Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
6:21:29 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
வாசகர் கருத்துக்கள்
If you know the Comment Reference Number, type here / கருத்து குறிப்பு எண் தெரிந்தால் இங்கு தரவும்
Enter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்
Enter Viewer Name to search database /
கருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்
நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: அனைத்து கருத்துக்களும்
தேர்வு செய்க
அனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்
You are viewing comments posted by the following User
Nameஹைதர் அலி
PlaceRiyadh
Approved Comments9
Rejected Comments5
கருத்துக்கள்
எண்ணிக்கை
9
பக்க எண்
1/1
பக்கம் செல்ல
செய்தி: ஒருவழிப்பாதையை அமைய வலியுறுத்தி, இளைஞர் ஐக்கிய முன்னணி சார்பில் மாவட்ட ஆட்சியருக்கு கடிதம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:ஒருவழிப்பாதையை அமைய வலியு...
posted by ஹைதர் அலி (ரியாத்) [10 January 2012]
IP: 159.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 15816

கண்ணியத்திற்குரிய இளைஞர் ஐக்கிய முன்னணியின் சகோதரர்களே,

அஸ்ஸலாமு அழைக்கும் வரஹா

காயல்பட்டினத்தின் மிக முக்கிய பிரச்சினையாக உள்ள இந்த போக்குவரத்து நெருக்கடியைத் தீர்க்க ஒருவழிப்பாதையை நடைமுறைப்படுத்துவதே சரியான தீர்வாக உள்ளது என்று தாங்கள் கூறியுள்ளதை நாங்களும் மனதார ஏற்றுக்கொள்கிறோம்.

தங்கள் மனதில் அந்த ஒரு வழிப்பாதை பெரிய நேசவுதெரு வழியாக நினைத்திருக்கின்றீர்களோ அல்லது நெசவு ஜமாத்தினர் கூறும் வழிப்பாதையை நினைத்திருக்கின்றீர்களோ, இறைவன் அறிவான். ஆனால், யார் மனதும புண்படாதவாறு, நமதஊரில் ஒற்றுமை என்றும் நிலைத்திருக்க வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தில், நெசவுத்தெரூ வழியாகச்சென்றால்தான் மகிழ்ச்சியடைவோம் என தங்களது சகோதரத்துவத்தை பறைசாற்றுபவர்கள் மத்தியில், நமதூருக்கு ஒரு வழிப்பாதை வேண்டும் ஆனால் அது மாவட்ட ஆட்சியர் அவர்கள் பல கருத்துக்களையும் கேட்டு தெரிந்து ஆய்வு செய்து தேர்ந்தெடுத்த பாதையாக இருக்கட்டும் என்ற கருத்து தொனிக்கும் வகையில் மிக மென்மையாக, உணர்வுகளை புரிந்து அணுகியிருப்பது தங்களுடைய அனுபவ முதிர்ச்சியையும் ஊரின் ஒற்றுமையின் மேல் உள்ள மிகுந்த அக்கறையையும் மிக தெளிவாக உணர்த்துகிறது.

வல்ல இறைவன் அனைவருக்கும் அத்தகைய சீரிய எண்ணங்களைத்தருவானாக - ஆமீன்.

உங்கள் சகோதரன்
ஹைதர் அலி


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: மூன் டிவியின் மறைகுர்ஆன் மாநிலந்தழுவிய மனனப் போட்டியில் முதலிடம் வென்ற மாணவர் முஃபீஸுர்ரஹ்மானுக்கு அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் நிர்வாகம் பாராட்டு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:மூன் டிவியின் மறைகுர்ஆன் ...
posted by ஹைதர் அலி (Riyadh) [05 January 2012]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 15619

அஸ்ஸலாமு அழைக்கும் வரஹா..

மூன் டிவி சார்பில் கீழக்கரையில் நடத்தப்பட்ட மாநில அளவிலான - மறைகுர்ஆன் மனனப் போட்டியில் முதலிடம் பெற்று சாதனை புரிந்துள்ள ஹாஃபிழ் கே.எஸ்.முஃபீஸுர்ரஹ்மானுக்கு வாழ்த்துக்கள்.

ஹாஃபிழ் கே.எஸ்.முஃபீஸுர்ரஹ்மான் மேலும் பல சாதனைகள் செய்யவும் மேலும் பல நம்மூர் மாணவர்களும் பற்பல சாதனைகள் புரியவும் இறைவனை வேண்டுகிறேன்.

சகோதரர் எந்த தெருவைச்சர்ந்தவர், அவர் தந்தையார் பெயருடன் சேர்த்து செய்தி தந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திக்கும் என்பது எனது தாழ்மையான கருத்து.

ஹைதர் அலி
ரியாத்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் நகர கிளை சார்பில் இஸ்லாமிய சொற்பொழிவு பொதுக்கூட்டம்! டாக்டர் கே.வி.எஸ். சிறப்புரை!! திரளான பொதுமக்கள் பங்கேற்பு!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் ந...
posted by ஹைதர் அலி (ரியாத்) [03 January 2012]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 15435

சகோதரர்களே,

உங்கள் தொண்டு சிறக்க வாழ்த்துக்கள்.

உங்கள் சகோதரன்
ஹைதர் அலி
ரியாத்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
சிறப்புக் கட்டுரைகள்:பாதாள சாக்கடைத் திட்டம் காயல்பட்டினத்திற்குத் தேவையா? [ஆக்கம் - லேண்ட்மார்க் ஹாஜி ராவன்னா அபுல்ஹஸன்] ஆக்கத்தை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:பாதாள சாக்கடைத் திட்டம் க...
posted by ஹைதர் அலி (Riyadh) [02 January 2012]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 20909

இந்த கட்டுரையை படிக்கும் முன் ஏன் சிலர் பாதாள சாக்கடையை ஆதரிக்கிறார்கள், சிலர் எதிர்க்கிறார்கள் என்பது குழப்பமாக இருந்தது.

குழப்பத்தை தீர்த்தமைக்கு மிக மிக நன்றி. சகோதரர் அவர்களே.

பயனுள்ள ஆக்கம்.
உங்கள் சகோதரன்
ஹைதர் அலி


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ஒருவழிப்பாதை குறித்து நெசவு ஜமாஅத்தாருடன் நகர்மன்றத் தலைவர் சந்திப்பு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:ஒருவழிப்பாதை குறித்து நெச...
posted by ஹைதர் அலி (ரியாத்) [01 January 2012]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 15333

சகோ. மஹ்மூது ஹசன் அவர்களே,
சகோ. செய்யது அஹமது அவர்களே,
சகோ. ஜாவித் நசீம் அவர்களே,
சகோ. முஹம்மது அப்துல் காதற் அவர்களே,
சகோ சீனா அவர்களே
சகோ முஹம்மது அலி அவர்களே

Assalamu Alaikkum WRWB

With due respect to all of you, I am not at all pointing to your postings. I am seeing very much maturity in many of yours and sincerity, also pain in the postings to find a solution to this long time issue.

Even though one of our brother Syed Ahamed is pointing at me by saying "மைக்கும், பதவியும் தந்தால் மட்டும் பேசுவார்கள் என்று நினைத்தோம், ", I am not having anything to say, as it is against me only. He has all the right to say against me as an individual.

சகோ. சீனா அவர்களதும் சோ. முஹம்மது அலி அவர்களதும் கருத்துக்களில் ஆக்ரோஷம் இருந்தாலும் இந்த பிரச்சினைக்கு ஒரு தீர்வு வந்து விடாதா என்ற நல்ல எண்ணத்தையும் பார்க்க முடிகிறது.

தாங்கள் இந்த ஒரு வழிப்பாதை விசயத்தில் பகரப்பாட்ட கருத்துக்களை ஊன்றி கவனித்தால் உங்களுக்கு புரிய வாய்ப்பிருக்கிறது. நான் எந்த கருத்துக்களை கடின வார்த்தைகளால் விமர்சனம் செய்திருக்கின்றேன் என்று.

பேருந்து செல்லும் வழித்தடத்தில் இருக்கும் சகோதரர்களுக்கு அவர்களுடைய உணர்வுகளை பகர முழு அதிகாரம் உள்ளது. அவர்கள் படும் சிரமும், செய்யும் தியாகமும் அதற்கான உரிமையைத்தருகிறது.

அதே நேரத்தில் மற்ற தெருவில் வசிக்கும் சகோதரர்களுடைய கருத்துக்கள், எடுத்தேன் கவிழ்த்தேன் என்றில்லாமல், சகோ. ஜாவித் நசீம், சகோ. சுலைமான் சகோ. முஹம்மது ரபீக், சகோ. செய்யது அலி சகோ. செய்யது சஹாமது புஹாரி அவர்களது கருத்துக்களை போன்று, நமது கருத்துக்களும் கோரிக்கைகளும் தெரியப்படுத்தப்பட வேண்டும் அதே நேரத்தில் உணர்வுகளும் புன்படுத்தப்படக்கூடாது, சகோதர உணர்வோடு கருத்துக்கள் தெரியப்படுத்தப்ப்பட்டால் தான் புரிதுனர்தல் ஏற்படும் என்ற எண்ணத்துடன் இருந்தால் தான் நாம் என்றென்றும் சகோதரர்களாய், ஊர் சந்திக்கும் எல்லா பிரச்சினைகளையும் (இந்த ஒரு வழிப்பாதை பிரச்சினை உட்பட) சந்திக்க உறுதுணையாக இருக்கும்.

சகோ. முஹம்மது அப்துல் காதற் அவர்கள் கேட்பது போன்று "ஏன் உங்கள் தெரு வழியாக போக்குவரத்து வந்தால் உங்கள் ஆக்கிரமிப்பு மக்களுக்கு தெரிந்து விடும் என்று பயப்பிடுகிறீர்களா?", இல்லை சகோதரரே. ஒரு வழிப்பாதை வருவதன் மூலம் தான் எங்கள் தெருவில் இருக்கும் ஆக்கிரமிப்புகள் தெரியும் என்றால், உளமார மனதார வரவேற்கிறேன். ஏனென்றால்

3195. அபூ ஸலமா இப்னு அப்திர் ரஹ்மான்(ரஹ்) அறிவித்தார் ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் 'எவன் அநியாயமாக ஒரு சாண் அளவு (நிலத்தை) அபகரித்துக் கொள்கிறானோ அவனுடைய கழுத்தில் ஏழு பூமிகள் அளவுள்ள நிலப்பகுதி (மறுமை நாளில்) வளையமாக மாட்டப்படும்' ஹதீஸ்: புஹாரி Volume :3

இந்த ஹதீதை தெரிந்த எந்த ஒரு மனிதனும் அச்செயலுக்கு உடந்தையாக இருக்க மாட்டான்.

கடந்த பல வாரங்களாக பல அதிகாரிகளும் இது விசயமாக நமதூருக்கு வருகை தந்த வண்ணம் இருக்கின்றார்கள். சகோ. சீனா அவர்கலுடன் நானும் சேர்ந்து "அல்லாஹ் எதை நன்மையாக நாடி இருக்கிறானோ அது கிடைக்கும்.. இன்ஷா அல்லாஹ்," என்று பிரார்த்திக்கிறேன்.

உங்கள் சகோதரன்

ஹைதர் அலி
ரியாத்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ஒருவழிப்பாதை குறித்து நெசவு ஜமாஅத்தாருடன் நகர்மன்றத் தலைவர் சந்திப்பு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:ஒருவழிப்பாதை குறித்து நெச...
posted by ஹைதர் அலி (ரியாத் ) [30 December 2011]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 15259

அன்பிற்குரிய சகோதரர்களே அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ......

ஆணவத்தினாலும் ஆத்திரத்தினாலும் ஆரோக்கியமற்ற மனப்போக்கினாலும் என்ன எழுதுகின்றோம் என்று உணராமலும்,

ஊர் மக்களுக்குள் கசப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக தெருவில் இறங்கி போராட கொம்பு சீவிவிட்டு அதில் குளிர்காய நினைப்பதும்,

ஒரே தெரு வாசிகளுக்கு மத்தியிலே பிரிவினையை ஏற்படுத்தும் விதமாக ஒருவருகொருவரை தூண்டி விட்டு வேடிக்கை பார்க்க நினைப்பதும்,

ஒரு ஜமாத்தையே கண்ணியக்குறைவாக எழுதுவதும்,

ஆற அமர அமர்ந்து சகோதர உணர்வுடன் யோசித்தால் வழி பிறக்கும் என்று பலரும் கோரிக்கை விடும் பொழுது இந்த பிரச்சினைக்கு தீர்வு வந்து விடக்கூடாது என்ற உயர்ந்த எண்ணத்தில் (?) சம்பந்தப்பட்ட ஜமாத்தை சார்ந்தவர்கள் படித்தால் ஆத்திரப்பட்டு பிரச்சினை பெரிதாக வேண்டும் என்று சிலர் வக்கிரத்தனமாக பொழுது போகாமல் எழுதுவதும்,

அம்மாதிர்யான கருத்துக்களை எந்த வித மாடரேஷனும் இல்லாமல் இந்த இனைய தளத்திலே வெளியிடப்படுவதும்,

நெசவு ஜமாஅத்துடைய நியாயமான கருத்துக்களுக்கு எந்த முக்கியத்துவமும் கொடுக்காமல் அதை பரிசீலனை செய்யக்கூட செய்யாமல் அதன் சாதக பாதகங்களை ஆராயாமலும்,

ஆய்வுக்கு வந்த காவல் துறையினராலேயே பரிந்துரைக்கப்பட்ட ஆக்கிரமிப்புகளை அகற்றினால் கிடைக்கும் தீர்வை, ஆக்கிரமிப்புக்களுக்கு துணை போகும் விதமாக பரிசீலனைக்கு எடுத்துகொல்லாமலிருப்பதும்,

ஏற்கனவே பல ஆண்டுகளுக்கு முன்னரே பேரூராட்சி நிர்வாக அதிகாரியால் பரிந்துரைக்கப்பட்டதென்று சொல்லப்படும் மாற்று வழிகளையும் உதாசீனப்படுத்தியும்,

எங்களது என்னத்தை நிறைவேற்றியே திருவோம என கங்கணம் கட்டி கொண்டு கருத்துக்களை பதிவு செய்வதும்,

இந்த பிரச்சினைக்கு ஓர் தீர்வு கிடைப்பதற்கு எந்த அளவுக்கு உதவியாக இருக்கும் என்று தெரியவில்லை.

இந்த இணைய தளத்தை மட்டுமே வாசிக்கும் சகோ. சீனா "நமதூருக்கு வருகைபுரிந்த டி.எஸ்.பி. திரு.ஞான சேஹரன், நெடுஞ்சாலைத் துறை பொறியாளர் திரு.சேகர், ஆறுமுகநேரி காவல் ஆய்வாலர் திரு.பார்த்திபன், ஆர்.டி.ஓ. S.I திரு.K.சந்திர சேகர், காயல்பட்டணம் கிராம நிர்வாக அதிகாரி திரு.செல்வலிங்கம், காயல்பட்டணம் நகராட்சி ஆணையர் (பொ) திரு.கண்ணையா, நகராட்சி பொறியாளர் திரு.செல்வமணி, சர்வேயர் திரு.கந்தப்பன் ஆகியோர்கள்".. "கே.டி.எம்.தெருவில் உள்ள சில பகுதிகளை ஆக்கிரமிப்பு என்று கூறிய அதிகாரிகள் அவைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும் கூறினார்கள்." என்று நமதூரின் மற்றொரு வலைதளத்தில் வந்த செய்தியை படிக்கவில்லை போலும். அந்த செய்தியை இந்த வலை தளத்தில் பதிவு செய்த சகோதரர் அச்செய்தியை அதிகாரிகள் சொன்னபோது எங்கு சென்று விட்டார் என அவரைத்தான் கேட்க வேண்டும்.

ஏற்கனவே பேருந்து செல்லும் வழித்தடத்தில் வசிக்கும் மக்களுக்கு பிரச்சினை இல்லை என்று சொல்லவில்லை; அவர்களின் தியாகத்தை நாம் குறைவாக மதிப்பிடவும் இல்லை,

அதிகார்களின் பரிந்துரைப்படி ஆக்கிரமிப்புகள் என்று சொல்லப்படுபவை சீர் செய்யப்பட்டால் இதற்கு ஒரு தீர்வு கிடைத்துவிடாதா என்ற எண்ணம் தான் சில ஆலோசனைகளில் வெளிப்பட்டுள்ளது.

இந்த வலைதளத்தின் மீது நமக்கு மிக நன்றாகவே உயர்ந்த மதிப்புள்ளது, ஒரு வலைதளம் மட்டுமே இருந்த நிலை மாறி இன்று பல வலைதளங்கள் காயல் பெயரை சுமர்ந்துள்ள நிலையில் வாசகர் எண்ணிக்கை கூட்டுவதற்கு இது போன்ற சென்சிடிவான பிரச்சினைகளுக்கு வாசகர் கருத்துக்கள் என்ற பெயரில் பொழுது போகாத சிலர் வலைதளத்திலே வாந்தி எடுப்பதை அனுமதிப்பது ஊர் நலனுக்கு உகந்தது அல்ல என்பது நாம் சொல்லித்தான் தெரிய வேண்டுமென்பதில்லை.

பலரும் நெசவு ஜமாத்திடம் கோரிக்கை வைத்திருகிறீர்கள். நெசவு ஜமாஅத்தினரும் அவர்களது கோரிக்கையை வைத்திருகிறார்கள், நாம் அனைவரும் சேர்ந்து இறைவனிடம் கோரிக்கை வைப்போம்.

யா அல்லாஹ! எந்த தீர்வினை நன்மை என்று நீ கருதுகின்றாயோ அந்த தீர்வின் மூலம் எங்களுடைய இந்த பிரச்சினைக்கு நல்லதொரு முடிவை தருவாயாக .- ஆமீன்

உங்கள் சகோதரன்
ஹைதர் அலி
ரியாத்

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ஒருவழிப்பாதை குறித்து நெசவு ஜமாஅத்தாரின் அறிக்கை! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:ஒருவழிப்பாதை குறித்து நெச...
posted by ஹைதர் அலி (Riyadh) [17 December 2011]
IP: 159.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 14736

அன்பின் சகோதரர்களே,

அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ...

கோபம் வேண்டாம்.

நாம் இன்னும் முழுமையாக சகோ. ஜின்னா அவர்களின் அறிக்கையை விவாதிக்கவில்லை. நாம் அவசரப்பட்டு எந்த முடிவுக்கும வர வேண்டாம்.

தாங்கள் கூறும் ஒரு வழிப்பாதையாகட்டும், இருவழிப்பாதையக்கட்டும் சின்ன நேசவுத்தேருவுக்கு எந்த மாற்றமும் இல்லை. இப்பொழுது வாகன நெரிசல் உள்ள இடங்கள் என்றோ ஆக்கிரமிப்புகள் என்றோ நாம் KTM தெருவை கூறவில்லை. மாறாக ஆக்கிரமிப்பு அதிகம் உள்ள மெயின் ரோடைத்தான் கூறுகிறோம்.

சகோதரர் கூட "சரி மெயின் ரோட்டில் சில ஆக்கிரமிப்பு இருப்பது உண்மைதான்.. " என்று ஒத்துக்கொள்கிறார். நன்றி. ஆனால் அதே நேரத்தில் "அவை எல்லாம் மிஞ்சி போனால் 5 அடி என்ற அளவிற்குள்தான் வரும்!!" . இது தங்களுடைய கணக்கு. உங்களுடைய தகவலுக்காக சொல்லுகிறேன். பத்தடிக்கும் மேல் மெயின் ரோடில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அதாவது, கிட்டத்தட்ட ஒரு பஸ் போகும் அளவுக்கு சில இடங்கள் ஆக்கிரமிக்காப்பட்டுள்ளன.

பயணிகள் நிசற்குடை மட்டுமல்ல, அதற்கும பின்னால் இருந்து ஆரம்பமாகிரது ஆக்கிரமிப்பு. எந்த பிள்டிங்கயையும் குறிப்பாக சுற்றிக்காட்ட விரும்பாததால் நாம் இங்கே குறிப்பிடவில்லை. தாங்கள் மெயின் ரோடில் நின்று பார்த்தால் தெரியும் எல்லா கட்டிடங்களும் ஒரே அளவுக்கு இல்லை சில கட்டிடங்கள் பல அடிகள் ரோடு பக்கம் வந்திருக்கிறது. பிரச்சினை அத்தகைய ஆக்கிரமிப்பு கட்டிடங்களால் தான் பெரும்பாலும். இது தெரிந்த புதிதாகக்கட்டிடம் கட்டும் மக்கள் தங்கள் கட்டிடங்களுக்கு முன்னாள் காம்பவுண்ட் வைத்து கட்டியிருப்பதை சில இடங்களில் பார்க்கலாம். நாளை இடிக்கப்படும் சூழ்நிலை வந்தால் காம்பவுண்ட் தானே போகும் என்று.

சகோதரர் சொல்லுவது போன்று நாம் சொல்லுவது அற்ப காரணமாக இருக்கலாம். ஆனால் அதே காரணத்தைதானே "இப்போது எனது மக்களை எங்கள் முடுக்கிற்குள் பூட்டி வைக்கும் வேதனையும் அனுபவித்து கொண்டிருக்கின்றேன். " என்று இளவல் ஆர்கிடெக்ட். ஹபிபுர்ரகுமானும் " நாங்கள் இழந்த உரிமைகள்" என்று சகோ. தாரிக்கும், "சிறு வயது விளையாட்டு ஆசை முதல்...முதியவயதில் வீட்டுமுன் கூட ஒரு சேர் போட்டு நிம்மதியா உட்கார வழி இல்லாமல்.... " என்று சகோ. Cnash உம, "அனைத்து தெரிவிலும் தெரிவில் விளையாடும் விளையாட்டுகளை, என் சிறுவயதில், நானும் என்னை போன்றோர்களும் இழந்தோம்.." என்று தம்பி Dr. கிசாரும் சொல்லுகிறார்கள். இன்னும் பல காரனங்களியும் சோதரர்கள் கூறியிருக்கிறார்கள். அவர்களின் அந்த தியாகத்திற்கு பெரிதும் மதிப்பளிக்கிறேன்.

சம்பந்தப்படாத சகோதரர்களுக்கு காரணங்கள் அற்பமாக இருக்கலாம். இவ்வளவு காரணங்களை தெரிந்தபின், முடுக்குகள் ஏதும் இல்லாத, அடுத்த தெருவிற்கு பெண்களும் சிறுவர்களும் செல்ல வேண்டுமென்றால் தெருவின் கடைசிவரை சென்று திரும்ப வேண்டுமே என்ரமைந்து விட்ட எங்கள் தெருவின் அமைப்பு முறை, ஏன் நம்மூர் சகோதரர்கள், காவல் துறை பரிந்துரைப்பிரகாரம் ஆக்கிரமிப்புகளை அகற்றியோ அல்லது பேரூராட்சி நிர்வாக அதிகாரின் பரிந்துரைப்படி மாற்றுவழிப்பாதை பற்றியோ சிந்திக்க மறுக்கிறார்கள்? என்று எண்ணவைக்கிறது.

தற்பொழுது மூன்று வழிகள் உள்ளதாக நாம் அனைவரும் எண்ணுகிறோம்.

1. காவல் துறை பரிந்துரைப்பிரகாரம் ஆக்கிரமிப்புகளை அகற்றி நெரிசல் அதிகம் உள்ள இடங்களை விரிவாக்கம் செய்தல்.

2. ஏற்கனேவே பரிந்துரைக்கப்பட்ட பேரூராட்சி நிர்வாக அதிகாரியின் மாற்றுவழிப்பாதை திட்டம்

3. ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் பெரிய நெசவு தெரு வழியாக ஒரு வழிப்பாதை.

அன்பின் சகோதரர்களே,

ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவேண்டும் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்காது. ஏன் நாம் மூன்றாவது பாய்ண்டை யோசிக்கும் முன் மீண்டும் முதல் இரு பாய்ண்டுகளையும் தீர ஆலோசனை செய்யக்கூட்டது?

சாத்தியங்கள் இருந்தால், தம்பி கிசாருடைய கருத்தயும் பரிச்சிளிக்கலாம்.

"ஒரு வேண்டுகோள்.. ஊர் மக்களுக்கு.. இத்தனை ஆண்டுகளாக எங்கள் தெரு (KTM) செய்த தியாகர்த்திர்க்கு , இந்த நன்றியாக, விசயச அந்தஸ்து வழங்க வேண்டும்..அரசி பனி மற்றும் கல்வியில் நலிவுட்டோர்க்கு தனி இடவொதுக்கீடு வழங்குவதை போல், ஊரில் எல்லா விசயங்களுக்கும் எங்கள் தெருவுக்கு அதிகம் முக்கியத்துவம் தர வேண்டும்.. நகராட்சி பனி, குடிநீர் விநியோகம், சுகாதார பணிகள், மற்றும் எல்லா வற்றிலும் அதிக பிரதிநிதுவமும், ,மற்றும் அதிக ஒதுக்கேடும் செய்ய வேண்டும்..பள்ளி admission போன்ற வற்றிலும் தியாகம் செய்த தெரு பிள்ளைகளுக்கு உடனடி சீட் தரவேண்டும்."

வஸ்ஸலாம்

தங்கள் சகோதரன்
ஹைதர் அலி


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ஒருவழிப்பாதை குறித்து நெசவு ஜமாஅத்தாரின் அறிக்கை! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:ஒருவழிப்பாதை குறித்து நெச...
posted by ஹைதர் அலி (Riyadh) [16 December 2011]
IP: 159.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 14681

அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ

பேருந்து ஏற்கனவே செல்லும் வழித்தடத்தில் வசிக்கும் இளவல்களின் கருத்துக்களில்/வாசகங்களில் தவறுகள் இருகின்றன என நாம் நினைப்பினும் அவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள முடிகிறது.

ஆனால் சில சகோதரர்களோ, வலை தளத்தில் தமது கருத்தும் பேசப்பட வேண்டும் என்ற எண்ணத்தில் உண்மை நிலை அறியாமல் அள்ளி தெளித்திருக்கின்றார்கள்.

அதே நேரத்தில் சில சகோதரர்கள் மிக நடு நிலையோடு போக்குவரத்து நெரிசலுக்கு காரணம் ஆக்கிரமிப்பு என்பதனை உணர்ந்த்வரகலாய், அவ்வாக்கிரமிப்பு அகற்றப்பட்டால் பாதை விரிவாக்கமாகும் என்றும் அல்லது ஏற்கனவே பரிந்துரைக்கப்பட்ட மாற்று வழித்தடத்தையும் பரிசீலிக்கலாமே என கருத்து பதிவு செய்திருப்பது மனிதாபிமானம் இன்னும் உயிருடன் தான் இருக்கின்றது என்பதனை எடுத்து காட்டுகிறது.

பெரும் பெரும் பிரச்சினைகள் எல்லாம் சுமூகமாக தீர்க்கப்படும் பொழுது, அனைவருக்கும் நல்ல பலன் கிடைக்க வேண்டும், அதே நேரத்தில் பிறருக்கு சிரமங்களும் முடிந்த அளவு குறைவாக இருக்க வேண்டும் என்று நாம் சிந்த்தித்தால் தீர்வு கிடைக்காதா என்ன?

ஹைதர் அலி
ரியாத்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ஒருவழிப்பாதை குறித்து நெசவு ஜமாஅத்தாரின் அறிக்கை! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:ஒருவழிப்பாதை குறித்து நெச...
posted by ஹைதர் அலி (Riyadh) [16 December 2011]
IP: 159.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 14653

அன்பிற்குரிய சகோதரர்களுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

எந்த ஒரு திட்டமும் அமுல் படுத்த யோசிக்கும்பொழுது அந்த திட்டத்தால் பாதிக்கப்படுவோம் என நினைக்கும் மக்களின் உணர்வுகளை மதித்து அவர்களுடைய கருத்தையும் அறிந்து அவர்களின் கருத்துக்களில் நியாயம் இருந்தால் அதை பரிசீலிக்கவும், இல்லையெனில் சகோதர வாஞ்சையுடன் அவர்களுக்கு விளக்குவதும் கடமையல்லவா? ஏன் மறந்து விட்டோம் ?

நாட்டில் பல திட்டங்களில் தற்பொழுது ஒரு சாரார் அதனால் தங்களுக்கு பாதிப்பு என்றும் மற்றொரு சாரார் அந்த வாதத்தில் உண்மையில்லை என்றும் கூறி, இன்று நாடே அமலிப்பட்டுக் கொண்டிருப்பது போன்ற உணர்வுகள் நம் காயல் மாநகரத்திலும் எழ வேண்டுமா?

இந்த அறிக்கையை பதிவு செய்துள்ள சகோதரர் கூறியுள்ள முக்கியமான கருத்தை லாவகமாக கண்டுக்கொள்ளாமல் ஒரு சில கருத்துக்களை மட்டும் பெரிது படுத்தி, கருத்து பதிவு செய்துள்ள சகோதரர்களே, இது உங்களுக்கு அழகு தானா ?

அப்படி அவர் என்னதான் சொல்லியிருக்கிறார்?

ஒன்று

" தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு.தீபக் டாமோர் அவர்கள், காயல்பட்டினத்தில் ஒருவழிப்பாதைக்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆறுமுகநேரி காவல்துறையை ஆய்வு செய்யக் கேட்டுக்கொண்டதின் பேரில், கடந்த 2008ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் ஆய்வு செய்யப்பட்டு வழங்கப்பட்ட ஆய்வறிக்கையில், காயல்பட்டினம் மெயின் பஜாரில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி போக்குவரத்தை சரிசெய்யலாம் என பரிந்துரை செய்துள்ளனர். இப்பரிந்துரை, 17.06.2008 தேதியில் வெளியான தினத்தந்தி நாளிதழின் நெல்லை பதிப்பில் செய்தியாக வெளிவந்துள்ளது."

காவல் துறை ஆய்வாளரே ஆய்வுக்குப்பின் சமர்பித்த அறிக்கையைத்தானே அமல் படுத்த கூறுகிறார்?

நமது நகராட்சியின் இரண்டாவது கூட்டத்தில் ஒரு உறுப்பினர் அவர்கள் மெயின் ரோட்டில் உள்ள பழுதடைந்த நிலையில் உள்ள பயணிகள் நிழற்குடை பற்றி பேசும்பொழுது நிழற்குடையின் கீழ்பக்கம் ஆக்ரமிப்பு இல்லாமலும் மேற்புறம் ஆக்கரமிக்கப்படிருப்பதாகவும், நிழற்குடையை புதுப்பிப்பதினால் ஆக்கிரமிப்புக்கு நகராட்சியே துணைபோகக்கூடாது என்று தந்து கருத்தை பதிவு செய்துள்ளாரே அது இந்த வலை தலத்திலேயே செய்தியாகவும் வந்துள்ளதே, அதை கருத்து பதிவு செய்துள்ள சகோதரர்கள் கவனிக்கவில்லை போலும்..

இரண்டு

" இந்த ஒருவழிப்பாதையை பெரிய நெசவுத்தெரு வழியாக அல்லாமல், ஏற்கனவே பலரால் அறிவுறுத்தப்பட்டபடி மாற்று வழியில் அமுல்படுத்த வேண்டுகிறோம்.

அடுத்து, 1990ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், காயல்பட்டினம் பேரூராட்சியின் நிர்வாக அதிகாரியாக இருந்த அ.மு.செய்யது முஹம்மது அவர்கள் வழங்கிய மாற்று வழிப்பாதை திட்டத்தின் ஆவணப் பரிந்துரையும் நிறைவேற்றத் தகுந்ததாகும் என்று கருதுகிறோம்.

ஆக, முற்காலங்களில் இதுபோல் அறிவுறுத்தப்பட்ட எந்தப் பரிந்துரையையும் கருத்திற்கொள்ளாமல், நமதூரிலுள்ள சில அமைப்புகள் மற்றும் ஊரின் முக்கியஸ்தர்கள் எல்லாம் சேர்ந்து, எங்களை (நெசவு ஜமாஅத்தார்களை) ஒரு பொருட்டாகக் கூட மதிக்காமல், எங்கள் பெரிய நெசவுத் தெரு வழியாக ஒருவழிப்பாதையை நடைமுறைப்படுத்தியே தீருவோம் என்று கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுவதை நாங்கள் மிகுந்த வேதனையுடன் கண்டிக்கிறோம். " என்று அவர் வேதனயுடன் பதிவு செய்துள்ள வார்த்தை (எங்களை (நெசவு ஜமாஅத்தார்களை) ஒரு பொருட்டாகக் கூட மதிக்காமல்),உங்கள் மனதி நெருடல் ஏற்படுத்ட வில்லையா?

உணர்வுகள் காயப்படுத்தப்பட்டுள்ளது உங்களுக்கு புரியவில்லையா?

காயல்பட்டினம் பேரூராட்சியே வழங்கிய மாற்று வழிப்பாதை திட்டமிருப்பதை நம்மில் எத்தனை பேர் அறிவோம்? பேருராட்சியே முன்னர் பரிந்துரைத்த அத்திட்டமிருப்பதை சகோதரர் தனது அறிக்கையில் தெரிவித்த பின்னரும் ஏன் அதன் சாதக பாதகத்தை நம்மில் ஒருவரும் சுட்டிக்காட்ட முற்படவில்லை ?

"கடந்த 19.08.2009, 11.06.2010, 27.11.2011 ஆகிய தேதிகளில், நமதூரின் சில முக்கியஸ்தர்கள் முன்னிலையில் அதிகாரிகள் ஒரு வழிப்பாதைக்கான பேருந்து போக்குவரத்து ஒத்திகையை எங்கள் பெரிய நெசவுத்தெரு வழியாக மேற்கொண்டனர். ஆனால் இதுகுறித்த எந்தவித முன்னறிவிப்பும் எங்களுக்கு (நெசவு ஜமாஅத்தாருக்கு) வரவில்லை. என்றும் 27.11.2011 அன்று, எங்கள் பெரிய நெசவுத் தெருவையும் உள்ளடக்கிய 11ஆவது வார்டின் உறுப்பினர் கூட அதில் கலந்துகொள்ளாத நிலையில், இதர உறுப்பினர்கள் பலரையும், எங்கள் பெரிய நெசவுத் தெருவைச் சாராத பொதுமக்கள் சிலரை முன்வைத்தே, திருச்செந்தூர் கோட்டாட்சியர் (சப்-கலெக்டர்) பொற்கொடி அவர்களை வைத்து ஆய்வை நடத்தி முடித்துள்ளனர்." என்றும் சகோதரர் அறிக்கையில் கூறியிருப்பது நமதூரின் ஒற்றுமைக்கு முக்கியஸ்தர்களும் நகராட்சி மன்ற உறுப்பினர்களும் எந்த அளவு முக்கியத்துவம் தருகிறார்கள் என்பதனை உணர்த்துகின்றதே.

சென்ற 2010 ஆம் ஆண்டு ஆய்வு நடக்கும் பொழுது தெரு வாசிகளிடமும் கருத்து கேட்க வேண்டுமே என்று காவல் துறை ஆய்வாளர் அவர்கள் கூறிய பொழுது அவர்களிடமெல்லாம் கேட்கத்தேவையில்லை என்று ஐக்கியபேரவையைச்சார்ந்த ஒருவர் பிரபுத்தனமாக கூறியது, ஊர் நெசவுத்தேருவை எந்த அளவுக்கு மதிக்கிறது என்று படம் பிடித்து காட்டவில்லையா?

“ஊரின் பொதுநலன் கருதி... பொதுநலன் கருதி...” என்று தொடர்ந்து கூறுபவர்கள், தங்கள் தெருவில் நடக்கும் ஒருவழிப்பாதை தங்களுக்கு தெரிவிக்கப்படாமலேயே இன்று வரை மர்மமாக நடத்தப்படுவதை அங்கீகரிக்கிறார்களா? என்றும் தங்கள் தெருவை முன்னிறுத்தி செய்யப்படும் ஒரு திட்டத்தில் தங்களை (நெசவு ஜமாஅத்தார்களை) அணுகாது, பிற தெரு மக்களைக் கொண்டு ஒருதலைப்பட்சமாக செயல்பாடுகள் இருக்கின்றன என்றும் சகோதரர் கேட்பதில் நியாயம் இல்லை என்று நினைகின்றீர்களா?

தங்கள் தெருவை ஒருவழிப்பாதையாக்கும் திட்டத்தைத் தவிர்த்து, திரு.தீபக் டமோர் உத்தரவின்படி சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வறிக்கையின் படி ஆக்கிரமிப்புகளை அகற்றியோ அல்லது 1990இல் காயல்பட்டினம் பேரூராட்சி நிர்வாக அதிகாரி அ.மு.செய்யது முஹம்மது அவர்கள் வழங்கிய மாற்று ஒருவழிப்பாதை திட்டத்தையோ பரிசீலித்து, அதன்படி செயலாற்றுமாறு அதிகாரிகளை கேட்டுக்கொள்வதுடன், இத்திட்டத்தை ஆதரிக்குமாறு ஊர் மக்களையும் அன்பொழுக கேட்டுக்கொள்கிறோம் என்று சகோதரர் வின்னப்பித்திருப்பதை திறந்த மனதுடன் ஆய்வு செய்து உணர்வுகளை மதித்து, கலந்து பேசி, ஊருக்கும் பலன் கிடைக்க வேண்டும் அதே நேரத்தில் பாதிப்புகளும் குறைவாக இருக்கவேண்டும் என்பதையும் கருத்தில் கொண்டு, நாம் எழுதும் வலைதள கருத்துக்கள் ஊரின் ஒற்றுமைக்கு பாதிப்பு ஏற்படுத்தி விடக்கூடாது என்ற உணர்வு நம் அனைவரிடமும் பிரதிபலிக்க வேண்டும் என்பதனை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

பேருந்து செல்வதால் சிரமதிற்குல்லாகியிருக்கின்றோம் என்று கூறும் சகோதரர்களின் உணர்வுகளை மதிக்கின்றோம். அதே போன்று இனி வரப்போகும் மாற்று வழிப்பாதை திட்டத்தில் அவ்விதம் ஏற்படும் சிரமங்களை முடிந்த அளவுக்கு குறைக்க, ஏற்கனவே காவல் துறை மற்றும் பேரூராட்சி அரசு அதிகாரிகளால் சமர்பிக்கப்பட்ட மாற்று திட்டங்களையும் பரிசீளிப்போம். வல்ல இறைவன் கண்டிப்பாக நமது ஊரின் ஒற்றுமைக்கு குந்தகம் வராத நல்ல முடிவை தருவான் இன்ஷா அல்லாஹ்

அன்புடன்
ஹைதர் அலி
பெரிய நெசவு தெரு
(ரியாத்)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
கருத்துக்கள்
எண்ணிக்கை
9
பக்க எண்
1/1
பக்கம் செல்ல
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved