தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் காயல்பட்டின கிளை நகரில் ஆம்புலன்ஸ் சேவை நடத்தி வருகிறது. அதனை பராமரிக்க ஆகும் செலவினை ஈடுகட்ட நிதி கோரி அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.
எவரொருவர் அதனை (ஓர் ஆத்மாவை) வாழ வைக்கிறாரோ,அவர் மக்கள் யாவரையும் வாழ வைத்தவரைப் போல ஆவர். - அல்குர்ஆன் 5:32
பேரன்பின் பெருந்தகையீர்,
அஸ்ஸலாமு அழைக்கும்.
உங்கள் அனைவருக்கும் த.மு.மு.க வின் புனித ரமலான் நல்வாழ்த்துக்கள்.
திரும்பும் திசையெல்லாம் உயிர்காக்கும் பணியில் த.மு.மு.க வின் அவசர ஊர்திகளின் சக்கரங்கள் ஓய்வின்றி சுழன்றபடியே இருக்கின்றன,எல்லாப் புகழும் இறைவனுக்கே!
இறைவனின் பேருதவியால் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பாக, தமிழ்நாடு முழுவதும் சுமார் 100 அவசர ஊர்திகள் (Ambulance)அனைத்துச் சமுதாய மக்களுக்கும் அவரவர் பொருளாதார வசதியுக்கு ஏற்ப சலுகைக் கட்டணத்திலும்,ஏழைகளுக்கு முற்றிலும் இலவசமாகவும் இயக்கப்பட்டு வருகின்றது.இவ்வருசையில் நமதூர் த.மு.மு.க கிளையின் சார்பாக, கடந்த 2007 ஆம் ஆண்டு நமதூரின் நல்ல உள்ளங்களின் பொருளுதவியைக் கொண்டு அவசர ஊர்தி ஒன்று வாங்கப்பட்டு, நமதூர் மற்றும் சுற்றுவட்டாரக் கிராமங்களில் வசிக்கும் அனைத்துச் சமுதாய மக்களுக்காக 24 மணி நேரமும் தொய்வின்றித் தொடர்ந்து செவையாற்றி வருகிறது.
பொதுமக்களுக்கு சலுகைக் கட்டணத்திலும்,வறியவர் மற்றும் ஏழைகளுக்கு வண்டிக்கு நிரப்பும் எரிபொருள் விலைக்கும்,மிக மிக வறியவர்களுக்கும், எதிர்பாராதவிதமாக விபத்தில் சிக்கியவர்களுக்கும் முற்றிலும் இலவசமாகவும் இடைவிடாது சேவையாற்றி வருகிறது.
பல வருகங்கள் கடந்து விட்டதாலும்,பல்லாயிரக்கணக்கான கிலோமீட்டர் ஓடியதாலும்,இந்த அவசர ஊர்தியின் பராமரிப்புச் செலவுகள் அதிகமாகிக் கொண்டே வருகின்றன.இது மட்டுமின்றி ஒவ்வொரு வருடமும் தகுதிச் சான்று (F.C) காப்பீட்டுக் கட்டணம் (Insurance) போன்றவையும் செலுத்த வேண்டியுள்ளது.இந்த அவசர ஊர்தியை லாப நோக்கமின்றி இயங்கி வருவதாலும்,இதற்கென நிரந்தர நிதி எதுவும் இல்லாததாலும்,பிரதி மாத ஓட்டுனர் ஊதியம் வழங்குவதற்கே நெருக்கடியான நிலை ஏற்படுகிறது.
இந்த அவசர ஊர்தியை அனைத்துப் பராமரிப்புக்களையும் செவ்வனே செய்து எந்நேரமும் தயார் நிலையில் வைத்திருந்தால்தான் இதனைப் பயன்படுத்துவோருக்கு முழுப்பயன் கிடைத்திடச் செய்யமுடியும்.
கண்ணியத்திற்குரியவர்களே! தனவந்தர்களே! சமுதாய அக்கறை கொண்டவர்களே! இந்த அவசர ஊர்தியின் பராமரிப்புச் செலவினக்களுக்காக,உங்களது ஜகாத்தையும்,சதக்காவையும், நன்கொடைகளையும் அள்ளித்தாருங்கள்.இதன் மூலம் இறைவனின் துணைகொண்டு,விலைமதிப்பற்ற பல உயிர்களை நாம் காத்திட இயலும்.
மேற்சொன்ன தூய பணிக்கு வாரி வழங்குபவர்கள்,தயவுசெய்து கீழ்காணும் அலைபேசி எங்களில் தொடர்பு கொண்டால் நமது சகோதரர்கள் உங்களிடம் நேரில் வந்து நன்கொடையினைப் பெற்றுக்கொண்டு அதற்குரிய ரசீதினை உங்களுக்கு வழங்குவார்கள்.மேலும் வெளி ஊர்களில் இருப்பவர்கள் கீழ்காணும் வங்கி கணக்கில் உங்கள் நன்கொடையை அனுப்பலாம்.
புண்ணியங்கள் பூத்துக் குலுங்கும் புனித ரமளானில் நமது நற்செயல்களை எல்லாம் வல்ல அல்லாஹ் பொருந்திக் கொண்டு,நோயற்ற வாழ்வையும்,குறையற்ற செல்வத்தையும் தந்தருளப் பிரார்த்திக்கிறோம்.
நன்றி. வஸ்ஸலாம்.
ஜாகிர் - 99940 97217
(த.மு.மு.க நகரத் தலைவர்)
தமீமுல் அன்சாரி - 98946 28034
(த.மு.மு.க நகரத் துணைத் தலைவர்)
முஜீபுர் ரஹ்மான் - 98949 80155
(த.மு.மு.க நகர மருத்துவ அணிச் செயலாளர்)
வங்கி கணக்கு:
M.A. MUJIBUR RAHMAN,
A/c 6153 0101 7010,
ICICI Bank,
kayalpatnam branch.
என்றும் மக்கள் நலப்பணியில்
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்,
காயல்பட்டனம் கிளை.
இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|