இரண்டு நூற்றாண்டுகளில்
ஒன்றுகூடி
இந்தியாவே அழுதது
உன் இறப்பு செய்தி கேட்டு
மட்டும்தான்.
உன் முயற்சியால்
பொக்கிரான்
எதிரியை பயமுறுத்தியது.
உன் பயிற்சியால்
குறைந்த எடை செயற்கை காலோடு
என் சகோதரன்
நிற்கிறான்
என்ற மகிழ்ச்சிக்கு இணையேது?
நீ இரண்டாம் தேசத்தந்தை அல்ல.
இளைய இந்தியாவின்
கனவுத்தந்தை.
இனி
அமெரிக்கவின் அப்துல் கலாம்!
ஐரோப்பாவின் அப்துல் கலாம்!
ஆப்ரிக்காவின் அப்துல் கலாம்!
உருவாகக்கூடும்.
அதற்கு
உன் முயற்சியும் பயிற்சியுமே
கருவாக வாழும்.
மக்களோடு கலந்து வாழ்ந்தவன் நீ!
உன்னை ஏனோ
இரண்டு ஏக்கர் நிலத்தில்
தனிமைப்படுத்தி
விதைத்திருக்கிறார்கள்!
உன் வீரியம்
கடல் பூமி பரவி நிற்கும்.
அது உன்
கனவுகளுக்கு விடை கொடுக்கும்.
அப்துல் கலாம்-
உங்களுக்கு
அகிலத்தின் சலாம் !
--- காயல் ஆர்.எஸ்.இளவரசு
தலைவர்
தமிழ்நாடு கேபிள் டிவி உரிமையாளர்கள் சங்கம்
98400 42255
Re:மழ்ஹருல் ஆபிதீன் சன்மார்க... posted byKayal R.S.Elavarasu (chennai)[14 February 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 16886
இன்னா லில்லாஹி வ இன்னா இளைகி ராஜிஊன் .
பாளையம் இப்ராஹீம் காக்கா வபாத் செய்தி மனதை வாட்டுகிறது.
உலக இஸ்லாமிய தொலைகாட்சி வரலாற்றில் அதிகாலை சாகர் நேர நிகழ்ச்சியினை பதினேழு ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பித்த போது என்னை சென்னைக்கு வந்து வாழ்த்திச் சென்நல்ல உள்ளத்துக்கு சொந்தக்காரர்.தனக்கென எதையும் எப்போதும் எதிர்பாராதவர். புதிய முயற்ச்சிகள் எதில் ஈடுபட்டாலும் அதில் முதல் வாழ்த்து இப்ராஹீம் காக்கா உடைய வாழ்த்தாகத்தான் இருக்கும். திறமைசாலிகளை தேடிப்பிடித்து பாராட்ட தயங்காதவர்.
நான் காயல்பட்டினம் வரும்போதெல்லாம் அக்கம் பக்கத்து ஊர்க்காரர்,அல்லது வேறு யாரயாவது அழைத்து வந்து அறிமுகப்படுத்தி அவர்களின் திறமையை பற்றி கூறி ஏதாவது பத்திரிக்கை அல்லது தொலைக்காட்சியில் அவர்களின் பேட்டி வர வேண்டும் என்று முயர்ச்சிப்பார். அவர்களது முயற்ச்சியால் என் மூலமே நான்கு பேர் வெளிச்சத்துக்கு வந்துள்ளார்கள்.
பல ஆண்டுகளுக்கு முன்னர் என்னையும் என் மனைவியையும் தன் வீட்டுக்கு அழைத்து கௌரவப்படுத்தியவர் அவர். நகர் மன்ற தலைவியை எனக்கு அறிமுகம் செய்து வைத்தவர் அவர்களே. அவர்களின் மறைவு எனது மூத்த சகோதரரின் மறைவாக எண்ணி துயருறுகிறேன். அவர்களை இழந்து வாடும் அன்னாரின் குடும்பத்தாருக்கு இறைவன் பொறுமையை வழங்குவானாக! பாளையம் இப்ராஹீம் காக்கா உடைய மக்பிரத்துக்காக வல்ல ரஹ்மானிடம் இரு கரம் ஏந்தி நிற்கிறேன்.
Re:எல்.எஃப். வீதி, லக்ஷ்மிபு... posted byKayal R.S.Elavarasu (chennai)[03 February 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 16484
சமூக சேவகர் தம்பி காயல் R .S .கோபால் அவர்களின் பணி பாராட்டத்தக்கது. கவுன்சிலர் ஆகித்தான் நகர் பணி ஆற்ற வேண்டும் என்பதல்ல. என் கடன் பணி செய்து கிடப்பதே என்று செயல் படும் கோபாலை போன்ற சிலர் இன்னும் நமதூரில் இருப்பதால் ஊருக்கு நன்மையையும் பெருமையும் கூடும்.வாழ்த்துக்கள். .
அமானுல்லாஹ்வுக்கு வாழ்த்துக்கள்! posted bykayal R.S.Elavarasu (chennai)[10 May 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 4361
எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி! இனிய வழி காட்டி உயர்வுக்கு காரணமாய் அமைந்த எல்கே மேனிலைப்பள்ளி நிர்வாகத்திற்கும் ஆசிரியப் பெருமக்களுக்கும் நன்றி!
முயன்றால் எதுவும் சாத்தியம் என நிரூபித்த அன்புத்தம்பி அமானுல்லாஹ்வுக்கு வாழ்த்துக்கள்!
டாக்டருக்கு படிக்க வேண்டும் என்று விரும்புவதாக அறிந்தேன். அல்லாஹ் அதிலும் வெற்றியை அருள்வானாக! அமீன்!
நமதூரில் ஐஎஎஸ் ,ஐபிஎஸ் , ஐஎப்எஸ் என்பது நெடுநாளைய கனவாக உள்ளது. அதனையும் நனவாக்க தம்பி அமானுல்லாஹ் முயற்சி மேற்கொள்ள வேண்டுகிறேன். இன்ஷா அல்லாஹ் இதற்க்கான அத்துணை தேவைகளையும் ஒத்துழைப்புகளையும் செய்து தந்து வழி காட்ட காத்திருக்கிறேன்...
மீண்டும் வாழ்த்துக்களோடும்,ப்ரார்த்தனைகளோடும்,
காயல் R . S . இளவரசு,
தனம் வீடியோ விசென்,)
தமிழ்நாடு கேபிள் டிவி உரிமையாளர்கள் சங்க மாநில தலைவர்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross