மக்காஹ்வின் ஹரம் ஷரீப் பகுதியை - இந்திய ரூபாய் 1 லட்சம் கோடி மதிப்பில் விரிவாக்கும் பணி - வெள்ளியன்று (ஆகஸ்ட் 19)
அதிகாரப்பூர்வமாக துவக்கிவைக்கப்பட்டது. இதனை சவுதி அரேபியா நாட்டு மன்னர் அப்துல்லாஹ் துவக்கி வைத்தார்.
சவுதி ரியல் 8000 கோடி ரியால் மதிப்பில் நிறைவேற்றப்பட உள்ள இத்திட்டத்தின் பாதி தொகை, ஹரத்தை சுற்றி உள்ள நிலங்களை கையகப்படுத்த
பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புது கட்டுமான பணிகள் ஹரத்தின் வட மேற்கு மற்றும் வட கிழக்கு பகுதிகளிலும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹரத்தின் தற்போதைய
பரப்பளவு 356,000 சதுர அடி ஆகும். இதில் ஒரே நேரத்தில் 770,000 யாத்ரிகர்கள் அமரலாம். விரிவாக்கப்பணிகள் முடிந்தப்பின் பரப்பளவு 456,000
சதுர அடி என உயரும். மேலும் 12 லட்சம் யாத்ரிகர்கள் ஒரே நேரத்தில் அமரலாம்.
வெள்ளியன்று நடந்த நிகழ்ச்சியில் மக்காஹ் மணிக்கூடாரம், புதியதாக விரிவாக்கப்பட்டுள்ள சபா - மர்வா நடைப்பகுதி (மசா), மன்னர் அப்துல்
அஜீஸ் கோபுரங்கள், மினாவில் உள்ள ஜமராத் பாலங்கள், மஷேர் ரயில்வே மற்றும் மஸ்ஜிதே நபவியின் கூரைகள் ஆகியவற்றை மன்னர்
அப்துல்லாஹ் அதிகாரப்பூர்வமாக துவக்கிவைத்தார்.
விரிவாக்கப்பட்டுள்ள சபா - மர்வா நடைப்பகுதியை தற்போது மணிக்கு 1,18,000 பேர் பயன்படுத்தலாம். இதுவரை 44,000 பேர் பயன்படுத்தமுடியும்
அளவிலேயே அப்பாதை இருந்தது.
புகைப்படங்கள்:
Arab News
|