எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களுக்கு மேலான சுவனபதியை வழங்கி அருள்புரிவானாக . அன்னார் குடும்பத்தினருக்கு அழகான பொறுமையை வழங்கி அருள்புரிவானாக ஆமீன்.
என் அன்பிற்குறிய உமர் ரிள்வான் ஆலிம் அவர்களுக்கு சீக்கிரமாகவே குணமடைந்து எங்கள் நாடு திரும்ப எல்லாம் வல்ல அல்லாஹ் அருள்புரிவானாக ! ஆமீன். வஸ்ஸலாம்
இஜ்திமாவுடைய வெற்றி posted byஅஹமத் (சிங்கப்பூர்)[13 April 2013] IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 26843
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
தப்லீக் இஜ்திமாக்களின் நோக்கம் வெறும் கூட்டத்தை கூட்டுவதற்காக அல்ல. ஒவ்வொரு நபரும் அல்லாஹ்வுடைய பாதையில் செல்வதற்காக ஆர்வமூட்டி தன்னுடைய நேரத்தையும் தன்னுடைய பொருளையும் தியாகம் செய்து தங்களுடைய ஈமானை தாங்களே சரி செய்வதற்கும் ,பலப்படுத்திக் கொள்வதற்காகவே இந்த இஜ்திமாக்களே தவிர வேறில்லை.
இஜ்திமாவுடைய வெற்றி எத்தனை நபர்கள் கூடினார்கள் என்பது முக்கியமல்ல மாறாக எத்தனை ஜமாஅத்கள் அல்லாஹ்வுடைய பாதையில் சென்றார்கள் . என்பதை பொருத்துதான்.
அல்ஹம்துலில்லாஹ் இந்த இஜ்திமாவின் மூலம் ஏறக்குறைய 25 ஜமாஅத்கள் புறப்பட்டு சென்றிருக்கின்றனர்.
எல்லாம் வல்ல அல்லாஹ் யார் யாரெல்லாம் உன்னுடைய பாதையில் தங்களுடைய ஈமானை சரிசெய்வதற்காகச் சென்றார்களோ அவர்களுடைய தூய எண்ணத்தை நீ கபூல் செய்வாயாக ! ஆமீன் . எங்களுக்கும் அந்த வாய்ப்பினை தந்தருள்வாயாக ! ஆமீன் .
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ,
மாஷா அல்லாஹ் ! அல்ஹம்துலில்லாஹ் . யா அல்லாஹ் , எந்த மக்கள் இந்த இஜ்திமாவுடைய வெற்றிக்காக உயிராலும் உடலாலும் உள்ளத்தாலும் , பாடுபட்டார்களோ அவர்கள் அத்தனை பெயருக்கும் அதற்குடைய கூலியை இம்மையிலும் மறுமையிலும் முழுமையாக கொடுத்து மேலான ஜனத்துல் ஃபிர்தவ்ஸ் என்னும் சுவர்க்கத்தில் அவர்களோடு எங்கள் எல்லோரையும் சேர்த்தருள்புரிவாக ! ஆமீன்.
Moderator: செய்தியின் தொடர்பைத் தாண்டிய வாசகங்கள் தணிக்கை செய்யப்பட்டுள்ளது.
சிங்கை காயல் நலமன்ற இந்த உதவித்திட்டம் சில வருடங்கலாக செய்து வருகின்றோம்.
இந்த செய்தியில், கொடுக்கப்படும் பொருட்களின் படங்கள்தான் இருக்கின்றதே தவிர, வாங்குபவர்களின் பெயர்களோ அல்லது அவர்களது புகைப்படங்களோ இல்லைதானே!
இன்ஷா அல்லாஹ் எங்களுடைய திட்டத்தில் இரகசியம், கண்ணியம், அமானிதம் எப்பொழுதும் பாதுகாக்கப்படும் என்று உறுதி அளிக்கின்றோம்.
இந்த செய்திகள் மக்களுக்கு ஆர்வமூட்டுவதற்காகவே அன்றி பெயருக்காகவோ அல்லது புகழ்வதற்காகவோ அல்ல
எங்கள் சிங்கை காயல் நலமன்றத்தின் வெற்றி, கொள்கை அடிப்படையில் பலவிதமாக இருந்தாலும் காயல் நலனுக்காக ஒற்றுமையையும், தலைமைக்கு கட்டுப்படுதலும்,
ஆரம்ப மக்களின் சிறந்த வழிகாட்டுதலும்தான் முக்கிய காரணங்களாக இருக்கின்றன என்பதை இந்த நல்ல நேரத்தில் தெரிவித்துக் கொள்கின்றோம்.
புகழ் அனைத்தும் எல்லாம் வல்ல அல்லாஹ்விற்கே சொந்தம். எங்களுடைய கூலியையும் அவனிடமே எதிர்ப்பார்கின்றோம்
மர்ஹூம் அவர்களின் இறுதி நாட்கள் posted byஹாஃபிழ் அஹ்மது (சிங்கப்பூர்)[23 September 2011] IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 8680
நல்ல முடிவு பயபத்தி(உடையவர்களு)க்கே உரியதாகும் அல்குர்ஆன் 20:132
D.M.ஹாஜியின் மரணம் அவர்கள் அதிகமாக படித்த ஹதீது தொகுப்பு(முன்தகப் அஹாதீது)களிலிருந்து ஒரு ஹதீதை எனக்கு ஞாபகப்படுத்துகின்றது.
பாடம்:தொழுகை ஹதீது எண்:186
அதில் ...அல்லாஹ்வை அவனது அந்தஸ்த்துக்கு தக்கவாறு புகழ்ந்தபின் .
என் வாழ்நாளின் கடைசிப் பகுதியை மிக சிறந்ததாக ஆக்கிவிடு .
எனது கடைசி அமலை மிகசிறந்த அமலாக ஆக்கிவிடு.
உன்னை சந்திக்கும் நாளை சிறப்பான நாளாக ஆக்கிவிடு
மர்ஹூம் அவர்கள் இந்த வருடம் ரமளான் கடைசிப்பதினைந்து நாட்கள் உம்றாவிலும் , ஆறு நோன்புகளும் கழித்து, இந்த வெள்ளி (16.09) யன்றுதான் நமதூருக்கு திரும்பினார்கள்.
18.09.2011 ஞாயிற்றுக்கிழமை தன் முஹல்லா(மரைக்கார்ப்பள்ளி)வின் கஷ்தில் கலந்துக் கொண்டு , இஷா தொழுகைக்குப் பின் பயானையும் முடித்துக் கொண்டு மரைக்கார்ப் பள்ளியின் கடைசி பகுதியில் ஒரு நபரை நோய் நலன் விசாரிக்க ஒரு ஜமாஅத் தயாரிக்கப்பட்டு , மோட்டார் சைக்கிளில் ஆஸ்தான நண்பர் ஹாஜி ஜெம் மைதீன் அவர்களுடன் சிறிது தூரம் சென்ற பொழுது மயக்கமுற்று ஆஸ்பத்திரியில் அட்மிட் செய்து நோய்வாய்ப்பட்ட மூன்று நாட்களுக்குள் யாருக்கும் எந்தவிதமான சிரமமும் இல்லாமல் இந்த உலகைவிட்டுப் பிரிந்தார்கள்.
இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
கடைசிப்பகுதி : உம்றா சென்றது, உதவிகள் பல செய்தது
கடைசி அமல் : கஷ்தில் கலந்துக்கொண்டு நோயாளியை நலன் விசாரிக்க சென்றது
கடைசி நாள் : முஹல்லாவின் கஷ்த் நாள்.
நீங்கள் அல்லாஹ்வுக்கு உதவி செய்தால் அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்வான். 47:07
தப்லீக் தஃவத்துடைய உழைப்பில் கடைசிவரை ஈடுபட்டு மக்களுக்கு மத்தியில் நல்ல பெயருடன் இவ்வுலகைப்பிரிந்தது அல்லாஹ் அவர்களுக்கு செய்த உதவியாகும்.
அல்லாஹ் மர்ஹூம் அவர்களுடைய கப்ரை பிரகாசமாக்குவானாக ,சுவர்ககத்தில் மேலான அந்தஸ்தை கொடுப்பானாக! ஆமீன்.
ஒரு தலை சிறந்த அழைப்பாளரை இந்த மண் இழந்துவிட்டது posted byஹாஃபிழ் அஹ்மது (சிங்கப்பூர்)[21 September 2011] IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 8596
அல்லாஹ்வின் பக்கம் அழைப்பாளரை, அல்லாஹ் தன் பக்கம் அழைத்துக் கொண்டான்
இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
அல்லாஹ் அன்னாரின் பிழைகளை மன்னித்து ஜன்னதுல் ஃபிர்தெளஸ் என்னும் சொர்க்கத்தை தந்து அருள்வானாக ! ஆமீன்
மேலும் அன்னாரின் குடும்பத்தாருக்கு அழகிய பொறுமையை வழங்குவானாக! ஆமீன்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross