செய்தி: புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நகர்மன்றத் தலைவர், உறுப்பினர்களுக்கு ‘மெகா‘ சார்பில் இன்றிரவு பாராட்டு விழா! சீதக்காதி திடலில் நடைபெறுகிறது!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
மாப்ளே Cna நச்சுன்னு சொன்னே . posted byDustagir (Dubai)[28 October 2011] IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 12371
தேர்தல் நேரத்துலையே எப்படிலாம் கரணம் அடிச்சாங்க? மக்களை எப்படிலாம் ஒற்றுமைய்னு சொல்லிக்கிட்டு கூறுபோட பாத்தாங்க?
இங்கு அல்லாஹ்வின் சூழ்ச்சி வென்றது. அத ஒத்துக்க மனசு இல்ல.
எங்கேந்து வாப்பா அகீதா வந்தது? கொள்கை வந்தது? அப்படி ஒரு பிரிவு நினைத்து இருந்தால் இன்னுமொரு வேட்பாளர் வந்து இருப்பார். ஊர் சின்னபின்னமாகி இருக்கும். எனக்கும் பேசவரும்னு எதையாவது உளற கூடாது. சகோதரி ஆபிதாவின் வெற்றியில் எல்லோருடைய பங்களிப்பும் இருந்தது. ஆனால் யாரும் சொந்தம் கொண்டாடவில்லை. மேகவிற்கு தனி இடம் உண்டு. அவங்க கூட வெற்றிவிழா எடுக்கவில்லை புதிதாக தேர்ந்தேடுக்கபட்டோருக்கு (நல்லா கவனிங்க - இந்த கொள்கை, அந்த கொள்கை, இவர் மத்திய காயல், அவர் மாநில காயல், இவர் நம்மை சார்ந்தவர், அவர் நம்மை சாராதவர் - இப்படி எந்த பாகுபாடும் இல்லாமல்) பாராட்டுவிழா தான் நடத்துறாங்க. இது பரவலா உலகெங்கும் நடக்கும் ஒரு சாதாரண நிகழ்வுதான். சொல்லப்போனால் இந்த MEGA என்ற புது முயற்சி எடுத்ததுக்கு மெகாவுக்கு நாம்தான் நன்றி சொல்லணும். நன்றிங்கோ.
இப்போது உள்ள மக்களின் மனநிலை - ஊர் முன்னேற்றம். அதனால் தான் ஒற்றுமையோடு ஒரு திறமையான, ஆற்றல்மிக்க நகரமன்ற தலைவரை தேர்ந்தெடுத்தார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவரும் மன்ற உறுப்பினர்களும் ஊருக்கு நன்மை செய்வார்கள் என எதிர்பார்ப்போம், நம்பிக்கை வைப்போம், வளமான, ஒற்றுமையான, நம் எதிர்கால காயலுக்கு வல்லோன் அல்லாஹ்விடம் துஆ செய்வோம். அதைவிட்டுட்டு மீண்டும் மக்களை பிரித்தாள சூழ்ச்சி செய்யாதிங்க.
இங்கு யாரும் ஐக்கிய பேரவை தேவை இல்லைன்னு சொல்லல. பேரவையின் ஒருதலைபட்ச செயல்பாட்டில்தான் மாற்றம் வேணும்னு கேட்கிறோம்.
சலீம் காக்கா ENERGY வேஸ்ட் பண்ணிடாதீங்க. இன்ஷா அல்லாஹ், எதிர்காலத்துல நிறைய சேவைகள் செய்ய வேண்டி இருக்கு. இதுபோல இடர்களையும் சந்திக்க வேண்டி இருக்கும்.
Re:4200 வாக்குகளுக்கும் கூடு... posted byRoshan (Kayalpatnam)[21 October 2011] IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 11716
அஸ்ஸலாமு அலைக்கும், ஆபிதா வாழ்த்துக்கள்.
இந்த வெற்றி எந்த இயக்கத்தின் மீதும் இல்லாமல் வல்லோன் அல்லாஹ்வின் மீதும் நீ வைத்த நம்பிக்கைக்கும், உனது முயற்சிக்கும், உனது தன்னம்பிக்கைக்கும், காயல் மக்களின் உண்மையான ஒற்றுமைக்கும் கிடைத்த வெற்றி. மென்மேலும் உனது சேவைகள் தொய்வின்றி தொடர்ந்திட, மக்கள் உன்னிடம் எதிர்பார்க்கும் நன்மையான காரியங்கள் சுலபமாகவும் வெற்றியாகவும் முடிந்திட கருணையுள்ள ரஹ்மானை வேண்டுகிறேன். நீ வெற்றி பெற உழைத்த, துஆ செய்த, விருப்பம் கொண்ட அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் நன்றி.
மேலும் 11ம் வார்டில் அனைத்து மக்களின் நன்மைதிப்பைபெற்று பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்ற S. M. Mohideen மச்சானுக்கும் வாழ்த்துக்கள். வெற்றி பெற்ற மற்ற அனைத்து மன்ற உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்கள்.
ஆபிதா உனது தலைமையில் நமது நகர்மன்றம் சிறப்பாக செயல்பட்டு நேர்மையான மன்றம் என ஒரு முன்மாதிரி மன்றமாக வெற்றிநடை போட வல்ல அல்லாஹ் உதவி புரிவானாக.
Re:ஆபிதா - காயல்பட்டின நகர்ம... posted byDustagir (Dubai)[21 October 2011] IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 11613
அஸ்ஸலாமு அலைக்கும்,
வெற்றிபெற்ற அனைத்து நகர்மன்ற உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்கள்.
துணை தலைவர் பதவிக்கு மிக சிறந்த, தகுதியான நபரை தேர்ந்தெடுக்கும் பொறுப்பு இப்பொழுது உங்கள் கைகளில். சுய விருப்பு வெறுப்பின்றி, குதிரை பேரத்துக்கு சிக்கிக்கொள்ளாமல் நல்ல மனிதரை தேர்ந்தெடுங்கள். ஏற்கனவே தேர்தல் பிரசார நேரத்தில் ஒருவர் பஸ்ஸில் துண்டு போடுவது போல் துணை தலைவர் பதவியை எங்களுக்கு தாருங்கள் என கேட்டுள்ளார். (நல்ல வேலை துண்டு போட்டு வச்ச பஸ் கான்செல் ஆகிடுச்சு).
குதிரை பேரம் ஆரம்பமாகி விட்டதாக வேறு ஒரு செய்தி. ஆதலால் என் அருமையான காயல் மன்ற உறுப்பினர்களே தயவு செய்து அல்லாஹுவுக்கு பயந்து நேர்மையான வழியை கையாளுங்கள்.
உங்களில் சிறந்தவரை தேர்ந்தெடுங்கள். நல்லோரை தவிர வேறு யாரையும் மத்தியஸ்தர் ஆக்கிகொள்ளாதீர்கள்.
நல்ல நகரமன்ற தலைவர் கிடைத்தது போல், நல்ல துணை தலைவரும் கிடைக்க அல்லாஹ் துணை புரிவான்.
அட்மின் சார், ஏதும் கோல்மால் நடந்தால் தயவு செய்து மக்களுக்கு வெட்ட வெளிச்சமாக்கி விடுங்கள். இங்கு இனி ஒழிவு மறைவுக்கு வேலை இல்லை.
Re:இன்று காலை வாக்கு எண்ணிக... posted byDustagir (Dubai)[21 October 2011] IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 11505
அஸ்ஸலாமு அலைக்கும்
Masha Allah - Alhamdhulillah.
Praise to Almighty Allah. Without his grace its not possible.
Congrats to Sister Abidha.
இது ஊர் ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி.
தான் என்ற அகம்பாவத்துக்கு கிடைத்த தோல்வி.
சரி நடந்தது நடந்ததாக இருக்கட்டும். இதில் இருந்து பாடம் கற்றுகொள்வோம்.
சகோதரி ஆபிதா அவர்களே நம் காயல் சொந்தங்கள் உங்கள் திறமை மீது நம்பிக்கை வைத்து, உங்கள் வார்த்தைகளில் நம்பிக்கைவைத்து (வெற்றியை) வாக்களித்து இருக்கிறார்கள்.
காயல் மாநகரின் அனைத்து பகுதி மக்களின் ஆதரவும் உங்களுக்கு கிடைத்து இருக்கிறது. அவர்களுடைய நம்பிக்கையை உண்மையாக்குங்கள். . கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள். இந்த மகத்தான வெற்றியை உங்களுக்கு தந்த கருணையாளன் அல்லாஹ்வுக்கு பயந்து உங்களுடைய செயல்பாடுகளை அமைத்துகொள்ளுங்கள். வல்லமையாளன் அல்லா உங்களின் முயற்சிகளில் துணை இருக்க போதுமானவன்.
ஆரம்பம் முதல் சகோதரி ஆபிதாவுக்கு ஆதரவளித்த அணைத்து உள்ளங்களுக்கும் நன்றிங்கோ !!!
Re:வாக்குபதிவு இன்று காலை து... posted byDustagir (Dubai)[17 October 2011] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 11129
அஸ்ஸலாமு அலைக்கும்
பண பட்டுவாடா நேற்றே தொடங்கிடிச்சு. அதுபோல எதிர் பக்கமும் ஒரு பெரிய மனிதரின் வாகனம் மாட்டிகிசுன்னு ஒரு சகோதரர் சொல்றார். தவறுக்கு தவற சரி பண்ணாதீங்க. தவறு யார் செய்தாலும் அது தவறுதான். இந்த பணம் உழைக்காமல் வரும் பணம். இதற்கு என்ன பெயர்? இப்படி ஒரு வெற்றி ரெண்டு பக்கமுமே தேவையா? இதற்கு அரசியல் கட்சிகள் போட்டி போட்டு இருக்கலாமே?
இதில் ஏன் குடும்ப பெண்களையும் ஈடுபடுதுறீங்க? இந்த வெற்றிக்காக பணம் செலவு செய்தவர் நாளை போட்ட பணத்தை திரும்ப எடுக்கத்தான் முயற்சி செய்வார் அல்லது தனக்கு சாதகமாக காரியங்களை நடத்த பார்பார். பிறகு எப்படி ஊழல் இல்லாத நகராட்சி கிடைக்கும்?
சகோதரி மிஸ்ரியாவோட வெற்றி உறுதி ஆகிடிச்சுன்னு சொல்றாங்க. பின்ன பயண படியும், வழி செலவுக்கும் பணம் கொடுத்தால் வெற்றி பெற chance இருக்கத்தான் செய்யும். பார்த்துக்கோங்க போன சட்டசபை தேர்தல் போல காச வாங்கிட்டு மாற்றம் வேண்டி எதிர் அணிக்கு வோட்டு போட்டுட போறாங்க.
நல்லா மனசாட்சிய தொட்டு கேட்டு பாருங்க, இப்படி ஒரு வெற்றி இருவருக்குமே தேவையா? திருடர்கள் செய்யும் வேலையை பெரியவர்கள் செய்றாங்க.
வெற்றி தோல்வி தருபவன் அண்டத்தையும் தன் ஆளுமைக்கு கீழ் வைத்து இருக்கும் அல்லாஹ் ஒருவனே. அதனால் அவன் வல்லமையை, அவனது அதிகாரத்தை மறந்து அதிகபடியா ஆட்டம் போடாதீங்க.
இதற்கெல்லாம் பதில் சொல்லும், வருத்தப்படும் காலம் வரும்.
Re:தைக்கா தெரு, மொகுதூம் தெர... posted byDUSTAGIR (Dubai)[16 October 2011] IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 11073
அஸ்ஸலாமு அலைக்கும்
ஆமா, ஆமா.
எதையாவது சொல்லி ஓட்டை பிரிக்க பாக்குறாங்க.
முதலில் ரூத்தம்மாள் வந்துடுவாங்கன்னு பூச்சாண்டி காட்டினாங்க.
அப்புறம் ஒற்றுமை வண்டிமைனு வண்டி ஓட்டுனாங்க.
அப்புறம் பத்து வருட பொறுமை, விசுவாசம்னு சொன்னாங்க. (இவங்கள தான் தேர்ந்து எடுக்க போறோம்னு முடிவு செய்தபின் அப்ப ஏன் வஹிதா லாத்தா கிட்ட முச்சரிக்கைல கையொப்பம் வாங்கினாங்க ங்குறது ராஜதந்திரம். இந்த பத்து வருட சமாச்சாரம் எல்லா ஜமாதுக்கும் தெரியுமா?)
அப்புறம் மத்திய காயல், மாநில காயல்ன்னு கூறு போட்டாங்க.
இப்ப நான் கேள்விப்பட்டு சிம்மு சுன்னத் உல் ஜமாதுன்னு இறங்கிட்டாங்க. (ஒற்றுமை என்பது செயல்பாட்டில் தெரியனும். கொள்கையிலும், கொப்பறையிலும் தெரிய கூடாது)
பிரசாரமும் முடிஞ்சு போச்சு. பஸ்ஸும் கெளம்ப போகுது.
இப்படி ஒரு வெற்றி தேவையா?
இப்ப நீங்களே முடிவு பண்ணுங்க, நமக்கு தேவை சுயமாக, திறமையாக ஆட்சி செய்யும் தலைமையா? எல்லாத்துக்கும் அடுத்தவரை எதிர்பார்க்கும் தலைமையா? (இதுக்கு சகோதரி மிஸ்ரியா தேவை இல்லை. அவங்க வீட்டு வேலைகாரி போதுமே).
சகோதரி ஆபிதா வெற்றி பெறுவதனால் காயல் மாநகருக்கு எந்த ஒற்றுமை சீர்குலைவும் இல்லை. ஒற்றுமை மேலும் வலுப்படும், தன்னம்பிக்கையும் கூடும். வேணும்னா " " நாட்டுல இருக்குற AJ வுடைய தகவல் தொடர்பாளர்கும், " " நாட்டுல இருக்குற கொள்கை பரப்பு செயலாளர்கும் சங்கடமா இருக்கும்.
எல்லாம் சரி.............., ஏதோ ரெண்டு விசயத்துக்கு மட்டும் பதில் தர்றத அறிக்கைல சொல்லி இருக்கீங்க. எங்க அந்த பதில்? மழுப்பலா ரெண்டு வரி இடையில சொருகி இருக்கே அதுவா பதில்?
அதனால் தயவு செய்து புத்தக சின்னத்தில் வாக்களியுங்கள்.
ஊரின் உண்மையான ஒற்றுமைக்கு அங்கீகாரம் தாருங்கள்.
(ஒற்றுமை எங்களுக்குத்தான் சொந்தம்னு யாரும் கேஸ் போட்டுட போறாங்க)
Re:YUF செயலரின் அறிக்கைக்கு ... posted byDUSTAGIR (Dubai)[16 October 2011] IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 11066
அஸ்ஸலாமு அலைக்கும்.
அஸ்ஸலாமு அலைக்கும்.
ஆமா, ஆமா அங்க எதுவுமே நடக்கல. முஹைதீன் காகா வீண் பழி போடுறாங்க. எங்க கிட்ட வீடியோ ஆதாரம் இருக்கு. தேவை படுறவங்க ELECTION முடிந்த பின் திருச்சி திரும்பி செல்லும் பஸ்ஸில் நைட் ஷோ பார்த்துக்கலாம்.
Re:YUF செயலரின் அறிக்கைக்கு ... posted byDUSTAGIR (Dubai)[16 October 2011] IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 11066
அஸ்ஸலாமு அலைக்கும்.
அஸ்ஸலாமு அலைக்கும்.
ஆமா, ஆமா அங்க எதுவுமே நடக்கல. முஹைதீன் காகா வீண் பழி போடுறாங்க. எங்க கிட்ட வீடியோ ஆதாரம் இருக்கு. தேவை படுறவங்க ELECTION முடிந்த பின் திருச்சி திரும்பி செல்லும் பஸ்ஸில் நைட் ஷோ பார்த்துக்கலாம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross