நகர்நலனுக்காக களமிறங்கிப் பணியாற்றும் நோக்கில் அண்மையில் துவக்கி செயல்படுத்தப்பட்டு வருகிறது “காக்கும் கரங்கள் நற்பணி மன்றம்”. இதன் அலுவலகம் காயல்பட்டினம் ஸீ-கஸ்டம்ஸ் சாலையில், கடைப்பள்ளிவாசலுக்கு எதிரிலுள்ள வாடகைக் கட்டிடத்தின் முதன்மாடியில் செயல்பட்டு வருகிறது.
இவ்வமைப்பின் சார்பில் இன்று (21.08.2011) மாலையில் இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அலுவலகம் அமைந்துள்ள கட்டிடத்தின் மேல்மாடி திறந்தவெளியில் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
அமைப்பின் தலைவர் எம்.ஏ.கே.ஜெய்னுல் ஆபிதீன் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார். காயல்பட்டினம் ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறவனத்தின் பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் சாவன்னா பாதுல் அஸ்ஹப் ஃபாஸீ துஆ இறைஞ்சினார். காக்கும் கரங்கள் அமைப்பின் ஆலோசகர் ஆசிரியர் அப்துல் ரஸ்ஸாக் அனைவருக்கும் நன்றி கூறினார்.
பின்னர் நடைபெற்ற இஃப்தார் - நோன்பு துறப்பில் தண்ணீர், பேரீத்தம்பழம் அடங்க, கஞ்சி, வடை வகைகள், கடற்பாசி, பழ வகைகள் மற்றும் குளிர்பானம் பரிமாறப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், காயல்பட்டினம் பைத்துல்மால் அறக்கட்டளை செயலாளர் ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர், ஹாஜி உ.ம.ஷாஹுல் ஹமீத், ஹாஜி துளிர் எம்.எல்.ஷேக்னாலெப்பை, கேப்டன் சதக்கத்துல்லாஹ், கடற்கரை முஹ்யித்தீன் பள்ளியின் தலைவர் ஜுவல் ஜங்ஷன் கே.அப்துர்ரஹ்மான், செயலாளர் ஹாஜி ‘முத்துச்சுடர்‘ என்.டி.இஸ்ஹாக் லெப்பை, பொருளாளர் கோமான் மீரான், இக்ராஃ கல்விச் சங்க நிர்வாகி ஹாஜி ஏ.தர்வேஷ் முஹம்மத், மக்கள் தொடர்பாளர் ஹாஜி என்.எஸ்.இ.மஹ்மூத் உள்ளிட்ட நகரப் பிரமுகர்களும், காக்கும் கரங்கள் அமைப்பின் நிர்வாகிகள், உறுப்பினர்களும் திரளாகக் கலந்துகொண்டனர்.
களத்தொகுப்பு மற்றும் படங்கள்:
M.W.ஹாமித் ரிஃபாய்,
காயல்பட்டினம். |