Re:...சுற்றுப்புற சூழல் posted bymackie noohuthambi (kayalpatnam)[17 April 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 26909
இன்று குத்துக்கள் தெருவிலும் இப்படி ஒரு மண் குவியலை காண முடிகிறது. இதை தடுத்து நிறுத்துவது ஒன்றும் கஷ்டமான வேலை இல்லை. ஆங்காங்கே உள்ள சங்கத்து உறுப்பினர்கள் உடனடியாக வீடு கட்டும் உரிமையாளர்களை சந்தித்து, அவர்களுக்கு தெரியாமல் இரவில் மண்ணை கொட்டிவிட்டு சென்ற அவர்கள் லாரி காரர்களை கூப்பிட்டு எச்சரிக்கை செய்யலாம். மீறினால் காவல் துறைக்கு அறிவித்து அவர்கள் லைசென்சை பிடுங்கிவைத்து கொள்ளலாம்.
இந்த இணையதளத்தின் ஆசிரியரும் காயல்பட்டினம் சுற்றுசூழல் அமைப்பின் முக்கிய தலைவர். அவர் ஒரு போன் அழைப்பு மூலம் அதை நிவர்த்தி செய்யும் செல்வாக்கு படைத்தவர். அல்லது நகரமன்ற வார்டு உறுப்பினரே அதை செய்யலாம். ஒரு முறை இதை செய்தால் போதும். நிலைமை கட்டுக்குள் வந்து விடும். ஆவன செய்யும்படி வீட்டு உரிமையாளர்களை பணிவுடன் வேண்டிக் கொள்வோம். இந்த செய்தியை மக்கள் பார்வைக்கு கொண்டு வந்ததற்கு நன்றி.
Re:ஒரு செல் ஊசலாடுகின்றது...... posted bymackie noohuthambi (colombo)[20 April 2012] IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 21020
example is better than precept. please ensure that the editor of this essay disposes all his mobile phones and command all his family members and his well wishers to do away with cell phone. the essay is worth reading, but cannot be put into practice. please tell the alternative. in this era of robo world, this type of out dated talks will put the readers into laughter.
innovations are not bidaths, but when it goes against the teachings of islam it should be oppressed. so advise the users about the evils of cell phones. we use computers, sometimes virus is there. we will rectify the error. we will not put the computer in the waste paper basket.
Re:நகராட்சியில் மக்கள் குறைத... posted bymackie noohuthambi (colombo)[26 January 2012] IP: 111.*.*.* Sri Lanka | Comment Reference Number: 16232
அட்டகாசமான ஆனால் அதிசயமான அமர்வு. காயல்பட்டினம் சரித்திரத்தில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நிகழ்வு. இந்த மாமன்றம் மக்கள் மன்றமாக மாற ஆரம்பித்துள்ளது. அல்ஹம்து லில்லாஹ். இதே நிலையில் இந்த மன்ற உறுப்பினர்கள் தலைவர்கள் செயல்பட viyookam வகுத்துக்கொண்டால் வெற்றி மீது வெற்றி வந்து நம்மை சேரும்.அதை வாங்கி தந்த பெருமை எல்லாம் உங்கள் எல்லோரையும் சேரும். vaaltukkal
Re:‘மெகா‘ தன் பணிகளை விரிவாக... posted byMACKIE NOOHUTHAMBI (KAYALPATNAM)[08 December 2011] IP: 59.*.*.* India | Comment Reference Number: 14288
மருமகன் SK , நான் பக்கத்துக்கு வீடுதானே என்னையும் கூப்பிட மாட்டியா, நீங்க என்ன பேசுறீங்க என்றாவது கேட்டிருப்பேனே...?
ஏற்கனவே பேரை மாத்த சொன்னேன். கொஞ்சம் யோசயுங்கள். MEGA வுக்கு இப்ப அர்த்தம் புதுசா கண்டுபிடிக்கணும், முற்போக்கு சிந்தனை உள்ளவர்கள் நீங்கள். பெயர் விசயத்தில் சாயம் போய் விடக்கூடாது. உங்கள் அணுகுமுறையை நிறையபேர் கூர்ந்து கவனிதுக்கொண்டிருக்கிறோம், வாழ்த்துக்கள்.
Re:நகர்மன்ற தலைவிக்கு தோழிகள... posted byfathima muzdhalifa (kayalpatnam)[22 October 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 11799
புதிய நகர் மன்றம் வெற்றித் திருமகள் தலைமையில் இயங்க வேண்டிய அணுகு முறைகள்:
1 நகர்மன்றம் இணையத்தளம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும். அதில் நமது நகர் மன்றம் 125 ஆண்டுகள் வரலாற்று செய்திகள் இடம்பெறவேண்டும்.
2 நகர்மன்றதை தொடர்புகொள்ள மின்னஞ்சல் ஒன்று ஏற்படுத்த வேண்டும். மக்கள் அவ்வப்போது அவர்கள் தேவைகளை குறைகளை அதில் வெளியிட வாய்ப்பு இருக்கும். தலைவர் அவற்றை படித்து ஆவன செய்வதற்கு அது உதவியாக இருக்கும்.
3 கூட்டம் நடக்கும் போது அதன் செயல்பாடுகளை வாத விவாதங்களை அறிய, " சட்ட மன்றத்தில் இன்று" என்பதுபோல் "நகர்மன்றத்தில் இன்று" என்று ஒரு செய்தியை நமதூர் தொலைகாட்சிகளில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யவேண்டும்.
4 மன்றத்தின் வரவு செலவு திட்டங்கள் நிதி நிலை அறிக்கையாக சமர்பிக்கபட்டு அது விவாதத்துக்கு எடுத்து கொள்ளப்படும்போது அதனை மக்களுக்கு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.
5 மன்றத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் அவரவர் வார்டில் சென்று மக்கள் குறை கேட்டு அவற்றை களைய ஆவன செய்ய வலியுறுத்த படவேண்டும்.
6 மன்றத்தின் தலைவர் அவர்கள் குறைந்தபட்சம் 3 மாதத்துக்கு ஒரு முறையாவது போது இடங்களில் கூட்டம்போட்டு இதுவரை தீட்டியுள்ள திட்டங்கள் அதற்கு அரசு அங்கீகாரம் அல்லது நிராகரிப்பு அதற்கான காரணங்களை மக்கள் முன் எடுத்து வைத்து அதற்கு பரிகாரம் ஆலோசனைகளை கேட்டு அறிய வேண்டும்.
6 மக்கள் நலத்திட்டங்களை அரசு வேண்டுமென்றே பிற்படுத்தினால் அல்லது நிராகரித்தால் மக்கள் போராட்டம் செய்ய தலைவரே முன்னின்று ஏற்பாடு செய்யவேண்டும்.
7 இப்போதைய நகர்மன்றத்தில் பெண்கள் அதிகமாக இருப்பதாலும், தலைவரே ஒரு பெண்ணாக இருப்பதாலும் நமது தமிழக முதல் அமைச்சரே ஒரு பெண்ணாக இருப்பதாலும் மாநில அரசுடன் சுமுகமான உறவை பேணி நடந்து நலத்திட்டங்களுக்கு ஒப்புதல் வாங்க அரசியல் சாணக்கியத்துடன் நடந்து கொண்டால் போராட்டத்துக்கு வழி ஏற்படாது.
இத்தனையும் எனது உள்ளக்கிடக்கைகள். தலைவரும் இதையே தன் உள்ளக்கிடக்கையாக ஏற்றுக்கொண்டு செயல்பட்டால் 5 வருடத்தில் இந்த ஊர் மற்ற நகர்மன்றங்களுக்கு முன் மாதிரியாக அமையும் என்பதில் ஐயம் இல்லை.
வாருங்கள் தலைவர் அவர்களே நல்லாட்சி தாருங்கள் நல்லவர்கள் எல்லோரும் உங்கள் பின்னாலே நீங்க நெனச்சதெல்லாம் நடக்குமொங்கோ கண்ணுமுன்னாலே..
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross