மனமிருந்தால் மார்க்கமுண்டு! posted byMEGA (kayalpatnam)[15 September 2011] IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 8173
அன்பார்ந்த சகோதரர்களே, அஸ்ஸலாமு அலைக்கும்.
செயலாற்றக்கூடிய, ஊழலற்ற நகர்மன்றதினை உருவாக்கும் எண்ணத்தில் துவக்கப்பட்டதே MEGA . இதே நல்ல எண்ணத்தில் நகரில் பல அமைப்புகள் செயலாற்றி வருவது மிகவும் சந்தோசத்திற்கு உரிய விஷயம்.
அனைத்து அமைப்புகளும் ஒரே குறிக்கோளை மனதில் வைத்து செயல்படுகின்றன. அதில் ஒற்றுமை உள்ளது என்பது அனைவரும் காணக்கூடியது. இருப்பினும் - அந்த குறிக்கோளை எவ்வாறு அடைவது என்பதிலும் அனைத்து அமைப்புகளுக்கு இடையே ஒற்றுமை வந்தால் - MEGA இன்ஷா அல்லாஹ் ஒரே குடையின் கீழ் செயல்பட தயங்காது என்பதனை தெரிவித்துக்கொள்கிறோம்.
வரும் நகர்மன்ற தேர்தல் என்பது மூன்று தேர்தல்களை உள்ளடக்கியது. இதில் 18 வார்டு உறுப்பினர்களின் தேர்வில், ஏறத்தாழ அனைத்து அமைப்புகளும் ஒரே கருத்தில் உள்ளன. அல்ஹம்துலில்லாஹ்.
ஆனால் துணைத்தலைவர் தேர்வு விசயத்தில் பிற அமைப்புகளின் நிலைப்பாடு தெரியவில்லை.
அதுபோல தலைவர் தேர்வு விசயத்தில் - காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்கிய பேரவை சார்பாக வெளியிடப்பட்டுள்ள திட்டத்தில் (தேர்தல் குழுவில் ஐக்கிய பேரவை தேர்ந்தெடுக்கும் 25 பேருக்கு பிரதிநிதித்துவம் மற்றும் , பொது சங்கங்கள் என்பதற்கான வரைமுறை/அளவுகோள்) MEGA விற்கு உடன்பாடு இல்லை. இது ஐக்கிய பேரவைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அத்திட்டத்தினை மறு பரிசீலனை செய்யும்படியும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
துணைத்தலைவர் மற்றும் தலைவர் தேர்வு விசயத்தில் - சிறந்த முறையினை ஒருவேளை ஐக்கியப் பேரவை அறிவிக்கும் பட்சத்தில், அவர்களுடன் இணைந்து செயலாற்றுவதில் MEGA விற்கு எந்தத் தயக்கமும் இல்லை.
நன்றி நண்பர்களே! posted byMEGA (kayalpatnam)[11 September 2011] IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 7951
கத்தர் காயல்நல மன்றத்தின் 42 வது செயற்குழு கூட்டத்தில் MEGA வின் தன்னலமற்ற பணியைப் பாராட்டியும்,நல்லதோர் நகர்மன்றம் அமைவதற்கான MEGA வின் முயற்சிகளுக்கு தார்மீக ஆதரவு அளிப்பதாகவும்,மகத்தானதொரு தீர்மானத்தை நிறைவேற்றி இருப்பது,எங்களுக்கும்,நகர மக்களுக்கும், நல்ல செய்தி மாத்திரமல்ல! எங்களது பணியை இன்னமும் வேகமாகத் தொடர ஆக்கமும்,ஊக்கமும் அளிப்பதாக அமைந்திருக்கிறது. அதற்காக
MEGA, கத்தர் மன்றத்திற்கு,தனது நெஞ்சம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.
மக்களுக்கான சேவையில் ஒரு முன்மாதிரியாகத் திகழும், கத்தர் நல மன்றம், தொடர்ந்து தொய்வின்றி, நகர மக்களுக்கு சிறப்பாகப் பணியாற்ற துஆ செய்து, இம்மாதம் 25 ஆம் தேதி,ஹாங்காங் பேரவையுடன் இணைந்து நீங்கள் நடத்தவிருக்கும் புற்றுநோய் பரிசோதனை முகாம், வல்ல
இறைவனின் அருளால் ,வெற்றிபெற வாழ்த்தி மகிழ்கின்றோம்.
மற்றொரு தீர்மானத்தில்,ஐக்கியப்பேரவை MEGA விற்கு, ஐந்து பிரதிநிதிகளை வழங்கி, ஒருங்கிணைந்த தேர்தல் கண்காணிப்புக் குழு அமைக்க வேண்டும் என்ற தங்களது நல்லெண்ணத்தை நாங்கள் மதிக்கிறோம். அதே நேரத்தில்,MEGA எந்தவிதத்திலும் ஒரு அதிகார மையமாக மாற விரும்பாததாலும்,எங்களது பணி நகர மக்களிடையே சிறந்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், ஜமாஅத் அங்கீகாரம் பெற்றவர்கள் உறுப்பினர்கள் ஆகவும், தனிநபர் ஆதிக்கம் இல்லாமல், மக்களே தாங்கள் விரும்பும் நல்ல தலைவரை தேர்ந்தெடுக்கும் ஜனநாயக உரிமையை பாதுகாக்க
பணியாற்றுவது மாத்திரமேயாகும்.
ஆதலால், எந்தவித சிறப்பு உரிமையும் எங்களுக்குத் தேவையில்லை என்பதையும் பணிவன்போடு தெரிவிக்கிறோம்.மீண்டும் ஒருமுறை தங்களது
ஆதரவுக்கு நன்றி தெரிவித்து மகிழ்கிறோம்.
வாழ்த்துக்கள்! பாராட்டுக்கள்! posted byMEGA (kayalpatnam)[10 September 2011] IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 7877
பத்துதினங்களுக்கு முன் எமது துணை ஒருங்கிணைப்பாளர்
அவர்கள், கோமான் தெரு ஜமாஅத்தின் மதிப்பிற்குரிய
நிர்வாகிகளை சந்தித்து, தங்களுக்கான வேட்பாளரை ஜமாஅத்
மூலமாக தேர்ந்தெடுக்க வேண்டியதின் அவசியத்தை
வலியுறுத்திச் சொன்னபோது, அதனை வரவேற்றதோடு
மாத்திரம் அல்லாமல் விரைவில் ஆவண செய்வதாகவும்
உறுதி அளித்தனர். அந்த உறுதியை ஹாஜி.லுக்மான்
அவர்களைத் தேர்ந்தெடுத்ததின் மூலம் செயல்படுத்தியும்
இருக்கின்றார்கள்.
MEGA வின் செயல்பாட்டுக்கும்,திட்டத்திற்கும்
முதல் ஜமாஅத்தாக அங்கீகாரம் வழங்கிய மரியாதைக்கும்,
கண்ணியத்திற்கும் உரிய கோமான் ஜமாஅத்தின் பெரியவர்கள், இளைஞர்கள் மற்றும் அனைத்து உறுப்பினர்களுக்கும் எமது நெஞ்சார்ந்த நன்றியையும்
வாழ்த்துக்களையும் உரித்தாக்குகிறோம்.
ஜமாஅத் சார்பாக
அறிவிக்கப்பட்டுள்ள லுக்மான் அவர்களை MEGA வாழ்த்தி
மகிழ்கிறது.இலக்கை நோக்கிய எங்களது பயணம்
இறையருளால் இனிதே தொடர்கிறது.
Re:ரெட் ஸ்டார் சங்கத்தில் நக... posted byMEGA (DUBAI)[04 September 2011] IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 7668
அஸ்ஸலாமுஅலைக்கும்!
ரெட்ஸ்டார் சங்கத்தின் வரலாற்று சிறப்பு மிக்க கூட்டம்
போற்றுதலுக்கும், பாராட்டுதலுக்கும் உரியது. சகோதரர்
சாஜித் அவர்கள் குறிப்பிட்டதைப் போல, பெரும்பான்மை
மாத்திரம்தான் ஜனநாயகம் என்ற நிலைமாறி, தகுதி
உடையவர்களை பெரும்பான்மை மக்கள் ஆதரிப்பதுதான்
உண்மையான ஜனநாயகம்.
MEGA எந்தக்கருத்தை முன்வைத்து பயணத்தை துவங்கியதோ,அதன் சரியான நடைமுறை எடுத்துக்காட்டுதான் ரெட்ஸ்டார் சங்கத்தின் மகத்தான கூட்டம். சரியான, தகுதியான நபரை ஜமாஅத்களே தேர்வு செய்து, பெரும்பான்மை மக்களின் விருப்பத்திற்கேற்ப,
நல்லொதொரு உட்கட்டமைப்புடன் தேர்தலில் நிறுத்தி,
வெற்றிபெறச் செய்யும் இந்த முயற்சி, ஆரோக்கியமான நகர்
மன்றம் அமைந்திட அஸ்திவாரமாக அமையும். ரெட் ஸ்டார்
சகோதரர்களுக்கு மெகா தனது நன்றிகலந்த வாழ்த்தினை
உரித்தாக்குகிறது.
நன்மைகள் விளையட்டும்! posted bykavimagan--MEGA (dubai)[29 August 2011] IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 7439
இறைவனுக்காகப் பசித்திருந்தோம். இன்னும் பல்வேறு நல்லமல்களை அவனுக்காகவே செய்தோம். அதனை நல்ல முறையில் நிறைவு செய்து,ஈத் அல் பித்ர் என்னும், புனிதத்
திருநாளை கொண்டாடி மகிழும் அனைத்து காயலர்களுக்கும்
MEGA வின் நெஞ்சார்ந்த பெருநாள் வாழ்த்துக்கள். பகைமையும்,
கயமையும் அழிந்து, நன்மையையும், வளமையும் பெருக,
நல்லதோர் நகர்மன்றம் அமைந்து, நகரமக்கள் நிம்மதியுடன்
வாழ MEGA துஆ செய்து வாழ்த்துகிறது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross