இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் காயல்பட்டினம் கிளை அலுவலகம் நகரின் பல்வேறு பகுதிகளில் இயங்கி வந்துள்ளது. தற்போது பெரிய தெருவில் அவ்வலுவலகம் அமைந்துள்ளது.
இந்நகரிலுள்ள கோஷா பெண்களைக் கருத்திற்கொண்டு, இதுநாள் வரை இந்த வங்கி, சென்ட்ரல் வங்கி, ஐசிஐசிஐ வங்கி என நகரில் இயங்கி வரும் முக்கிய வங்கிகளில் பெண்களுக்கு தனிப்பகுதி நடைமுறையில் உள்ளது.
ஆனால், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் மட்டும் கடந்த சில ஆண்டுகளாகவே பெண்கள் பகுதியில் சேவைக் குறைபாடுகள் உட்பட பல்வேறு சேவைக் குறைபாடுகள் இருந்து வருவதாக வாடிக்கையாளர்கள் கூறி வருகின்றனர்.
இன்று காலையில் அவ்வங்கிக்குச் சென்று வந்த பலர், பொதுப்பகுதியில் பெண்கள் நிறைந்திருப்பதைக் கண்ணுற்று தமது அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
இதுகுறித்து வங்கி மேலாளரிடம் விளக்கம் கேட்டபோது, “அலுவலர் பற்றாக்குறை காரணமாக சில நேரங்களில் பெண்கள் பகுதி சேவை பாதிக்கப்படுகிறது... தற்போது சில அலுவலர்கள் 3 நாட்கள் விடுப்பில் உள்ளமையால் கூடுதலாக சிரமம் ஏற்பட்டுள்ளது... எம்மிடம் இருக்கும் அலுவலர்களைக் கொண்டு இயன்ற வரை குறையற்ற சேவையை வழங்கவே நாங்களும் விரும்புகின்றோம்...” என்றார்.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |