காயல்பட்டினம் மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் வளாகத்தில் இயங்கி வரும் மத்ரஸத்துல் ஹாமிதிய்யாவின் திருக்குர்ஆன் மனன (ஹிஃப்ழு)ப் பிரிவுக்குப் புதிய ஆசிரியராக, தீவுத் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் எஸ்.ஏ.காதிரி அவர்களது மகன் ஹாஃபிழ் எம்.ஐ.கே.செய்யித் அபூதாஹிர் நியமிக்கப்பட்டுள்ளார்.
11.07.2019. வியாழக்கிழமையன்று காலையில் – மத்ரஸா வளாகத்தில் இதற்கான எளிய நிகழ்ச்சி நடத்தப்பட்டது. ஹாமிதிய்யா ஆசிரியர்களும், பொறுப்பாளர்களுமான மவ்லவீ சாவன்னா பாதுல் அஸ்ஹப் ஃபாஸீ தலைமையேற்க, மவ்லவீ ஏ.சுல்தான் அப்துல் காதிர் ரஹ்மானீ, மவ்லவீ எம்.எஸ்.காஜா முஹ்யித்தீன் மஹ்ழரீ, திருக்குர்ஆன் மனனப் பிரிவு முதன்மை ஆசிரியர் மவ்லவீ அபூபக்கர் ஸித்தீக் மிஸ்பாஹீ, ஹாமிதிய்யா முதல்வர் நஹ்வீ ஐ.எல்.நூருல் ஹக் நுஸ்கீ ஆகியோர் வாழ்த்துரையாற்றினர்.
ஒய்.எஸ்.முஹம்மத் ஃபாரூக் – புதிய ஆசிரியருக்கு மத்ரஸா நிர்வாகத்தின் சார்பில் சால்வை அணிவித்து கண்ணியப்படுத்தினார்.
ஹாமிதிய்யா ஆசிரியர் கம்பல்பக்ஷ் எஸ்.எச்.மொகுதூம் முஹம்மத் நன்றி கூற, செய்கு ஹுஸைன் பள்ளி இமாம் ஹாஃபிழ் என்.டீ.ஷெய்க் சுலைமான் துஆவுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது. இந்நிகழ்ச்சியில், மத்ரஸாவின் ஆசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
|