அது சரி.. posted byRabiya Suaib (Kayalpatnam.)[13 July 2013] IP: 61.*.*.* India | Comment Reference Number: 28634
அது சரி, பஜ்ஜி போட பட்டாணி மாவும் பள்ளாரியும் வாங்கிட்டு வாங்கன்னு உங்களை பஜாருக்கு அனுப்புனா இப்படி ஊரை சுத்திட்டு மஃரிப் பாங்கு சொல்லுறதுக்கு அஞ்சு நிமிஷத்துக்கு முன்னாடி அதான் வீட்டுக்கு வந்தீங்களோ? இருங்க இனி உங்க காமிராவை எடுத்து ஒளிச்சு வச்சாத்தான் சரிப்படுவீங்க.
சூஃபி பெரியப்பா ஓமன்லெ நோன்பு எப்படி போவுது? உங்க உடல்நிலை எப்படி இருக்கின்றது உங்க கமண்ட் பார்த்து சந்தோஷம் மருமகன் மேலெ இருந்த கோபமெல்லாம் பறந்து போயிடுச்சு.
காயல் தமிழ் பேசலாம்...வாங்க... posted byRabiya Suaib (kayalpatnam.)[11 July 2012] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 20823
ஜான்ஸ்-(வரவேற்ப்பறை) இதன் விளக்கம். நமதூர் இஸ்லாமிய கலாச்சாரத்தின் அடிப்படியில் விளங்கி வருவதால் நம் முன்னோர்கள் வைத்த பெயர் தான் ஜென்ஸ் ரூம் (ஆண்களுக்காக தனியறை) என்பது. அதுவே காலப்போக்கில் மருவி ஜான்ஸ் ரூம் என்றாகி விட்டது.
குறிப்பாக ஜான்ஸ் உள்ள வீடுகளில் மாடிப்படியும் இருக்கும்.உள் அறை அல்லது திண்னையிலிருந்தும் மாடிக்குப் போக ஏணிப்படிகள் இருக்கும்.காரணம் மருமகனை அல்லது வீட்டிலுள்ள ஆண்களை பிற ஆடவர்கள் சந்திக்க வரும் போது அது பெண்களுக்கு எவ்விதத்திலும் இடைஞ்சல் ஏற்படாமல் இருப்பதற்காவே திட்டமிட்டு அமைக்கப்பட்டிருக்கும். நம் பெரியோர்களின் எண்ணமும், செயலும் எப்போதும் நம் சமுதாயத்தின் நன்மைக்காவே அமைந்திருந்தது.
Re:சீரியல் கில்லர்!... posted byRabiya Shuaib (Kayalpatinam)[29 April 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 20745
அருமையான மற்றும் உண்மையைச் சொல்லும் கட்டுரை! இன்றைய இளம் பெண்கள் எல்லோரும் மக்ரிப் தொழுது முடித்ததும் சீரியல் மற்றும் ரியாலிடி ஷோ பார்க்க தொலைக்காட்சி முன் அமர்ந்து விடுகின்றனர். அதன் பின் இஷா தொழுவதற்க்கு இரவு பதினோரு மணி ஆகி விடுகின்றது. இன்னும் சில பெண்கள் தொழாமலே தன் நேரங்களை எல்லாம் தொலைக்காட்சியிலே கடத்தி விடுகின்றனர். கட்டுரையாளரின் உண்மையான கருத்துக்கள் நிச்சியமாக ஒரு சில பெண்களையாவது மாற்றும்.........
ஒரு செல் ஊசலாடிக் கொண்டே தான் இருக்கின்றது... posted byRabiya Shuaib (Kayalpatinam)[18 April 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 21017
கலாச்சாரம் சீரழிந்து கொண்டிருக்கும் போது இது மாதிரியான எத்தனை கட்டுரைகள் வந்தாலும் அலுப்பு ஏற்படுவது இல்லை. கேள்விப்பட்ட விஷயமாகவே இருந்தாலும் ஒவ்வொரு தடவை படிக்கும் போதும் புதிதாக பயம் ஏற்படுகின்றது. அவ்விதமான பயத்தை இக்கட்டுரையை படிக்கும் போது உணர்ந்தேன். எனக்கு ஏற்பட்ட பயம் தான் இக்கட்டுரையாளரின் வெற்றி. இதே பயத்தை எல்லோர் மனதிலும் விதைக்க வேண்டும் என்பது தான் அவருடைய நோக்கம். இந்த நொடி வரை நடந்துக் கொண்டிருக்கும் சீரழிவு என்பதால் இதில் பழையது கழிவதற்க்கு இடமில்லை.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross