Re:... posted byNAHVI (CHENNAI)[07 November 2013] IP: 115.*.*.* India | Comment Reference Number: 31280
தம்பி ஹாபிழ் ஈசா ஜகரியா குறிப்பிட்ட ஆலிம், வேறு யாரும் இல்லை. நம் கண்ணியத்திற்குரிய, மர்ஹூம் சா. ஷாகுல் ஹமீது ஆலிம் முப்தி அவர்களின் அருமை மகனார், ஹாபிழ் சா.ஹ. பாதுல் அஸ்ஹாப் ஆலிம் அவர்கள்தான்.
மேலும், கவிமகன் கருத்து எங்களின் புண்பட்ட நெஞ்சங்களுக்கு அருமருந்தாக அமைந்தது. நன்றி.
Re:... posted byNAHVI (CHENNAI)[07 November 2013] IP: 115.*.*.* India | Comment Reference Number: 31276
அழகான ஆழிய சிந்திக்க வேண்டிய கட்டுரை. ஆசிரியர் ஷோயப் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
எந்த அரசியல் கட்சியையும் சாரா முஸ்லிம் ஓட்டு வங்கி உருவாகாத வரை ஆசிரியரின் கனவு சாத்தியமில்லை.
எல்லாருமே மாற்றி மாற்றி நம் முதுகில் குத்தியவர்கள்தான்.
MARCH 1998 - ல், ADMK , BJP உடன் கூட்டு . ஒர் ஆண்டே நீடித்த இந்த கூட்டு MAY 1999 -ல் முறிகிறது.
SEPTEMBER 1999 RE ELECTION -ல் DMK, BJP உடன் கூட்டு (2004 வரை). கூட்டு பிரிய கலைஞர் சொன்ன காரணம், BJP, உண்மை முகத்தை காட்டியதாம். அதற்கு முன்னால் அவருக்கு தெரியாதா?
(DMK chief M Karunanidhi, whose party was part of the BJP-led NDA till 2004, said on Saturday that it had switched alliance when BJP showed its "true colours," )
எல்லாரும் துரோகிகள் என்ற உண்மையை இந்த சமுதாயம் உணர வேண்டும். முகவரி இல்லாத BJP க்கு தோள் கொடுத்து ,அந்த நாச கார இயக்கம் வளர, ஆட்சியில் அமர உதவியவர் V.P. SINGH அவர்கள்தான். அன்று அவருக்கு உதவியவர், சிறுபான்மை சமுதாயத்தின் காவலர் டாக்டர் கலைஞர் அவர்கள்தான் என்பது எல்லாருக்கும் தெரியும். சுருங்க கூறின், நாச கார RSS ன் பினாமி BJP உடன் எல்லா திராவிட கட்சிகளுமே கை கோர்த்திருக்கின்றன. அப்பொழுதெல்லாம் அந்த கட்சிகளை சார்ந்த முஸ்லிம்கள் தங்கள் கட்சிகளோடுதான் இருந்தார்கள். இப்படி இருந்தால் இந்த சமுதாயம் உருப்படுமா?
Re:... posted byNAHVI (CHENNAI)[07 November 2013] IP: 115.*.*.* India | Comment Reference Number: 31269
அற்புதமான பதிவு. செந்தில் ராமன் அவர்களையும் அவரின் இட்லியும், இன்னும் நாவிலும், நினைவிலும் நிழலாடுகிறது. ரபீக் அவர்களின் எழுத்து, அற்புதம் . வாழ்த்துக்கள்.
Re:... posted byNAHVI (CHENNAI)[07 November 2013] IP: 115.*.*.* India | Comment Reference Number: 31266
தம்பி ஜெயின், தாங்கள் அப்படி கூறினீர்கள் என்று நானும் கூற வில்லையே!
"நஹ்வி அஹ்மது மெய்தீன் அவர்கள் YUF ன் மூத்த உறுப்பினராக வந்து பேசவில்லை. எங்க கட்சிக்கு கெட்டபேர் வந்துவிடும் என்றுதான் பேசினார். அவருக்கு தெரு பிரச்சனையைவிட அவருடைய கட்சிதான் பெரிசுபோல. " என்று தாங்கள் கூறி இருந்தீர்கள்.
அதற்கு, "நஹ்வி அஹ்மது மெய்தீன் அவர்களின் சமூக , தெரு அற்பணிப்பை எடுத்து காட்டும் என் கருத்தை பதிவு செய்தேன். அவ்வளவுதான்.
அவர்களின் சமூக, தெரு, முஹல்லா, அகீதா, ஊர் நேசத்தையும், வெறியையும் அல்லாஹ் அறிவான். அவரை புரிந்தவர்கள் , அவரால் பயன் அடைந்தவர்கள் அறிவார்கள்.
தம்பி, இந்த கருத்து பரிமாற்றங்கள் இதோடு போதும்
என் கருத்து தங்களை ஏதாவது வகையில் புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும். சலாம்ஸ் .
Re:... posted byNAHVI (CHENNAI)[06 November 2013] IP: 115.*.*.* India | Comment Reference Number: 31253
நஹ்வி அஹ்மத் மெய்தீன் "அவருக்கு தெரு பிரச்சனையைவிட அவருடைய கட்சிதான் பெரிசுபோல" என்று தம்பி ஜைனுல் ஆப்தீனும், அதை, நண்பர் சலாஹுதீனும் (துபை) சரி கண்டு எழுதி இருப்பது வருத்தம் அளிக்கிறது.
நஹ்வி அஹ்மத் மெய்தீன் அவர்கள், தன்னை விட, தன் குடும்பம், குழந்தைகளை விட சமூக நலன் கொண்டவர்கள். பொது ஸ்தாபனங்களில் கூட கமிஷன், கட்டிங் பார்க்கும் இந்த நாளில், இது நாள் வரை கமிஷன், கட்டிங் என எதனையும் சம்பாதிக்காதவர்கள்.
தனக்கு சரி என்று படுவதை யாருக்கும், எதற்க்கும் பயப்படாமல் சொல்லக்கூடியவர்கள்.மறைந்த மர்ஹூம், ஹாபிஸ் சொளுக்கு ஷெய்கலி மாமா கூட ஒரு சமயம், "தம்பி நஹ்வி அஹ்மத் மெய்தீன், பேசுவது RIUGH ஆக இருந்தாலும், நியாயம் என்று தனக்குபட்டதைத்தான் பேசுவான் என்றார்கள்.
தயவு செய்து கருத்துக்கள் யார் மனதையும் புண் படுத்தாமல் பார்ப்பது அவசியம்.
செய்தி: ‘மலேஷியா வாப்பா‘ என்றழைக்கப்பட்ட ஸூஃபீ ஹஸ்ரத் காலமானார்! குருவித்துறைப்பள்ளியில் நல்லடக்கம்!! திரளானோர் பங்கேற்பு!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
ஷைகுணா அவர்களின் பிரிவால் வாடும் உறவினர்கள், முரீத் முஹிப்பீன்களுக்கு, அல்லாஹ் சபுரை கொடுப்பானாக. என் மீதும் எல்லோர் மீதும் அன்பு கொண்ட சூபி வாப்பா அவர்களின் பிரிவு செய்தி கிடைத்ததும் எம் நினைவில் வந்தது : "மண்ணறை வாழும் அவ்லியாக்களுக்கு மரணம் என்பது கிடையாது " என்ற வரிகள்தான்.
அன்புக்கும் ஒற்றுமைக்கும் சிங்கப்பூர் காயல் வாசிகள் என்றுமே ஒரு முன்னுதாரணம்தான், அல்ஹம்துலில்லாஹ்.
இறைவன் இந்த ஒற்றுமையை நீடித்து நிலைக்க செய்வதோடு எல்லா காயலர்கள் வாழும் இடங்களிலும், மற்றும் நம் காயல் பதியிலும் ஒற்றுமையும், நிம்மதியும் நிலைக்க அருள்வானாக ஆமீன்.
அன்பு அரவணைப்பு பாசம் இவற்றிற்கெல்லாம் இலக்கணமாய் திகழும் ஹசன் காக்கா, எல்லா நலமும் வளமும் பெற்று நிம்மதி பெரு வாழ்வு பெற இறையை இறைஞ்சுவோமாக.
காயலர்கள் ஒற்றுமை, அன்பு ஓங்கட்டும்.
காக்கா, கறி, கத்திரிக்கா மாங்கா கிடைத்தது . நன்றி .
மேலும் நம் மன்றம் மூலம் வழங்கப்பட்ட ரமலான் உதவிக்கு மிகுந்த பாராட்டும் துஆக்களும் வந்தன.
செய்தி: ரமழான் 1432: அஹ்மத் நெய்னார் பள்ளியில், ஒரே நிலைத் தொழுகையில் திருக்குர்ஆன் முழுவதையும் ஓதும் நிகழ்ச்சி! இன்றிரவு 08.10 மணிக்கு நடைபெறுகிறது!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
மாஷா அல்லாஹ். நல்ல முறையில் தம்பி இந்த பெரும் பொறுப்பை நிறைவேற்றி முடிக்க அல்லாஹ் அருள் புரிய நாம் யாவரும் துவா செய்வோமாக . அல்லாஹ் ஹாபில் அவர்களை கண்ணை விட்டும் பாது காத்து பெற்றோர்களுக்கும் உற்றார்களுக்கும் உஸ்தாத் மார்களுக்கும் உதவியான குழந்தையாக ஆக்கி வைப்பானாக . அமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross