அனைவருக்கும் எங்களது மனப்பூர்வமான நன்றிகளையும்,பாராட்டுகளையும் இதன் வாயிலாக மிகுந்த மகிழ்வுடன் தெரிவித்து கொள்கின்றோம்.. posted byரஹ்மத்துன்-லில் ஆலமீன் மீலாது பேரியம்சார்பாக சட்னி,செய்யது மீரான் , (ஜித்தா,சவுதி அரேபியா... )[17 June 2012] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 19403
அஸ்ஸலாமு அலைக்கும்..
ரஹ்மத்துன்-லில் ஆலமீன் மீலாது பேரியமாகிய இது
எங்களது சிறு வயது பிராயத்தில் கடந்த 1985-ஆம் ஆண்டு
துவங்கப்பட்ட இந்த அமைப்பு நம் உயிருனும் மேலான
அகிலத்தின் அருட் கொடை அண்ணல் நபிகளாரின்
பிறந்த தின மீலாது விழா நிகழ்ச்சியோடு மட்டும் நில்லாமல்
சமூக நலப்ணியும்,சமுதாய நல உதவிகளும் எங்களது அமைப்பின் மூலமாக தொடந்து செய்து வருகின்றோம்.அல்ஹம்துலில்லாஹ்.
இந்த நிகழ்வின் மூலம் எங்களது பகுதிகளில் வாழும்
தாய்மார்கள் ,சகோதரிகள் மற்றும் மாணவ மணிகளுக்கும்
கல்வி ,சன்மார்க்கம் இஸ்லாத்திலும் அதிக விழிப்புணர்வு ஈடுபாடு ஏற்படுத்தி வருகின்றோம்.
என்பதை மிகுந்த மகிழ்வுடன் தெரிவித்து கொள்கின்றோம்.
எங்களது 15-ஆம் ஆண்டு 1999-முதல் 26-ஆம் ஆண்டு 2010-வரை அடுத்து மணவிழா காண உள்ள பொருளாதாரத்தில்
மிக பின் தங்கியுள்ள சுமார் 25-கும் மேலான நம் சொந்தங்களான மணப்பெண்களுக்கு முதலில் தலா நாற்பது கிராம் பின்னர்
விலை ஏற்றத்தின் காரணமாக இறுதி 3 ,4 -வருடமாக
முப்பத்தி இரண்டு கிராம் என தங்க நகை ஆபரணங்கள்
வழங்கி வந்துள்ளோம்.இறை அருளால் அனைவரும் மணவிழா கண்டு மகிழ்வுடன் நல்வாழ்வு வாழ்ந்து வருகின்றார்கள்.
பாரக்கல்லாஹ் ஆமீன்.
எங்கள் பேரியத்தின் வெள்ளி விழா 25-ஆம் ஆண்டு 2009-மற்றும்
26-ஆம் ஆண்டு 2010 களில் ,தலா இரு பயனாளிக்கும்,
கடந்த 27-ஆம் ஆண்டு 2011- மற்றும் இந்த 28-ஆம் ஆண்டு விழா 2012-ல் தலா நான்கு மாணவர்களுக்கு பயனாளி ஒருவருக்கு ருபாய் ஐய்ந்தாயிரம் வீதம் ஊரில் உள்ள நகர்நல அமைப்புகளில் தனி சிறப்புடன் முன்னோடியாக பட்டப்படிப்பு மற்றும் தொழிற்கல்வி பயிலும் மாணவ-மாணவியருக்கு,உலக காயல் நல மன்றங்களின் கல்வித்துறைக் கூட்டமைப்பான
இக்ராஃ கல்விச் சங்கம் -வழியாக கல்வி உதவித்தொகை வழங்கி வருகின்றோம்
எங்களுடைய விழா என்றுமே எளிமையாகவும்.
மிக மன வலிமையாகவும் இது நாள் வரை நடந்து வருகின்றது.
இந்த ஆண்டு எங்களது பள்ளி வாசலில் இடம் வசதி இருந்ததால்
பெரியோர்களின் ஆலோசனையும் அனுமதியும் பெற்றும் அங்கு வைத்து நடத்தினோம்.
கடந்த 27-வருட காலங்கள் எங்களது குத்துக்கல் தெருவில் வைத்து நடத்தி வந்தோம் என்பதும்
இதனால் யாருக்கும் எந்த விதமான சிரமம் இல்லை என்பது உண்மை ஒன்றை மட்டுமே
உரைக்கும் நல்ல உள்ளங்கள் அறிந்தது.வாழ்த்துக்கள்.
இது நாள் வரை எங்களது அழைப்பினை ஏற்று அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்து சிறப்பித்தவர்கள்,
எங்களுக்கு நல்ல ஆலோசனைகள் மற்றும்
ஆதரவுகளை வழங்கி வரும் பெரியோர்கள்,
எங்கள் பகுதி தாய்மார்கள்,சகோதரிகள்
மேலும் தயாள குணத்துடன் உதவிகளை மிக தாராளமாக அளித்து வரும் அன்பின் உள்ளூர்வாசிகள், சென்னை, சிங்கப்பூர், ஹாங்காங், பாங்காங் ,குவைத், அரபு அமீரகம், வியட்நாம், பஹ்ரைன் மற்றும் சவுதி ரியாத், புனித மக்கா,
குறிப்பாக ஜித்தா மற்றும் பல பகுதிகளில் வாழ் அனைத்து
உறுப்பினர்கள், நண்பர்கள், பெரியோர்கள்
அனைவருக்கும் எங்களது மனப்பூர்வமான நன்றிகளையும், பாராட்டுகளையும் இதன் வாயிலாக மிகுந்த மகிழ்வுடன் தெரிவித்து கொள்கின்றோம்..
இது போல் தொடர்ந்து உங்களின் நல் உதவியும் ஒத்துழைப்பும் தொய்வின்றி வழங்கிடுமாரும் மிக்க அன்புடன் வேண்டுகின்றோம்.
வல்லோன் அல்லாஹ் வள்ளல் நபிகள் நாதரின் துவா பொருட்டால் இதற்கான கூலியை
நம் அனைவருக்கும் இரு உலகிலும் வழங்கி
பேரருளும்,,பெரும்கிருபையும் செய்வானாக ஆமீன்..
எங்கள் அமைப்பின் தாரக மந்திரமாகிய
"சுமூக உடன்பாடு சமூக மேம்பாடு"
இது நம்மில் எங்கும் எப்பொழுதும் என்றும் உண்டாகட்டுமாக..
என்றும் நன்றி கலந்த அன்புடன்...
நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள்
ரஹ்மத்துன்-லில் ஆலமீன் மீலாது பேரியம்,
பொது நலப்பேரவை (உதயம்-1985)
குத்துக்கல் தெரு ,காயல்பட்டினம்.
சார்பாக சட்னி,செய்யது மீரான்
ஜித்தா,சவுதி அரேபியா.
இவர்களின் தெரிவூக்கு நம்மில் எந்த அமைப்பிற்கும் தொடர்பில்லை யாரும் மார்தட்ட வேண்டாம் . posted byரஹமத்துன் - லில் ஆலமீன் மீலாது பேரியம் & சமூக நலப்பேரவை (குத்துக்கல் தெரு,காயல்பட்டினம்.)[10 September 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 7898
அஸ்ஸலாமு அலைக்கும்.
ஒன்னாவது வார்டில் உதயமான இந்த
நல்ல எண்ணம் போல் மீதி உள்ள எல்லா வார்டிலும்
நடந்தால் எவ்வளவு நல்லா இருக்கும்.....
இது போன்ற நல்ல நடவடிக்கைகளில்
காயலில் உள்ள அனைத்து நிர்வாகிகள்,
பொதுமக்களும் அவசரம் கருதி
அவசியம் கலந்து பேசி நல்லதோர் முடிவு
காண வேண்டுமாய் அன்புடன் வேண்டுவோமாக.
அன்பு ஹாஜி லுக்மான் காக்கா அவர்களுக்கும்,
விட்டு கொடுத்து அவர்களுக்கு வாய்ப்பு
அளித்த மற்ற நண்பர்கள்,பள்ளி நிர்வாகிகள் மற்றும்
நம் சகோதர சமுதாய மக்களுக்கும் மனமார்ந்த
பாராட்டுகளும்,நன்றியும்.
குறிப்பு.கோமான் ஜமாஅத் பலம் வாய்ந்தது,
இதனால் பலனும் அங்குள்ள எல்லோருக்கும் கிடைக்கின்றது.
இவர்களின் தெரிவூக்கு நம்மில் எந்த அமைப்பிற்கும்
தொடர்பில்லை யாரும் மார்தட்ட வேண்டாம்..
வேண்டால்சந்தோஷ படுவோம்...
என்றாலும் மனதார வாழ்த்தி
சங்கை செய்வதில் நம்மவர்கள் சளைத்தவர்கள் இல்லை...நன்றி
என்றும் மாற அன்புடன் ,
என்றும் மக்கள் சேவையில்
நல்லதோர் நகரும்,நகர் மன்றமும் விரும்பும்
ரஹமத்துன் - லில் ஆலமீன் மீலாது பேரியம் &
சமூக நலப்பேரவை (உதயம்-1985)
செய்தி: ஹாமிதிய்யா முதல்வருக்கு ‘சேவைச் செம்மல்‘ விருது வழங்கியமைக்காக மாநாட்டுக் குழுவினருக்கு மத்ரஸா நிர்வாகம் நன்றி தெரிவிப்பு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
அஸ்ஸலாமு அலைக்கும்.மறை ஒளி வீசும் மத்ரஸா ஹாமிதிய்யாவின் 'மாண்புயர் முதல்வர்'அவர்களுக்கு 'சேவை செம்மல்'விருது வழங்கியமைக்கு மனமார்ந்த நன்றிகள்.சுயநலமே தன் வாழ்வாக கருதும் இக்கால சூழலில் பொது நலத்திற்காகவே தன்னை அர்பணித்த மத்ரஸா ஹாமிதிய்யாவின் முதல்வர் அவர்களுக்கு ஒரு விருதல்ல!ஓராயிரம் விருதுகள் கொடுத்தாலும் மிகையாகாது.
ஹாமிதிய்யா மத்ரஸா வளர அரும் பாடுபடுபவர் தன் நலன் எதிர்பாராதவர் சமூக (சேவை) சிந்தனை வாதி ‘சேவைச் செம்மல்‘ விருதுக்கு பொருத்தமானவர் வல்ல அல்லாஹ் இவருக்கு இவுலக வாழ்விலும் மறு உலக வாழ்விலும் அனைத்தையும் வெற்றி ஆக்கி வைப்பானாக ஆமின்...
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross