அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நவாஸ் கனீக்கு - காயல்பட்டினத்தில் நேற்று நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுக்கூட்டத்தில் வரவேற்பளிக்கப்பட்டுள்ளது. திரளானோர் பங்கேற்றுள்ளனர்.
இதுகுறித்து, அக்கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் வெளியிட்டுள்ள நிகழ்வறிக்கை:-
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை சார்பில், 13.07.2019. சனிக்கிழமையன்று 19.00 மணியளவில் காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. கட்சியின் நகர தலைவர் எம்.ஏ.முஹம்மத் ஹஸன் தலைமையேற்க, எம்.அப்துல் கனீ, எஸ்.எஸ்.இ.காழி அலாவுத்தீன் ஆலிம், நவ்ரங் எம்.ஸஹாபுத்தீன், எஸ்.பீ.முஹம்மத் அலீ பாஷா, எஸ்.ஏ.சி.ஹமீத், எல்.இ.அப்துல் காதிர், வஜீர் அஹ்மத், மவ்லவீ ஷாஹுல் ஹமீத், பெத்தப்பா சுல்தான் உள்ளிட்ட மாவட்ட – கிளைகளின் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
தூத்துக்குடி மாவட்ட கொள்கை பரப்புச் செயலாளர் என்.டீ.முஹம்மத் இஸ்மாஈல் புகாரீ நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். காயல்பட்டினம் நகர துணைச் செயலாளர் என்.டீ.அஹ்மத் ஸலாஹுத்தீன் கிராஅத் ஓத, நகரச் செயலாளர் ஏ.எல்.எஸ்.அபூ ஸாலிஹ் வரவேற்றார்.
தூத்துக்குடி மாவட்டத் தலைவர் பீ.மீராசா மரைக்காயர், மாவட்டச் செயலாளர் எஸ்.ஜெ.மஹ்மூதுல் ஹஸன், மாநில துணைச் செயலாளர் எஸ்.ஏ.இப்றாஹீம் மக்கீ, மாவட்ட துணைத்தலைவர் மன்னர் பாதுல் அஸ்ஹப், திமுக நகரச் செயலாளர் கே.ஏ.எஸ்.முத்து முஹம்மத், காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.எஸ்.ஜமால் என்ற ஜமால் மாமா, அதன் மாநில பொதுக்குழு உறுப்பினர் என்.ஷாஜஹான், மதிமுக மாவட்டப் பொருளாளர் காயல் எஸ்.இ.அமானுல்லாஹ், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டக் குழு உறுப்பினர் பன்னீர் செல்வம், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டலச் செயலாளர் சோ.சு.தமிழினியன், இந்திய கம்யூனிஸ்ட் நகர செயலாளர் பீ.ஹஸன் மெய்தீன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பேச்சாளர் லால்பேட்டை ஸல்மானுல் ஃபார்ஸீ ஆகியோர் வாழ்த்துரையாற்றினர்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளரும், அதன் சட்டமன்றக் கட்சித் தலைவருமான கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர், அமைப்புச் செயலாளர் நெல்லை அப்துல் மஜீத் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி உறுப்பினர் கே.நவாஸ் கனீ ஏற்புரையாற்றினார். தனக்கான வரவேற்பு என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும், தமிழகத்திலிருந்து பாராளுமன்றம் சென்றுள்ள சமுதாயத்தின் ஒரே உறுப்பினர் என்ற அடிப்படையில் தனது பொறுப்பை உரிமையுடன் உணர்த்தும் பொதுக்கூட்டமாகவே இதைத் தான் பார்ப்பதாகவும், அனைவரின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும் வகையில் – சமுதாயத்தின் ஒட்டுமொத்த குரலாகவும், தன்னை நம்பி வாக்களித்த – அனைத்து சமுதாயங்களைச் சேர்ந்த தொகுதி மக்களின் உரிமைக் குரலாகவும் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து குரல் எழுப்பப் போவதாக அவர் கூறினார்.
அவருக்கு – இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை சார்பில் மலர் மாலை அணிவித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை சார்பில் நகர்நலக் கோரிக்கைகளை உள்ளடக்கிய மனுவும் அவரிடம் கையளிக்கப்பட்டது.
பின்வருமாறு நகர ஜமாஅத்துகள், பொதுநல அமைப்புகள், கூட்டணிக் கட்சிகள் சார்பில் சால்வை அணிவித்து கண்ணியப்படுத்தப்பட்டது:-
அப்பா பள்ளி ஜமாஅத் சார்பில் வட்டம் ஹஸன் மரைக்கார்,
காதிரிய்யா கொடிமர சிறுநெய்னார் பள்ளி & மஹ்பூப் சுபுஹானீ சங்கம் சார்பில் அதன் செயலாளர் எம்.ஏ.மஹ்மூத்,
தாயிம் பள்ளி சார்பில் ஏ.ஆர்.தாஹா,
அஹ்மத் நெய்னார் பள்ளி சார்பில் என்.டீ.அஹ்மத் ஸலாஹுத்தீன்,
ஜீலானீ பள்ளி சார்பில் லெப்பப்பா ரஹ்மத்துல்லாஹ்,
காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை சார்பில் அதன் தலைவர் எஸ்.ஓ.அபுல்ஹஸன் கலாமீ, செயலாளர் வாவு ஷம்சுத்தீன், பொருளாளர் ஜெஸ்மின் கலீல்,
ஜாவியா அரபிக் கல்லூரி சார்பில் எஸ்.எம்.எம்.ஸதக்கத்துல்லாஹ் என்ற ஹாஜி காக்கா,
நஸூஹிய்யா பெண்கள் மத்ரஸா சார்பாக எம்.எல்.ஷேக்னா லெப்பை,
அபூதபீ அய்மான் சங்க பொதுச் செயலாளர் எஸ்.ஏ.சி.ஹமீத்,
அமீரக காயிதேமில்லத் பேரவை சார்பில் எம்.ஏ.சி.லெப்பைத் தம்பி,
ஹாங்காங் தமிழ்ச் சங்க முன்னாள் தலைவர் ஏ.எஸ்.ஜமால்,
ஹாங்காங் காயிதேமில்லத் பேரவை சார்பில் ஏ.டபிள்யு.கிழுறு முஹம்மத் ஹல்லாஜ்,
காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை – ஹாங்காங் சார்பில் ஹாஃபிழ் ஏ.எல்.இர்ஷாத் அலீ,
திமுக நகர செயலாளர் கே.எஸ்.முத்து முஹம்மத், நகர துணைத் தலைவர் லேண்ட் மம்மி, 04ஆவது வார்டு செயலாளர் நவ்ஃபல், திமுக துறைமுகம் வட்டப் பிரதிநிதி முஹம்மத் ஹஸன்,
மதிமுக மாவட்ட பொருளாளர் காயல் எஸ்.இ.அமானுல்லாஹ், நகர செயலாளர் பத்ருத்தீன்,
காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினர் என்.ஷாஜஹான்,
மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.பன்னீர் செல்வம்,
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டல பொறுப்பாளா சோ.சு.தமிழினியன்,
தாயிம்பள்ளி மஜ்லிஸுல் கவ்து சங்கம் சார்பாக டான் ஷாஹுல் ஹமீத்,
முஸ்லிம் லீக் 04ஆவது வார்டு செயலாளர் எம்.டீ.எஸ்.முஹம்மத் முஹ்யித்தீன்,
எஸ்.டீ.கார்கோ முன்னாள் ஊழியர் மதீனா புகாரீ ஆகியோர் சால்வை அணிவித்தனர்.
காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை சார்பில் நகர்நலக் கோரிக்கைகளை உள்ளடக்கிய மனுவும் அவரிடம் கையளிக்கப்பட்டது.
நகர பொருளாளர் கே.எம்.என்.மஹ்மூத் லெப்பை நன்றி கூற, மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது. இக்கூட்டத்தில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்டத்தின் அனைத்துக் கிளைகளது அங்கத்தினரும், காயல்பட்டினத்தின் அனைத்துப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களும் திரளாகக் கலந்துகொண்டனர்.
கூட்டம் நிறைவுற்ற பின், எல்.கே.லெப்பைத் தம்பி சாலையில் – தனியார் வணிக நிறுவனம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள ‘காயிதேமில்லத் நினைவு’ குடிநீர் சேவையை, நாடாளுமன்ற உறுப்பினர் கே.நவாஸ் கனீ துவக்கி வைத்தார்.
முன்னதாக - தேர்தலில் வெற்றி பெற்று, காயல்பட்டினம் வந்த நாடாளுமன்ற உறுப்பினர் கே.நவாஸ் கனீ, வயது மூப்பு காரணமாக ஓய்விலிருக்கும் – இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளையின் மூத்த தலைவர்களான வாவு சித்தீக் ஹாஜியார், வாவு அப்துல் கஃப்பார் ஹாஜியார் ஆகியோரை, ஆறாம்பள்ளித் தெருவிலுள்ள அவர்களது இல்லத்தில் சந்தித்து, நலம் விசாரித்து, வாழ்த்து பெற்றார்.
பின்னர் கடற்கரை சென்ற அவரை, அங்கிருந்த பொதுமக்கள் சந்தித்துப் பாராட்டு தெரிவித்தனர்.
பின்னர், வரகவி காஸிம் புலவர் மக்பராவில் ஜியாரத் செய்தார். அங்கு அவருக்கு மக்பரா செயலாளர் அபூபக்கர் சால்வை அணிவித்தார். வார்டு செயலாளர் கே.எம்.என்.உமர் அப்துல் காதிர் துஆ இறைஞ்சினார். காயல்பட்டினம் பெரிய சதுக்கையிலிருந்து – குறுக்கத் தெரு, மெயின் ரோடு வழியாக பொதுக்கூட்ட மேடை வரை பேண்ட் வாத்தியங்கள் முழங்க அவர் நகர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டதும் - பெரிய சதுக்கை சந்திப்பு, காதிரிய்யா கொடிமர சிறுநெய்னார் பள்ளி சந்திப்பு, வள்ளல் சீதக்காதி திடல் முகப்பு ஆகிய இடங்களில் அவர் பிறைக்கொடி ஏற்றியதும் குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|