது(பேண்டு மாமா) மாமா அவர்களின் நண்பர் மாண்பு மிகு வகப் வாரியத் தலைவர் ஜனாப் தமிழ் மகன் ஹுசைன் அவர்கள் சிறப்பு விருதினர்களாக கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்கள். மேலும் இந்தப் மசூதி விரிவாக்கத்திற்கு நேராகவும், மறைமுகமாகவும், உடலாலும், பொருளாலும், உதவி செய்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் வல்லோநிறைவன் இம்மை,மறுமைப் பேறுகளையும்,மா நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் ஷபாஅத்தையும் பெரும் பாக்கியத்தையும் நல்கிடுவானானவும் ஆமீன்.
இப்படிக்கு
பாலப்பா A.K.முஹியதீன் அப்துல் காதர்,
மண்ணடி, சென்னை
ஏனைய தன்மானமுள்ள இஸ்லாமிய சமுதாய அரசியல் கட்சிகளைப் போன்றே இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியும் தன்மைனமுள்ளதே. எனவே ஒரு வேளை அரசியல் சூழ்நிலையின் காரணமாக (கலைஞரின் பாசையில்) பாரதீய ஜனதாக் கட்சியுடன் கூட்டணி ஏற்பட்டால் சுய மரியாதைச் சிங்கங்களாக வெளி வந்து மர்ஹூம் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத்(ரஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்களின் சித்தார்ந்தத்தைப் பேணிப் பாதுகாப்பார்கள் என நம்புவோமாக!
திராவிட முன்னேற்றக் கழகம் பாரதீய ஜனதாவுடன் கூட்டணி சேர்ந்தாலும்,சேரவில்லை என்றாலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்-தி.மு.க. கூட்டணி மலர்வது குறித்து நான் கருத்து சொல்லவில்லை.பாரதீய ஜனதா எனும் மதவாதக் கூட்டணியில் இல்லாமல் இருக்க வேண்டுமென்பதே எனது அவா.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross