காயல்பட்டினத்தில் எதிர்வரும் ஜூலை 5, 6 மற்றும் 8 ஆகிய தேதிகளில், தமிழக அரசின் ஏற்பாட்டில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது. இது குறித்து காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு (KEPA) அறிக்கை வெளியிட்டுள்ளது:
நீண்ட நாட்களாக ஏதாவது நோயால் (Chronic Illness) இன்னல்பட்டு வருவோரின் கவனத்திற்கு!!!
காயல்பட்டினத்தில் ஜூலை 5 (வெள்ளிக்கிழமை; சென்ட்ரல் மேல்நிலைப்பள்ளி) , ஜூலை 6 (சனிக்கிழமை; எல்.கே. மேல்நிலைப்பள்ளி) மற்றும் ஜூலை 8 (திங்கட்கிழமை; சுபைதா மேல்நிலைப்பள்ளி) ஆகிய தேதிகளில் மாவட்ட ஆட்சியரின் உத்தரவு அடிப்படையில், சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறவுள்ளன. இந்த முகாமில் இரத்த சோகை, வைட்டமின் குறைபாடுகள், இரைப்பை மற்றும் குடல் நோய், புற்று நோய், இதயம் - தோல் - காது - மூக்கு - தொண்டை - கண் நோய்கள் போன்றவைகளுக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முந்தைய முகாம்களில் காயல்பட்டினத்தில் நீண்ட நாட்களாக ஏதாவது நோயால் (Chronic Diseases) பாதிக்கப்பட்டவர்கள் முழுமையாக கலந்துகொள்ளாத காரணத்தால் - நகரில் புற்று நோய் போன்ற நோய்கள் இல்லை என்று அரசுக்கு தகவல்கள் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் சுற்றுச்சூழலை மாசு படுத்தும் DCW நிறுவனத்தால் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் - முழுமை இல்லாத தகவல்கள் அடிப்படையில் - அறிக்கைகள் அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஆகவே - நடைபெறவுள்ள முகாமில் பொது மக்கள் – குறிப்பாக நீண்ட நாட்களாக ஏதாவது நோயால் (Chronic Diseases) [உதாரணமாக தொடர்ச்சியாக இருமல், மூச்சு திணறல், தோல் அரிப்பு போன்ற] பாதிக்கப்பட்டுள்ளவர்கள், இம்முகாமில் முழுமையாக கலந்துக்கொண்டு தகவலை பதிவு செய்யும்படி கேட்டுகொள்கிறோம். தாங்கள் வழங்கும் தகவல்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும்.
புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளோரின் கவனத்திற்கு!
சமீப காலத்தில் காயல்பட்டினத்தில் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளவரின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது நாம் அனைவரும் அறிந்ததே!
குறிப்பு:
வழமையாக நடைபெறும் மருத்துவ முகாம் என இந்த முகாமை மக்கள் எடுத்துக்கொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.
காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு (KEPA),
51/H1 ஆசாத் தெரு, காயல்பட்டினம்.
அரசு பதிவு எண்.11/2013 (தூத்துக்குடி மாவட்டம்)
இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|