சஊதி அரபிய்யா – ஜித்தா காயல் நல மன்றத் தலைவர் பிரபு எஸ்.ஜெ.நூருத்தீன் நெய்னா உடைய தாயார் – காயல்பட்டினம் சதுக்கைத் தெருவைச் சேர்ந்த நெ.செ.செய்யித் முஹம்மத் ஃபாத்திமா என்ற செய்பிள்ளை, இன்று 15.30 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 66. அன்னார்,
மர்ஹூம் நெ.செ.ஷெய்க் அலீ ஜபரூத் மவ்லானா அவர்களின் மகளும்,
மர்ஹூம் பிரபு காதிர் சாமுனா லெப்பை அவர்களின் மருமகளாரும்,
மர்ஹூம் பிரபு கே.எஸ்.சுல்தான் ஜமாலுத்தீன் அவர்களின் மனைவியும்,
பிரபு எஸ்.ஜெ.நூருத்தீன் நெய்னா, பிரபு எஸ்.ஜெ.செய்யித் முஹ்யித்தீன் ஆகியோரின் தாயாரும்,
குளம் ஷேக்னா லெப்பை, கத்தீபு பி.ஏ.காதிர் சுலைமான் ஆகியோரின் மாமியாரும்,
பிரபு எஸ்.எம்.ஜபரூத் மவ்லானா, பிரபு என்.என்.சுல்தான் ஜமாலுத்தீன் ஆகியோரது தந்தையரின் தாயாரும் ஆவார்.
அன்னாரின் ஜனாஸா, நாளை (ஜூலை 15 திங்கட்கிழமை) 08.00 மணிக்கு, காயல்பட்டினம் அஹ்மத் நெய்னார் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
தகவல்:
சஊதி அரபிய்யா - ஜித்தாவிலிருந்து...
சட்னி செய்யித் மீரான்
|