திராவிட முன்னேற்றக் கழக மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ஹஸன் முஹம்மத் ஜின்னா, அண்ணா அறிவாலய வழக்கறிஞர் தாமோதரன் ஆகியோர், தேர்தல் களப்பணிக்காக, தமிழகத்தின் பெரும்பாலான சட்டமன்றத் தொகுதிகளுக்குச் சென்று வருகின்றனர்.
அந்த வரிசையில், 29.04.2016. வெள்ளிக்கிழமையன்று அவர்கள் காயல்பட்டினம் வருகை தந்தனர். 18.00 மணியளவில், புகாரி ஷரீஃப் அலுவலகத்திற்கு வந்த அவர்களுக்கு அங்கு வரவேற்பளிக்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, ஊரின் பல சில முக்கிய பகுதிகளைப் பார்த்த பின்னர், அவர்கள் திரும்பிச் சென்றனர்.
அவர்களது இவ்வருகையின்போது நகர திமுக அங்கத்தினரான அபூபக்கர் அஜ்வாத், மரைக்கார், கலீல் ரஹ்மான், எஸ்.இ.முஹம்மதலீ ஸாஹிப் (டீ.எம்.) உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தகவல்:
கலீல் ரஹ்மான்
|