தமிழ்நாடு மின்சார வாரியம் - தனது வாடிக்கையாளரிடம் பாதுகாப்பு வைப்பு தொகை (SECURITY DEPOSIT) வசூல் செய்கிறது. இந்த வைப்பு தொகை இரு ஆண்டுக்கு ஒரு முறை மறு பரிசீலனை செய்யப்பட்டு புதிய தொகை வாடிக்கையாளரிடம் வசூல் செய்யப்படும். இவ்வாண்டு ஏப்ரல் மாதம் - தமிழகம் முழுவதும், இத்தொகை மறு பரிசீலனை செய்யப்பட்டு, புதிய தொகை வாடிக்கையாளருக்கு அறிவிக்கப்பட்டு வருகிறது.
இந்த ஏப்ரல் மாதத்திற்கு முந்தைய 12 மாதத்தின் மூன்று மாத சராசரி தொகை அடிப்படையில் கூடுதல் பாதுகாப்பு வைப்பு தொகை நிர்ணயம் செய்யப்படுகிறது. புதிய தொகை - ஏற்கனவே வாடிக்கையாளரால் கட்டப்பட்டுள்ள தொகையை விட (9 சதவீத ஆண்டு வட்டியுடன்) கூடுதலாக இருந்தால் - மீதி தொகையை, எதிர்வரும் மாத தொகையுடன் கட்டவேண்டும்.
கூடுதல் வைப்பு தொகையை (ADDITIONAL SECURITY DEPOSIT) ஒரே தவணையில் கட்டமுடியாதவர்கள் - மூன்று தவணையாக கட்டலாம். இதற்கான விண்ணப்ப கடிதத்தை, வாடிக்கையாளர் - தாங்கள் பணம் கட்டும் மின்சார வாரிய அலுவலகத்தில் வழங்கி, இதற்கான அனுமதியை பெறலாம்.
நகரில் தற்போது இந்த கூடுதல் பாதுகாப்பு வைப்பு தொகை வசூலிக்கப்பட்டு வருகிறது. |