செய்தி: அத்வானி தமிழகம் வரும்போதெல்லாம் முஸ்லிம்கள் வீடுகளில் சோதனை: காயல்பட்டினம் பற்றி இராம.கோபாலன் அவதூறு! முஸ்லிம் லீக் மாநிலத் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் கடும் கண்டனம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
நல்ல வார்த்தைகளையே பயன்படுத்துங்கள் posted byJSA BUKHARI (Dubai)[01 August 2013] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 29147
அஸ்ஸலாமு அலைக்கும்.
எனது அன்பான சகோதரர்களுக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள்.
எதிரிகளுக்கும் மரியாதையை கொடுப்பது என்பது இஸ்லாம் காட்டும் வழிநெறி. நமது நபிவழி. அதற்கு மாற்றமாக நடப்பதை நமது நபி அவர்கள் ஒருபோதும் அங்கீகரித்து இருக்கவே மாட்டார்கள் என்று எல்லா முஸ்லிம்களுக்குமே தெரியும்.
எனவே கண்டிப்பதற்கும் கூட நல்ல வார்த்தைகளையே பயன்படுத்துவோமாக! இல்லாவிட்டால், வாசிப்பதற்கு முஸ்லிம்களுக்குக் கூட மனம் இடம் கொடுக்காது.
எதிரிகளை மதிப்பதைக் கொண்டும், அவர்களுக்கு ஹிதாயத் என்ற நேர்வழி கிடைக்கக் கூடும். அவர்களுடைய ஹிதாயத்துக்காக நாம் அனைவரும் பிரார்த்திப்போமாக! வஸ்ஸலாம்.
Re:...காவா லங்கா சிறப்புக் கூட்டம் posted byJ.S.A. Bukhari (Dubai)[21 July 2013] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 28816
அஸ்ஸலாமு அலைக்கும். நானும் என் குடும்பமும் சமீபத்தில் விடுமுறைக்காக இலங்கை சென்றிருந்தோம். கொழும்புவில் சகோதரர் ரபீக் அவர்களையும், சகோதரர் மக்கீ அவர்களையும் சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. நமதூர் காயல் சகோதரர்களை ஒரே இடத்தில் சந்திக்க வசதியாக ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யுமாறு அவர்கள் இருவரையும் வேண்டிக்கொண்டேன். அதன் அடிப்படையில் மிகக் குறுகிய அவகாசத்தில் இப்படிப்பட்ட ஒரு பெரிய கூட்டத்தையே ஏற்பாடு செய்தது எனக்கு மிக ஆச்சரியமாகவே பட்டது.
அந்தக் கூட்டத்தில் எனக்கு அறிமுகமான பல உறவினர்களையும், நண்பர்களையும் வெகுநாள் கழித்து சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது எனக்கு மிக்க மகிழ்வைத் தந்தது என்று தான் சொல்ல வேண்டும். கொழும்புவில் இருந்தும், கண்டி, பெர்விளை போன்ற தூரமான பகுதிகளில் இருந்தும் கூட நமது சகோதரர்கள் அந்த கூட்டத்துக்காக, தங்கள் தொழில் மற்றும் சொந்த காரியங்களைத் தள்ளி வைத்து விட்டு, அதிலும் சிலர் தங்கள் குடும்பத்துடன் மிகச் சிரமம் எடுத்து வந்து கலந்து கொண்டது எனக்கும், எனது குடும்பத்துக்கும் மிக்க மகிழ்வைத் தந்தது மட்டுமில்லாமல், நமது ஊர் மீதும், நமதூர் மக்கள் மீதும் அவர்களுக்கு உள்ள பற்றையும், அக்கறையையும் காட்டியது.
அப்படிப்பட்ட ஒரு ஒற்றுமையுடன் நமதூர் மக்கள் எல்லா இடங்களிலும் எல்லா நேரங்களிலும் நமதூர், நமதூர் மக்களின் நன்மைக்காக பாடுபடுவோமாக! அதற்கு அல்லாஹு துணை புரிவனாக! ஆமீன். வஸ்ஸலாம்
ரிசானா மரண தண்டனை விஷயம் posted byJ.S.A. BUKHARI (Dubai)[30 January 2013] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 25281
கனம் வெப்சைட் நிர்வாஹிகளுக்கு ஒரு வேண்டுகோள். தயவு செய்து இந்த கட்டுரைபற்றி மேற்கொண்டு எழும் வியாக்கியானங்கள், கருத்து பரிமாற்றங்களை பிரசுரிக்காமல், இத்தோடு முடித்துக்கொள்வது தான் உங்கள் வெப்சைடுக்கும், அதன் வாசகர்களுக்கும் நன்மை பயக்கும் என்று கருதுகிறேன். இல்லையேல், நீங்களே தேவையில்லாமல் ஒருத்தருக்கொருவர் மற்றவரின் மரியாதையை கெடுக்க வாய்ப்புகள் கொடுத்ததாக ஆகிவிடும்.
ரிசானா மரண தண்டனை விஷயம் posted byJ.S.A. BUKHARI (Dubai)[26 January 2013] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 25234
ஷாஜஹான் காக்காவின் கட்டுரை முழுக்க முழுக்க ஒரு பட்சமாகவே இருக்கிறது என்று மட்டும்தான் நான் சொல்ல முடியும். சந்தேகம் எழுவது இயற்கைதான். அதற்காக நாம் நினைப்பதுதான் சரி என்ற முடிவுக்கு வருவதுதான் சரியல்ல. அல்லாஹுதான் உண்மையை அறிவான்.
இதற்கு மேலும் இரண்டு தரப்பினரையும் குறை சொல்வது என்பது நமக்கு பாவமாக கூட முடியலாம். இனி இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க அனைவரும் கவனமாக இருக்க வேண்டும். இறைவனும் அதற்கு துணை புரிவானாக, ஆமீன்.
செய்தி: “நம்மை நாம் சரிசெய்தால்தான் நம் சமூகம் சரி செய்யப்படும்...” ‘மெகா‘ நடத்திய நகர்மன்ற நடவடிக்கை விழிப்புணர்வுக் கூட்டத்தில் நகர்மன்றத் தலைவர் உரை! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:“நம்மை நாம் சரிசெய்தால்தா... posted byJ S A Bukhari (Dubai)[24 November 2011] IP: 103.*.*.* India | Comment Reference Number: 13741
I was really overwhelmed by the beauty of the valuable morals and messages conveyed by our President to all the kayalites in her speech. Let us support the new President and her impressive team members to carry our their mission with full vigour.
Now that the elections are over and we have to reap the benefits thereof, I hope and request that all the members of our kayal society, irrespective of their leanings and allegiance to their respective groups must forgive and forget each other’s actual or perceived mistakes reportedly committed without having to really go into the intentions. In fact, everyone of us should take the initiative to seek forgiveness from each other if we believe or suspect that our words and actions could have hurt or harmed others.
cancer survey posted byJ.S.A. Bukhari (Dubai)[23 February 2011] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 2799
I congratulate all those involved in the noble work of conducting the cancer survey.
I shall appreciate the publihshing of the names of the male volunteers and the names of the husbands / fathers of female volunteers to let others like me to know of their selfless service to the society and their unparalleled commitment to the well-being of our brethren.
Clarification to Mr. Ahmed Sellavappa posted byJ.S.A. Bukhary (Dubai)[18 November 2010] IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 1064
I thank Mr. Ahmed Sellavappa for his constructive comments the same will be addressed positively in the future. However, I wish to clarify that the party was held for the first time at my villa on this day of Eid at this level on my PERSONAL invitation to all the Kayal Families residing in UAE and the Executive Committee Members of KWA-UAE only. This message was not properly conveyed in the news that was published in the website. Regret for any inconvenience or hard feeling. Wassalam
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross